Search This Blog

Thursday, January 9, 2014

Pongal

#பொங்கல் : வெறும் அரிசி பருப்புதானே இதில் என்ன சுவை என நினைப்பவர்கள் உண்டு. தேவையான பொருட்களை சேர்த்து சரியான பதத்தில் செய்யும் போது அதன் சுவை தேவார்மிதமாக இருக்கும். முன்பே சிறு தானிய வகைகளான வரகரிசி, சாமை அரிசி, பாப்பரை  மற்றும் உடைத்த கோதுமை  ( கோதுமை ரவா ) கொண்டு எவ்வாறு பொங்கல் செய்யலாம் என பார்த்தோம். இப்போது அசல் பொங்கல் எப்படி செய்வது என பாப்போம்.

பொங்கல் நெல்லிக்காய் துவையலுடன் 

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                         பச்சரிசி
1/4 கப்                                         பச்சை பருப்பு
பச்சை மிளகாய்                           : 1 அ 2 ( விருப்பப்பட்டால் )
சீரகம்                                              : 1 1/2 Tsp
மிளகு                                              : 1 Tsp
மிளகுத்தூள்                                   : 1 Tsp
கருவேப்பிலை                               : 10 - 15
பூண்டு பல்                                       : 3
இஞ்சி பொடியாக அறிந்தது     : 1 Tsp ( விருப்பப்பட்டால் )
மஞ்சத்தூள்                                     : 3 சிட்டிகை
உப்பு                                                  : 1 Tsp ( அட்ஜஸ்ட் )

தாளிக்க :
சீரகம்                                                          : 1 Tsp
மிளகு                                                         : 1 Tsp
கருவேப்பிலை                                         : 8
முந்திரி பருப்பு                                         : 5
நெய்                                                           : 2 Tsp

செய்முறை :
இது மிக மிக சுலபமான முறை. அரை மணி நேரத்தில் பொங்கல் மற்றும் அதற்கு தேவையான சட்னி செய்து விடலாம்.
அரிசி, பருப்பு அளந்து எடுத்துக் கொள்ளவும்.

அரிசியுடன்  பருப்பையும் நன்றாக கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ளவும்.


மற்ற பொருட்களையும் சேர்க்கவும்.


4 கப் தண்ணீர்ஊற்றவும்.
 ஒரு கரண்டியினால் கலக்கி விடவும்.
குக்கரை மூடி வெயிட்டை பொருத்தவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.


எண்ணெய்  சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் துண்டுகள் மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.


வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான பொங்கல் தயார்.

பொங்கல்


பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு பொங்கல் துவையல் அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
செய்தவுடன் சாப்பிட்டால்தான் பொங்கலின் சுவை அருமையாக இருக்கும்.
தாராளமாக நெய் விட்டு சாப்பிட்டால் இன்னும் அருமை!!....

குறிப்பு : சிற்றுண்டி சாலை மற்றும் கல்யாண வீடுகளில் செய்யும் போது நிறைய டால்டா கொண்டு மிளகு சீரகம் போன்றவற்றை வறுத்து  கொட்டி கிண்டுவார்கள். ஆனால் வீட்டில் செய்யும் போது 2 அ 3 தேக்கரண்டி நெய்யில் வறுத்து எடுப்பதால் உடலுக்கு நல்லது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நெய்யை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment