Search This Blog

Monday, March 14, 2016

Mint Dip

#புதினாடிப்   #புதினாதொட்டுக்க : காரமும் சிறிது புளிப்பும் புதினாவின் மணமும் கொண்ட அருமையான சட்னி என சொல்லலாம் இந்த புதினா டிப்.
இது தந்தூரி உணவு வகைகள் மற்றும் இளைய சோள வறுவல் போன்றவற்றிற்கு தொட்டுக்க உணவகங்களில் கொடுக்கப்படும். தயாரிப்பது மிக மிக எளிது.
புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் புதியதாக இருந்தால் மிக மிக வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். இதற்கு எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் புளிப்பில்லாமல் இருந்தால் அருமையாக இருக்கும். கொத்தமல்லி தழை மட்டுமல்லாமல் தண்டு பகுதிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அடுப்பே பயன் படுத்தாமல் செய்யக்கூடிய சமையல் இந்த சட்னி!!

 புதினா டிப் எவ்வாறு செய்யலாம் என இங்கு காண்போம். 

Mint Dip


தேவையான பொருட்கள்:
1/2 கப்புதினா இலைகள்
1/2 கப்கொத்தமல்லி தழை
6 - 8பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
2 - 3பூண்டு பற்கள்
2 Tspபொட்டுக்கடலை [ வறு கடலை ]
3/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1 - 1 1/2 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
1/4 கப்கெட்டித்தயிர்

செய்முறை :
புதினா மற்றும் கொத்தமல்லியை இரண்டு மூன்று முறை சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்கவும்.
தயிர் நீங்கலாக மற்ற அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தயிரை கரண்டியால் அடித்து கலக்கவும்.
பிறகு கடைசியாக மிக்ஸியில் அரைத்த விழுதுடன் சேர்த்து ஒரு நிமிடம் மிக்ஸியை ஓட விடவும்.
உப்பு மற்றும் புளிப்பு சரிபார்க்கவும்.
தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாறின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
அரைத்ததை பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

பஜ்ஜி, சோள வறுவல், காளிப்ளவர் வறுவல், வடை போன்ற வறுத்த உணவு வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.



Mint Dip







மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்த்து சுவைக்க

  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.


வல்லாரை சட்னி பொடுதலை துவையல் கரிசலாங்கண்ணி துவையல்
இஞ்சி துவையல் பொங்கல் துவையல்

இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment