#சோளகஞ்சி : இந்தியாவில் மிக அதிகமாக விளைவிக்கப்படும் சிறு தானியங்களில் #சோளம் ஒன்றாகும். இது ஆங்கிலத்தில் #Sorghum என அழைக்கப்படுகிறது.
சோளத்தில் இரும்பு, கால்சியம், ஆகிய தாதுக்களும் தயமின், பி கரோட்டின் மற்றும் ரிபோப்ளவின் போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளன.
மேலும் அறிய
சிறு தானியங்கள்
முழு சோள தானியம் மற்றும் சோள மாவு உபயோகப்படுத்தி செய்யப்படும் சமையல் செய்முறைகளை இதுவரை பார்த்திருக்கிறோம்.
இங்கு உடைத்த சோளம் [ சோள ரவா ] உபயோகப் படுத்தி கஞ்சி செய்வது எப்படி என பார்ப்போம்.
செய்முறை :

தேவையான பொருட்கள் : | |
---|---|
1/4 கப் | சோளம் உடைத்தது [ சோள ரவா ] |
1/2 கப் | பால் |
1/2 கப் | தயிர் கடைந்தது |
1/2 Tsp | உப்பு |
1/8 Tsp | ஓமம் |
1/8 Tsp | பெருங்கயத்தூள் |
1/4 Tsp | கடுகு |
5 - 6 | கருவேப்பிலை |
1/2 Tsp | எண்ணெய் |
செய்முறை :
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் தண்ணீர் விட்டு உடைத்த சோளத்தை சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.

சில நிமிடங்களில் கஞ்சி பதத்தை அடைந்து விடும்.
மேலும் சில நிமிடங்கள் சோளம் நன்கு மலர்ந்து வேகும் வரை மிக சிறிய தீயில் கொதிக்க விட்டு உப்பு சேர்த்து இறக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து பால் கலந்து மேலே ஓமம் தூவி சூடாக பருகலாம்.
அல்லது
தயாரித்த கஞ்சியை ஆற வைத்து தயிர் ஊற்றி கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காய தூள் மற்றும் கறுவேப்பிலை தாளித்து கொட்டியும் பருகலாம்.
விருப்பமான துவையல் அல்லது ஊறுகாய் தொட்டுக்கொண்டு சுவைக்கலாம்.

ஆஹா, அற்புதமான கஞ்சி.
ReplyDelete