Search This Blog

Saturday, April 16, 2016

Venthayakeerai-Besan-Dosai

#வெந்தயக்கீரைகடலைமாவுதோசை : #கீரை வகைகளை சமைத்தாலே பெரும்பாலும் வேண்டா வெறுப்பாகவே பலர் உண்ணுவார்கள். அதிலும் #வெந்தயக்கீரை சிறிது கசப்பு சுவையுடையதா?! கேட்கவே வேண்டாம். எல்லோரும் சாப்பிடத் தயங்குவார்கள். 
நாமும் பொதுவாக கீரை என்றாலே கூட்டு தான் செய்வது வழக்கம். எல்லோரும் விரும்பும் வகையில் வெந்தயக்கீரையின் சுவையை சிறிது மட்டுப் படுத்தி பலகாரம் செய்தால் அனைவரும் முகம் சுளிக்காமல் சாப்பிடுவார்கள். 
இதனை மனதில் கொண்டு கடலை மாவு, கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக தண்ணீர் விட்டு தோசை மாவு தயாரித்து கீரையுடன் தோசை சுட்டெடுத்தேன். சுவையோ அபாரம்! கீரையின் கசப்பு சிறிதும் தெரியவில்லை!
இனி எப்படி என காணலாம்.

6 முதல் 8 தோசை வரை தயாரிக்கலாம் 



தேவையான பொருட்கள் :
மாவு தயாரிக்க :
1/2 கப்கடலை மாவு [ Besan ]
1/4 கப்கோதுமை மாவு
1/8 கப்அரிசி மாவு
1/4 கப்தயிர்
3/4 Tspஉப்பு [ adjust ]
1/2 Tspசீரகம்
1/4 Tspமிளகு நுணுக்கியது
மாவில் சேர்க்க :
1 சிறியது வெங்காயம், நறுக்கவும்
6 - 8கறுவேப்பிலை, கிள்ளி வைக்கவும்
1/2 cupவெந்தயக்கீரை பொடியாக நறுக்கியது
1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும் [ optional ]

தோசை சுட்டெடுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தயிர் ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு அடித்து கலக்கவும்.
பிறகு மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
அரை மணி நேரம் மூடி வைத்திருக்கவும்.

அரை மணி நேரம் கழித்து மாவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயின் மேல் வைத்து சூடாக்கவும்.
போதுமான சூடேறியதும் எண்ணெய் விட்டு தோசையை முதலில் சுற்றி வட்டமாக ஊற்றி நடுவே நிரப்பவும்.
தோசையின் மேல் சில துளிகள் எண்ணெய் தெளிக்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போடவும்.
இரண்டு பக்கமும் வெந்தவுடன் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
மீண்டும் தோசை கல்லில் எண்ணெய் விட்டு அடுத்த தோசையை ஊற்றவும்.
இதேபோல ஒவ்வொருதோசை யாக சுட்டெடுக்கவும்.

சுவையும் வெந்தயக்கீரையின் மனமும் நிறைந்த தோசை தயார்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி 

அல்லது சாம்பார் ஏதேனும் 

ஒன்றை தொட்டுக்க வைக்கலாம்.






மேலும் சில சமையல் குறிப்புகள்
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
வெந்தய குழம்பு மணத்தக்காளி கீரை பால் சாறு முடக்கத்தான் கீரை தோசை
காளான் பாலக் சூப் காரிசலாங்கண்ணி துவையல்




இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment