Search This Blog

Thursday, January 29, 2015

Vengayam-Thakkali-Chutney

#வெங்காயம்தக்காளிசட்னி : #வெங்காயம் மற்றும் #தக்காளி யை வதக்கி வறுத்த உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயுடன் சேர்த்து அரைத்து எடுத்தால் அருமையான சட்னி தயார். வெங்காயத்தின் இனிப்பு சுவையும் மணமும் இந்த சட்னியின் ருசியை மேலும் சுவையுடையதாக ஆக்குகிறது.
சென்ற பதிவில் கார சாரமான பூண்டு தக்காளி சட்னியின் செய்முறையை பார்த்தோம்.
இனி வெங்காயம் தக்காளி சட்னியை எவ்வாறு செய்வது என காணலாம்.

வெங்காயம் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள் :
2தக்காளி
2வெங்காயம், பெரிய அளவு
4சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
2 Tspஉளுத்தம் பருப்பு
துண்டு சிறியது பெருங்காயம்
2 அ 3பூண்டு பற்கள்
கோலிகுண்டுஅளவுபுளி
1 1/2 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காயத்தூள்
10கறுவேப்பிலை
2 Tspஎண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு சூடானதும் சிகப்பு மிளகாயையும் பெருங்காயத்தையும்  சிவக்க வறுத்து எடுக்கவும்.
அடுத்து உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.


அதே வாணலியில் மேலும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி எடுக்கவும். நன்கு வாசனை வரும் வரை வதக்கி எடுக்கவும்.
அடுத்து அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு தக்காளியை வதக்கவும்.
மிருதுவாகவும் வேகும் வரையிலும் வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் ஆற வைக்கவும்.


இவையனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியை எண்ணெயுடன் சூடாக்கி கடுகு சேர்த்து வெடித்த பின்னர் கறுவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கிண்ணத்தில் உள்ள சட்னியின் மேலே கொட்டவும்.
கலந்து பரிமாறவும்.

வெங்காயம் தக்காளி சட்னி

இட்லிதோசை, மற்றும் ஆப்பம் போன்ற உணவு வகைகளுடன் ருசிக்க அருமையாக இருக்கும்.





சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி கறுவேப்பிலை பூண்டுமிளகாய்சட்னி பூண்டு தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னி நெல்லிக்காய் புதினா துவையல்







இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment