Search This Blog

Showing posts with label madras rasam powder. Show all posts
Showing posts with label madras rasam powder. Show all posts

Tuesday, December 10, 2013

Madras Rasam Powder

#மதராஸ்ரசப்பொடி : #ரசம் என்பது மல்லி, மிளகு, சீரகம், மிளகாய் ஆகியவற்றை பொடியாக்கி பருப்பு தண்ணீர் மற்றும்  புளி கலந்து கொதிக்க வைத்து செய்யப்படுவதாகும். ரசம் செய்யும் போது அதனுடன் சேர்க்க வேண்டிய பொருட்களை அவ்வப்போது அரைத்து சேர்த்தால் மிக மிக வாசனையாக இருக்கும். ஆனால் பருப்பு தண்ணீர் அவசியம் தேவை.
அதனால் துவரம் பருப்பை மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும். பருப்பை வேக வைத்து பருப்பு தண்ணீர் தயாரிக்க தேவையில்லை.
ஒரு மாதத்திற்கு தேவையான ரசப் பொடியை தயாரித்து வைத்து கொள்ளலாம். எப்படி என பார்ப்போம்.

மதராஸ் ரசப் பொடி

தேவையான பொருட்கள் :


10                                              : சிவப்பு மிளகாய்
1 கப்                                         : துவரம் பருப்பு
1/2 கப்                                      : மல்லி விதை ( தனியா )
1/4 கப்                                      : மிளகு
1/4 கப்                                      : சீரகம்

செய்முறை :

வெறும் வாணலியில் முதலில் மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
கை விடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்து நன்கு ஆற விடவும்.
ஆறியபின் மிக்ஸ்யில் பொடித்து எடுக்கவும்.
ஒரு உலர்ந்த சுத்தமான பாட்டிலில் எடுத்து பத்திரபடுத்தவும்.

காய வைத்த கருவேப்பிலை பொடி இருந்தால் 2 தேக்கரண்டி சேர்த்து கலக்கி வைக்கவும்.

மதராஸ் ரசப் பொடி








மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மிளகுப் பொடி
மிளகுப்
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி





Sunday, November 24, 2013

Tomato Rasam

தக்காளி ரசம் : தமிழர்களின் மதிய உணவில் ரசம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரசம் புளிப்பும் காரமும் கூடிய தினமும் பயன் படுத்தும் பல மசாலா பொருட்களின் கஷாயமாகும். கஷாயம் என்றதும் பயப்பட வேண்டாம். சுவையான திரவ ரசமாகும். இங்கு தக்காளியை கொண்டு ரசம் எப்படி செய்வது என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :

நாட்டு தக்காளி                              : 2
மதராஸ் ரசம் பொடி                    : 2 Tsp 
பச்சை மிளகாய்                             : 1 அ 2
மஞ்சள் தூள்                                    : 1 சிட்டிகை 
உப்பு                                                     : 2 Tsp ( அட்ஜஸ்ட் )

அரைக்க :

மிளகு                                                  : 1/2 Tsp 
சீரகம்                                                   : 1/2 Tsp 
பூண்டு பல்                                         : 2
இஞ்சி                                                   : 1 சிறு துண்டு 
கருவேப்பிலை                                : 20 இலைகள் 

தாளிக்க :

கடுகு                                                    : 1/2 Tsp 
சீரகம்                                                    : 1/2 Tsp 
பெருங்காயம்                                    : சிறிய துண்டு 
கருவேப்பிலை                                 : 8
எண்ணெய்                                          : 1 Tsp 

செய்முறை :
முதலில் அரைக்க வேண்டியவற்றை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.


அதனுடன் தக்காளியையும் வெட்டிப்போட்டு அரைத்து சாறாக்கிக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் மதராஸ் ரசம் பொடி, மஞ்சத்தூள், உப்பு மற்றும் நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் எடுத்துக் கொள்ளவும்.


அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு அரைத்த மிக்ஸ்சி பத்திரத்தை கழுவி பத்திரத்தில் சேர்க்கவும்.
மீண்டும் ஒரு அரை கப் தண்ணீரையும் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
ரசத்தின் மேல நுரையாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.


புளிப்பு குறைவாக இருந்தால் இப்போது எலுமிச்சை சாரை சேர்க்கலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகை வெடிக்க விடவும். பிறகு சீரகம், பெருங்காயம் மற்றுன் கருவேப்பிலை தாளித்து தயாரித்த ரசத்தின் மேல் கொட்டவும்.
சூடு சிறுது தணிந்த பின் அல்லது பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

சுவையான தக்காளி ரசம் தயார்.


சூடான சாதத்தில் போட்டு நன்கு பிசைந்து விருப்பமான துவட்டல்/கறியுடன் சாப்பிடவும்.