தக்காளி ரசம் : தமிழர்களின் மதிய உணவில் ரசம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ரசம் புளிப்பும் காரமும் கூடிய தினமும் பயன் படுத்தும் பல மசாலா பொருட்களின் கஷாயமாகும். கஷாயம் என்றதும் பயப்பட வேண்டாம். சுவையான திரவ ரசமாகும். இங்கு தக்காளியை கொண்டு ரசம் எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
நாட்டு தக்காளி : 2
மதராஸ் ரசம் பொடி : 2 Tsp
பச்சை மிளகாய் : 1 அ 2
மஞ்சள் தூள் : 1 சிட்டிகை
உப்பு : 2 Tsp ( அட்ஜஸ்ட் )
அரைக்க :
மிளகு : 1/2 Tsp
சீரகம் : 1/2 Tsp
பூண்டு பல் : 2
இஞ்சி : 1 சிறு துண்டு
கருவேப்பிலை : 20 இலைகள்
தாளிக்க :
கடுகு : 1/2 Tsp
சீரகம் : 1/2 Tsp
பெருங்காயம் : சிறிய துண்டு
கருவேப்பிலை : 8
எண்ணெய் : 1 Tsp
செய்முறை :
முதலில் அரைக்க வேண்டியவற்றை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் தக்காளியையும் வெட்டிப்போட்டு அரைத்து சாறாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மதராஸ் ரசம் பொடி, மஞ்சத்தூள், உப்பு மற்றும் நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் எடுத்துக் கொள்ளவும்.
அதில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு அரைத்த மிக்ஸ்சி பத்திரத்தை கழுவி பத்திரத்தில் சேர்க்கவும்.
மீண்டும் ஒரு அரை கப் தண்ணீரையும் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
ரசத்தின் மேல நுரையாக வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
புளிப்பு குறைவாக இருந்தால் இப்போது எலுமிச்சை சாரை சேர்க்கலாம்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகை வெடிக்க விடவும். பிறகு சீரகம், பெருங்காயம் மற்றுன் கருவேப்பிலை தாளித்து தயாரித்த ரசத்தின் மேல் கொட்டவும்.
சூடு சிறுது தணிந்த பின் அல்லது பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான தக்காளி ரசம் தயார்.
சூடான சாதத்தில் போட்டு நன்கு பிசைந்து விருப்பமான துவட்டல்/கறியுடன் சாப்பிடவும்.
No comments:
Post a Comment