Search This Blog

Monday, December 2, 2013

Pepper Powder

 #மிளகுப்பொடி : இந்த பொடியை தயாரித்து வைத்துக் கொண்டால் தினந்தோறும் சமையலுக்கு உபயோகமாக இருக்கும். அதிகமாக அரைத்து வைத்துக் கொள்ள கூடாது. ஏனெனில் நாளாக நாளாக பொடியின் காரமும் மணமும் குறைந்து கொண்டே வரும்.

மிளகுப்பொடி

தேவையான பொருட்கள் :
மிளகு                                      : 1 Tbsp
சீரகம்                                       : 1 Tbsp
கருவேப்பிலை பொடி      : 1 tsp


செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் இல்லாமல் மிளகை முதலில் சூடு வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு அதே வாணலியில் சீரகத்தையும் சூடு வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
சூடு தணிந்ததும் மிக்ஸ்யில் பொடித்துக் கொள்ளவும்.
அதனுடன் கருவேப்பிலை பொடியை நன்கு கலக்கவும்.
ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்து மூடி வைக்கவும்.
தேவை படும் போது ஈரமில்லாத தேக்கரண் டியால் எடுத்து பயன் படுத்தவும்.
உப்பும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

மிளகுப்பொடி

மிளகுபொடியை சூடான சாதத்தில் கலந்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவையும் மணமும் இதமான காரத்துடன் அருமையாக இருக்கும்.

சாதத்துக்கு போட்டுக்கொள்ள பருப்பு தயார் செய்யும் போது உப்பு மட்டுமல்லாமல் மிளகு பொடியையும் கலந்து விட்டால் மிக நன்றாக இருக்கும்.

ரசம் தயாரித்து முடித்தவுடன் 1/4 Tsp மிளகு பொடியை தூவினால், ரசத்தின் மணம் மிக மிக அருமையாக இருக்கும்.


கூட்டு செய்யும் போதும் தேங்காய் அரைத்து சேர்க்கும் போது மிளகு பொடியை 2 அல்லது 3 சிட்டிகை போட்டு கொதிக்க வைத்தால் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்.

ரவா தோசை மாவில் 1 Tsp மிளகுப்பொடியை கலக்கி தோசை ஊற்றினால் சுவை நன்றாக இருக்கும்.






மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி



No comments:

Post a Comment