Search This Blog

Showing posts with label vallarai chutney. Show all posts
Showing posts with label vallarai chutney. Show all posts

Thursday, March 12, 2015

Vallarai-Paruppu-Thuvaiyal

#வல்லாரைபருப்புத்துவையல் : #வல்லாரைகீரை நீர்நிலைகளின் அருகே அதிகமாக வளர கூடிய ஒரு கொடியாகும். வல்லாரை நினைவாற்றலை மேம்படுதவல்லது. முந்தைய பதிவுகளில் இக்கீரையை கொண்டு துவையல் செய்யும் முறையை அறிந்து கொண்டோம். இங்கு இக்கீரையை சேர்த்து பருப்பு துவையல் செய்வது எப்படி என காண்போம்.

Vallarai Paruppu Thuvaiyal

தேவையான பொருட்கள் :
20 - 25வல்லாரை இலைகள்
3 Tbspதேங்காய் துருவல்
3 Tbspதுவரம் பருப்பு
2 or 3சிகப்பு மிளகாய்
5 - 6 பற்கள்பூண்டு
1 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]
3/4 Tspஉப்பு [ adjust ]
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.
அடுத்து துவரம் பருப்பை சேர்த்து கை விடாமல் திராவி சிவக்க வறுக்கவும்.
தனியே தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கழுவி சுத்தம் செய்த கீரையை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்.
வதக்கிய கீரையையும் தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் மற்ற பொருட்களையும் சேர்த்து முதலில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

Vallarai Paruppu Thuvaiyal
சூடான சாதத்தில் துவையலை சேர்த்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து புளிச்சாறு அல்லது வத்த குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால்... ஆஹ்... ஆஹா அலாதியான சுவைதான்.





மேலும் முயற்சி செய்ய 

சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கம்பு முறுக்கு
கம்பு முறுக்கு








Tuesday, February 10, 2015

Vallarai-Chutney 1

#வல்லாரைசட்னி 1 : #வல்லாரை யை நீர் நிலைகளின் அருகே அதிக அளவில் தானாக படர்ந்திருப்பதை காணலாம். வல்லாரை தரையில் பரவும் கொடியாகும். கொத்து கொத்தாக ஒன்றோடு ஒன்று இணைந்து பரவி இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு இலையும் நீண்ட தண்டை உடையதாக இருக்கும்.
இதனை ஆங்கிலத்தில் பொதுவாக #centella அல்லது gotu kola என அழைக்கப்படுகிறது. வல்லாரையின் அறிவியல் பெயர் Centella asiatica.
வல்லாரையை  Asiatic pennywort அல்லது Indian pennywort என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது உண்டு.
வல்லாரைக்கு நினைவாற்றலை அதிகப்படுத்தும் தன்மை உள்ளதாக  இயற்கை மருத்துவத்தில் கூறப்படுகிறது. ஆனால் அத்தகைய கூற்று எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. இருப்பினும் நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லையே!!
சென்ற பதிவில் வல்லாரை தேங்காய் சட்னி செய்யும் முறையை பார்த்தோம். அதில் வல்லாரையின் அளவு தேங்காய் துருவலின் அளவை விட குறைவாக எடுத்துக் கொண்டோம். இங்கு வல்லாரையை அதிக அளவில் உபயோகித்து சட்னி செய்யும் முறையை காண்போம். ருசி சிறிது மாறுபட்டு இருக்கும்.
ஆனால் சுவை அருமையாக வல்லாரை கீரையின் மணத்துடன் இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.

வல்லாரை சட்னி [ Centella Chutney ]

தேவையான பொருட்கள் :
50 - 60வல்லாரை இலைகள்
1 Tbspதேங்காய் துருவல்
2 Tspஉளுத்தம் பருப்பு தோலுடன்
1/2 Tspமிளகு
1/2 Tspகொத்தமல்லி விதை
2 or 3சிகப்பு மிளகாய்
1 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
1/2 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]
3/4 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
7 - 9கறுவேப்பிலை
1 Tspநல்லெண்ணெய் [ Til/sesame oil ]

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
 முதலில் மிளகாயை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுத்து தேவையானால் சிறிது எண்ணெய் விட்டு மிளகையும் கொத்தமல்லி விதைகளையும் வறுத்து எடுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு அதே வாணலியில் கழுவிய வல்லாரை இலைகளை அரை நிமிடம் வதக்கி எடுக்கவும்.
அனைத்தையும் ஆற விடவும்.
பின்னர் வதக்கிய பொருட்களுடன் மற்ற தேவையான பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறின் சுவையை சரி பார்க்கவும்.
ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் மறுபடியும் வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கருவேப்பிலையை தாளித்து கொட்டவும்.
சுவையான வல்லாரை சட்னி தயார்!!

தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி, பொங்கல், உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
சூடான சாதத்தில் ஒரு தேக்கரண்டி சட்னி சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பாருடன் சாப்பிட்டால் சுவையோ சுவை!!..

வல்லாரை சட்னி





மற்ற சட்னி வகைகள் செய்து பார்க்க
வல்லாரை தேங்காய் சட்னி கரிசலாங்கண்ணி துவையல் வேப்பம்பூ துவையல்