#வெங்காயம்சிகப்புசட்னி : மிக எளிதில் செய்யக்கூடிய கார சாரமான சட்னியாகும். தேவையான பொருட்களனைத்தும் பச்சையாகவே அரைப்பதனால் உடலுக்கு மிக மிக நல்லது. இனி செய்வதெப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
8 - 10 சிகப்பு மிளகாய்
15 - 20 சின்ன வெங்காயம் உரித்தது
அல்லது
2 பெரிய வெங்காயம், துண்டுகளாக்கவும்
30 கறுவேப்பிலை
1/2 Tsp உப்பு
செய்முறை :
மிக்ஸி பாத்திரத்தில் மிளகாய், உப்பு இரண்டையும் பொடி பண்ணிக்கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தின் தண்ணீரே சட்னியை அரைக்க போதுமானது.
தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
இந்த சட்னி இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தட்டில் இட்லிக்கு பக்கத்தில் ஒரு தேக்கரண்டி இந்த சட்னியை வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை சட்னியின் மேல் விட்டு சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment