#தினைஉப்புமா :
#தினை [ அ ] #தினையரிசி யின் ஆங்கில பெயர் : Foxtail Millet
அறிவியல் பெயர் : Setaria italica
தினையரிசி #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. சிறுதானியங்கள் அமிலத்தன்மையை உருவாக்குவதில்லை. மேலும் கோதுமையில் உள்ளது போல பசை தன்மை கொண்டதல்ல. கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போது நார் சத்து அதிகமாக கொண்டுள்ளது.
தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.
இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது.
அதனால் அடிக்கடி நமது உணவில் தினையை சேர்த்துகொள்வது நல்லது.
இனி தினையை உபயோகித்து உப்புமா செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : | |
---|---|
1 கப் | தினை அரிசி |
2 Tsp | துவரம் பருப்பு |
2 Tsp | உப்பு |
1 | வெங்காயம் |
3 | பச்சை மிளகாய் |
10 - 15 | கருவேப்பிலை |
சிறு துண்டு | இஞ்சி |
தாளிக்க : | |
1 Tsp | கடுகு |
4 Tsp | கடலை பருப்பு |
சிறு துண்டு | பெருங்காயம் |
4 Tsp | நல்லெண்ணெய் |
செய்முறை :
தினை அரிசி மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு முறை களைந்து பின்னர் கல் போக இரண்டு முறை அரித்தெடுக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு ஆற விடவும்.
அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்வதற்குள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை நீள வாக்கில் கீறி வைக்கவும்.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிது நசுக்கி வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனை வர ஆரம்பித்து இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்துள்ள தினை அரிசியை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் அதிக தீயில் கொதிக்க விட்ட பின்னர்
தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.
தினை அரிசி வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.
வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படியே மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் தேங்காய் சட்னியுடன் அல்லது புதினா துவையல் / கறுவேப்பிலை துவையலுடன் பரிமாறவும்.
முயற்சி செய்ய மேலும் சில சமையல் குறிப்புகள்
|
|
|
||||||
|
|
சிறுதானிய சமையல் வகைகள்
No comments:
Post a Comment