Search This Blog

Showing posts with label uppuma. Show all posts
Showing posts with label uppuma. Show all posts

Tuesday, September 8, 2020

Upma-Varieties

 உப்புமா வகைகள் :

#உப்புமா என்றதும் அலறி அடித்துக்கொண்டு ஓடுபவர்களே அதிகம். ஆனால் உப்புமா ஒரு அற்புதமான மற்றும் முழுமையான சிற்றுண்டியாகும்.

அரிசி, சிறு தானியங்கள், ரவா, கோதுமை ரவா மற்றும் அவல் ஆகியவற்றைக்  கொண்டு சுவையான உப்புமா தயாரிக்கலாம். இவை தவிர சேமியா, ஜவ்வரிசி மற்றும் அரிசிப் பொரி கொண்டும் உப்புமா செய்வதுண்டு.

அடுப்பில் வாணலியை எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்க  வேண்டும். நறுக்கிய வெங்காயம் சிவக்க வதக்க வேண்டியதில்லை. வெங்காயம் சிறிதே நிறம் இழந்தால் போதுமானது. தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அதிக தீயில் கொதிக்க விடவேண்டும். தண்ணீர் கலவை கொதிக்க ஆரம்பித்ததும் நாம் எந்த உப்புமா தயாரிக்க விழைந்தோமோ அந்த பொருளை சேர்த்து கலக்கி தீயைக் குறைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். அவ்வப்போது இடையே சிறிது கிளறி விட வேண்டும். எல்லா வைகையான உப்புமாவும் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் தயாரித்து விடலாம்.

அணைத்து உப்புமாக்களுக்கும் 1 கப் தானியம் எடுத்துக்கொண்டால் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.

சேமியா உப்புமாவுக்கு ஒரு கப் எடுத்தால் ஒரு கப் தண்ணீர் விட்டு வேக வைத்தாலே போதுமானது.

ஜவ்வரிசி உப்புமா செய்யும் போது நன்கு ஊறவைத்து கிளற வேண்டும்.

அவல் உப்புமாவிற்கு அவலின் கெட்டித்தன்மையைப் பொறுத்து தண்ணீரில் நனைத்தோ அல்லது மிக சொற்ப நேரம் ஊறவைத்தோ செய்வது அவசியம்.

கீழே பல விதமான உப்புமா செய்முறைக் குறிப்புகளின் இணைப்புகளைக் கொடுத்துள்ளேன்.

பாப்பரை எனும் தானியம் ஆங்கிலத்தில் Buckwheat என அழைக்கப்படுகிறது. இந்த பாப்பரை தானியம் இயற்கை அங்காடிகளிலும் நவீன சூப்பர் மார்க்கட்டுகளிலும் கிடைக்கும்.

விதவிதமான உப்புமா செய்முறை பதிவுகளின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 



பாப்பரை அரிசி உப்புமாு
பாப்பரை அரிசி உப்புமா
அரிசி உப்புமா
அரிசி உப்புமா
ரவா உப்புமா
ரவா உப்புமா
கோதும ரவா உப்புமா
கோதுமரவா உப்புமா
அவல் உப்புமா
அவல் உப்புமா
எலுமிச்சை அவல் உப்புமா
எலுமிச்சை அவல் உப்புமா
பீட்ரூட் அவல் உப்புமா
பீட்ரூட் அவல் உப்புமா
சேமியா உப்புமா
சேமியா உப்புமா
குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி உப்புமா
வரகரிசிி உப்புமா
வரகரிசிி உப்புமா
தினை உப்புமா
தினை உப்புமா
சாமையரிசி உப்புமா
சாமையரிசி உப்புமா





Sunday, July 12, 2015

Thinai-Upma

#தினைஉப்புமா :
#தினை [ அ ] #தினையரிசி யின் ஆங்கில பெயர் : Foxtail Millet
அறிவியல் பெயர் : Setaria italica
தினையரிசி #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. சிறுதானியங்கள் அமிலத்தன்மையை உருவாக்குவதில்லை. மேலும் கோதுமையில் உள்ளது போல பசை தன்மை கொண்டதல்ல. கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போது நார் சத்து அதிகமாக கொண்டுள்ளது.
தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.
இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது.
அதனால் அடிக்கடி நமது உணவில் தினையை சேர்த்துகொள்வது நல்லது.
இனி தினையை உபயோகித்து உப்புமா செய்வது எப்படி என பார்ப்போம்.

தினை உப்புமா :


தேவையான பொருட்கள் :
1 கப்தினை அரிசி
2 Tspதுவரம் பருப்பு
2 Tspஉப்பு
1 வெங்காயம்
3 பச்சை மிளகாய்
10 - 15கருவேப்பிலை
சிறு துண்டுஇஞ்சி
தாளிக்க :
1 Tspகடுகு
4 Tspகடலை பருப்பு
சிறு துண்டுபெருங்காயம்
4 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
தினை அரிசி மற்றும்  துவரம் பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு முறை களைந்து பின்னர் கல் போக இரண்டு முறை அரித்தெடுக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு ஆற விடவும்.
அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.

எண்ணெய் காய்வதற்குள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை நீள வாக்கில் கீறி வைக்கவும்.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிது நசுக்கி வைக்கவும்.
எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனை வர ஆரம்பித்து இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.


தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்துள்ள தினை அரிசியை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் அதிக தீயில் கொதிக்க விட்ட பின்னர்
தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.

தினை அரிசி வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.
வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படியே மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் தேங்காய் சட்னியுடன் அல்லது புதினா துவையல் / கறுவேப்பிலை துவையலுடன் பரிமாறவும்.
தினை உப்புமா : தினை உப்புமா :



முயற்சி செய்ய மேலும் சில சமையல் குறிப்புகள்
அவல் உப்புமா
அவல் உப்புமா
சேமியா உப்புமா
சேமியா உப்புமா
வரகரிசி உப்புமா
வரகரிசி உப்புமா
தினை பொங்கல்
தினை பொங்கல்
தினை கஸ்டர்ட்
தினை கஸ்டர்ட்


சிறுதானிய சமையல் வகைகள்

Sunday, April 19, 2015

Semiya-Upma

#சேமியாஉப்புமா : மறுபடியும் உப்புமாவா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம். சரியான விகிதத்தில் தேவையான பொருட்களை சேர்த்து செய்தால் மிக மிக அருமையாக இருக்கும். பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுகிறது.
மற்ற #உப்புமா போலல்லாமல் சேமியா உப்புமாவிற்கு தண்ணீரின் அளவில் கவனம் தேவை. நான் இந்த உப்புமாவில் சேர்க்கக் கூடிய அனைத்து காய்கறிகளின் அளவை குறிப்பிட்டுள்ளேன். தங்களிடம் எந்தெந்த காய்கறிகள் இருக்கிறதோ அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
வறுத்த சேமியா மற்றும் வறுக்காத சேமியா என இரு வகைகளில் கடைகளில் விற்கப்படுகிறது. இரண்டில் எந்த வகை வீட்டில் இருக்கிறதோ அதை பயன் படுத்தலாம். 
இனி செய்முறையை பார்ப்போம்.

சேமியா உப்புமா

தேவையான பொருட்கள் :
1 கப்சேமியா
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 or 3பச்சை மிளகாய், நீள வாக்கில் நறுக்கவும்
1/4 கப்காரட், பொடியாக நறுக்கியது
1/4 கப்பீன்ஸ், பொடியாக நறுக்கியது
1/4 கப்குடை மிளகாய், பொடியாக நறுக்கியது
1/4 கப்பச்சை பட்டாணி
8 - 10கறுவேப்பிலை
2 Tspகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/2 Tspஇஞ்சி அரைத்த விழுது [ விரும்பினால் ]
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
1 சிட்டிகைபெருங்காய தூள்
2 Tspஎண்ணெய்
1/2 Tspநெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியை சூடாக்கவும்.
வாணலியில் சேமியாவை போட்டு அரை தேக்கரண்டி நெய் விடவும்.
சாரணி கொண்டு விடாமல் வறுக்கவும்.
பொன்னிறமாக வறு பட்டவுடன் ஒரு தட்டில் எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை கரண்டியால் துழாவவும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்து கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்து இஞ்சி விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அரிந்து வைத்துள்ள பீன்ஸ் மற்றும் காரட் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அடுத்து குடை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு அரை நிமிடம் வதக்கவும்.
பட்டாணியை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிய பின்னர் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைத்து வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறவும்.
ஒரு மூடி கொண்டு மூடி வேக விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கரண்டியினால் கிளறி விடவும்.
மறு படியும் மூடி மேலும் 3 நிமிடங்கள் வேக விடவும்.
3 நிமிடங்கள் கழித்து திறந்து சேமியா வெந்து விட்டதா என பார்க்கவும்.
சேமியாவை மசித்து விடாமல் நன்கு கிளறி விடவும்.
இன்னும் சிறிது வேக வேண்டும் என்றால் மேலும் இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு வாணலியை மூடியால் மூடி அடுப்பின் சூட்டிலேயே மேலும் 2 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
தொட்டுக்கொள்ள ஏதும் தேவை இல்லை. விருப்பப் பட்டால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.

Semiya Upma

குறிப்பு :
வறுத்த சேமியாவாக இருந்தால் அப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.





மேலும் சில சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
அவல் உப்புமா எலுமிச்சை அவல் உப்புமா சைவ ஆம்லட்
பசலை கீரை பூரி சேமியா பாயசம் பாப்பரை அரிசி உப்புமா







இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Monday, October 13, 2014

Samai Arisi Upma

#சாமைஅரிசிஉப்புமா : #சாமைஅரிசி சிறு தானிய வகைகளிலேயே மிக மிக சிறிய மணிகளை கொண்டது. அதனால் இதனை ஆங்கிலத்தில் Little Millet என அழைக்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் Panicum miliare ஆகும்.
#சிறுதானியம் வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இந்த சிறு தானியங்களின் சுவை அரிசியை போலவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அரிசியை விடவும் அருமையாக இருக்கிறது.

இத் தானியங்களின் மணிகள் மிக சிறியதாக இருப்பதனால் கற்கள் மற்றும் மண் அதிக அளவில் காணப்படுகிறது. சமைப்பதற்கு முன்பு தண்ணீரில் களைந்த பின்னர் இரண்டு முறை அரித்து எடுத்துக்கொள்வது நல்லது.

இனி செய்முறையை பார்ப்போம்.

சாமை அரிசி உப்புமா


தேவையான பொருட்கள் :
1 கப்சாமை அரிசி
2 Tspஉப்பு
1 வெங்காயம்
3 பச்சை மிளகாய்
10 - 15கருவேப்பிலை
சிறு துண்டுஇஞ்சி
தாளிக்க :
1 Tspகடுகு
4 Tspகடலை பருப்பு
சிறு துண்டுபெருங்காயம்
4 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
சாமை அரிசியை இரண்டு முறை களைந்து பின்னர் கல் போக இரண்டு முறை அரித்தெடுக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு ஆற விடவும்.

சாமை அரிசி

அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.

எண்ணெய் காய்வதற்குள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை நீள வாக்கில் கீறி வைக்கவும்.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிது நசுக்கி வைக்கவும்.


எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.



வெங்காயம் வாசனை வர ஆரம்பித்து இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.


தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்துள்ள சாமை அரிசியை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் அதிக தீயில் கொதிக்க விட்ட பின்னர்
தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.

சாமை அரிசி வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.


வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படியே மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் தேங்காய் சட்னியுடன் அல்லது புதினா துவையல் / கறுவேப்பிலை துவையலுடன் பரிமாறவும்.

சாமை அரிசி உப்புமா

எனக்கு எல்லா வகையான உப்புமாவையும் வெல்லத்துடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். 


மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
வரகரிசி உப்புமா
வரகரிசி உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
பாப்பரை அரிசி உப்புமா
பாப்பரை
அரிசிஉப்புமா