Search This Blog

Wednesday, November 27, 2013

Varagarisi Upma

#வரகரிசிஉப்புமா : #வரகு அரிசியை ஆங்கிலத்தில் கோடோ மில்லெட் என அழைக்கப்படுகிறது. இந்த சிறு தானிய வகைகள் சாப்பிட்டவுடன் அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை. இது சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்ற உணவாகும்.

வரகு அரிசியின் அறிவியல் பெயர் Paspalum Scrobiculatum  அரிசியை போலவே இதனை சமையலில் உபயோக படுத்தலாம்.
மேலும் சிறு தானிய வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet

வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet

தமிழில் வரகு 

வரகரிசி உப்புமா

தேவையான பொருட்கள் :

தமிழ் : வரகரிசி ; English : Kodo Millet

வரகு அரிசி                                    : 1 கப்
துவரம் பருப்பு                               : 1 Tsp
உப்பு                                                   : 2 Tsp ( அட்ஜஸ்ட் )
வெங்காயம்                                    : 1
பச்சை  மிளகாய்                           : 3 ( அட்ஜஸ்ட் )
கருவேப்பிலை                             : 10 - 12
இஞ்சி                                                : சிறு துண்டு


தாளிக்க :
கடுகு                                                  : 1 Tsp
கடலை பருப்பு                               : 3 Tsp
பெருங்காயம்                                  : சிறு துண்டு
நல்லெண்ணெய்                          : 3 Tsp

செய்முறை :
வரகு அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாக சேர்த்து  வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு முறை களைந்து பின்னர் கல் போக இரண்டு முறை அரித்தெடுக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு ஆற விடவும்.

வரகரிசி துவரம் பருப்பு கழுவி, அரித்து ஆற விடவும்

அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.
எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில்

இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வாசனையுடன் இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.


தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்துள்ள வரகு அரிசி பருப்பை சேர்க்கவும்.
தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.

வரகு அரிசி உப்புமா

வரகு அரிசி வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.

வரகு அரிசி உப்புமா

வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படி மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் தேங்காய் சட்னியுடன் அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

வரகரிசி உப்புமா







No comments:

Post a Comment