விதவிதமான பொங்கல் வகைகள் :
காலை உணவு எனும்போது இட்லி மற்றும் தோசைக்கு அடுத்தபடியாக எல்லோராலும் விரும்பப்படும் பலகாரம் பொங்கல். சூடான பொங்கல் மீது தாராளமாக நெய் விட்டு தேங்காய் சட்னி அல்லது வெங்காய சாம்பார் தொட்டுக்கொண்டு சுவைத்தால் ஆஹா! அலாதிதான். பெரும்பாலும் பல வீடுகளில் பொங்கலுக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியே செய்வார்கள்.
ஆனால் என்னுடைய பாட்டி மற்றும் அம்மா பொங்கலுடன் சுவைக்க ஒரு பிரத்யேகமான துவையல் செய்வார்கள். அந்த துவையலுடன் பொங்கலை சுவைத்தால் தேவார்மிதமாக இருக்கும். பொங்கலை விட அந்த துவையலை அல்வா சாப்பிடுவது போல எல்லோரும் சுவைப்பார்கள். அந்த துவையல்தான் தேங்காய் துவையல். நாங்கள் தேங்காய் துவையலை பொங்கல் துவையல் என்றே அழைப்பது வழக்கம்.
மேலும் சிலர் பொங்கலுடன் சுவைக்க வடவத் துவையல் செய்வது வழக்கம்.
இவை தவிர பொங்கலுடன் தயிர் சேர்த்து சுவைப்பவர்களும் உண்டு.
சூடான பொங்கலுடன் சர்க்கரை [ சீனி ] தொட்டுக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
கீழே சில பொங்கல் செய்முறைகளின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இணைப்பை ஒருமுறை சொடுக்கினால் குறிப்பிட்ட செய்முறை பதிவை அடையலாம்.
No comments:
Post a Comment