Search This Blog

Showing posts with label foxtail millet. Show all posts
Showing posts with label foxtail millet. Show all posts

Friday, November 13, 2015

Thinai-Sakkarai-Pongal

#தினைசக்கரைபொங்கல் : #தினையரிசி அல்லது சுருக்கமாக #தினை #சிறுதானியம் வகையை சேர்ந்தது. சிறுதானியம் வகைகள் பசை தன்மை அற்றது. மேலும் சாப்பிட்டால் அமிலத் தன்மையை உண்டாக்குவதில்லை.
அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் நார் சத்து அதிக அளவில் கொண்டுள்ளது.
குறிப்பாக தினையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை தவிர புரத சத்தும் குறிப்பிட்ட அளவு தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய சத்துக்கள் கொண்ட சிறு தானியங்களுள் ஒன்றான தினையை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.
இனி சக்கரை பொங்கல் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

தினை சக்கரை பொங்கல்




தேவையான பொருட்கள் :
1/2 கப் தினை அரிசி
1/4 கப் பயத்தம் பருப்பு
1/2 கப்பால்
1 சிட்டிகைஉப்பு 
1 கப்வெல்லம் [ adjust ]
4ஏலக்காய்
சிறு துண்டு ஜாதிக்காய்
2 Tspசர்க்கரை
1 சிட்டிகைபச்சை கற்பூரம் [ Edible Camphor ]
4 Tspநெய்
4 - 5முந்திரி பருப்பு
5 - 6பாதாம் பருப்பு
செய்முறை :
சக்கரை பொங்கல் செய்ய துவங்குவதற்கு 5 அ 6 மணி நேரம் முன்பே பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைக்கவும்.
பொங்கல் செய்ய துவங்குவதற்கு முன்பு ஊறிய பாதாம் பருப்பின் தோலை நீக்கி விட்டு சிறு துகள்களாக நறுக்கி தனியே வைக்கவும்.

சக்கரையுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தினை அரிசியையும் பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு கழுவி 2 கப் தண்ணீர் மற்றும்  1/2 கப் பால் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு தினை-பருப்பு உள்ள பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி வேக விடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும். 
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை நசுக்கி போடவும்.
மிதமான தீயில் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் கரைந்ததும் மாசுக்களை நீக்க வடி கட்டவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய்யில் முந்திரியை சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

ஆவி அடங்கி குக்கரை திறந்ததும் அடுப்பை மறுபடியும் பற்ற வைத்து ஒரு அடி கனமான  பாத்திரத்தை சிறிய தீயின் மேல் வைக்கவும்.
வெந்த அரிசி பருப்பை சேர்த்து கரண்டியால் நன்கு மசித்தவாறு கிளறவும்.
இப்போது வெல்லம் கலந்த தண்ணீரை சேர்க்கவும்.
கை விடாமல் நன்கு கிளறவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய்-ஜாதிக்காய் பொடியையும் நெய்யையும் 
பிறகு ஊறவைத்து நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு துகள்களையும் சேர்த்து  கிளறவும்.

அடுப்பை அணைத்து விட்டு பச்சை கற்பூரம் நுணுக்கி போட்டு கலந்து விடவும்.
பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் தினை சக்கரை பொங்கல் எடுத்து வைக்கவும்.

கிண்ணத்தில் எடுத்து வைத்து வறுத்த முந்திரியால் அலங்கரித்து நெய் விட்டு சுவைக்கவும்.
சூடாக சுவைக்கும் பொது ருசியும் மணமும் அபாரமாக இருக்கும்.
மற்ற சிறு தானியங்களை விட இயற்கையாகவே தினையரிசியின் சுவை சிறிது இனிப்பாக இருக்கும்.
ஆதலால் சர்க்கரை பொங்கலும் மிக்க ருசியாக இருக்கும்.
செய்துதான் பாருங்களேன்!!
தினை சக்கரை பொங்கல் தினை சக்கரை பொங்கல்





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை பொட்டுக்கடலை 
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திருவாதிரை களி
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை இனிப்பு குழி பணியாரம்
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு

மற்ற சிறுதானிய சமையல் குறிப்பிற்கு

சிறுதானிய சமையல் வகைகள்



Wednesday, July 29, 2015

Thinai-MaavuDosai

#தினைமாவுதோசை : தினை #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. சிறு தானியங்கள் வகைகளில் தினை மிக பழங்காலம் முதற் கொண்டு தமிழகத்தில் உணவாக உட்கொள்ளப்ப.டுகிறது. இத் தானியம் சிறு சிறு கோள வடிவத்தில் காணப்படுகிறது. தக தகவென தங்க நிறத்தை கொண்டுள்ளது. இரும்பு, செம்பு, துத்தநாகம் ஆகிய தாதுக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை. தினை கொண்டு சில சமையல் குறிப்புகளை முன்பே பார்த்திருக்கிறோம்.
இங்கு தோசை செய்வது எப்படி என காண்போம்.

தினை மாவுதோசை

தேவையான பொருட்கள் :
1 கப் இட்லி அரிசி
1/2 கப்தினை அரிசி
1/2 கப்பச்சரிசி
1 Tspவெந்தயம்
1/2 கப்உளுத்தம் பருப்பு
2 Tspஉப்பு

செய்முறை :
உப்பு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.


இரண்டு மூன்று முறை நன்கு கழுவிய பின் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை கழுவவும்.
பிறகு ஊறவைத்த அனைத்தையும் இயந்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றிய பின் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டியிருப்பதை கழுவி மாவுடன் சேர்க்கவும்.
ஆறு முதல் எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
புளித்த பிறகு அடுப்பில் தோசை கல்லை மிதமான சூட்டில் சூடாக்கி எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை நடுவில் வைத்து சமமாக பரப்பவும்.
தோசையின் மேலும் சுற்றியும் சிறிது எண்ணெய் விடவும்.
ஒரு மூடி கொண்டு மூடவும்.
ஓரம் மற்றும் நடுவில் சிவந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
திருப்பி போட்டு வேக விட தேவையில்லை.
மொறு மொறு தோசை வேண்டும் எனில் மெல்லியதாக பரப்பி எண்ணெய் விட்டு மூடி சுட்டெடுக்கவும்.

விருப்பமான சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சுவைக்கவும்.




முயற்சி செய்ய சில சமையல் குறிப்புகள் :

தினை எள்ளு உருண்டை
தினை எள்ளுஉருண்டை
திணை பால் பாயாசம் 1
திணை பால்பாயாசம் 1
தினை உப்புமா
தினை உப்புமா
தினை குழி பணியாரம்
தினை குழி பணியாரம்
தினை பொங்கல்
தினை பொங்கல்

பலகாரங்கள்


Sunday, July 12, 2015

Thinai-Upma

#தினைஉப்புமா :
#தினை [ அ ] #தினையரிசி யின் ஆங்கில பெயர் : Foxtail Millet
அறிவியல் பெயர் : Setaria italica
தினையரிசி #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. சிறுதானியங்கள் அமிலத்தன்மையை உருவாக்குவதில்லை. மேலும் கோதுமையில் உள்ளது போல பசை தன்மை கொண்டதல்ல. கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போது நார் சத்து அதிகமாக கொண்டுள்ளது.
தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.
இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது.
அதனால் அடிக்கடி நமது உணவில் தினையை சேர்த்துகொள்வது நல்லது.
இனி தினையை உபயோகித்து உப்புமா செய்வது எப்படி என பார்ப்போம்.

தினை உப்புமா :


தேவையான பொருட்கள் :
1 கப்தினை அரிசி
2 Tspதுவரம் பருப்பு
2 Tspஉப்பு
1 வெங்காயம்
3 பச்சை மிளகாய்
10 - 15கருவேப்பிலை
சிறு துண்டுஇஞ்சி
தாளிக்க :
1 Tspகடுகு
4 Tspகடலை பருப்பு
சிறு துண்டுபெருங்காயம்
4 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
தினை அரிசி மற்றும்  துவரம் பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு முறை களைந்து பின்னர் கல் போக இரண்டு முறை அரித்தெடுக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு ஆற விடவும்.
அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.

எண்ணெய் காய்வதற்குள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை நீள வாக்கில் கீறி வைக்கவும்.
இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிது நசுக்கி வைக்கவும்.
எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனை வர ஆரம்பித்து இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.


தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்துள்ள தினை அரிசியை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் அதிக தீயில் கொதிக்க விட்ட பின்னர்
தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.

தினை அரிசி வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.
வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படியே மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் தேங்காய் சட்னியுடன் அல்லது புதினா துவையல் / கறுவேப்பிலை துவையலுடன் பரிமாறவும்.
தினை உப்புமா : தினை உப்புமா :



முயற்சி செய்ய மேலும் சில சமையல் குறிப்புகள்
அவல் உப்புமா
அவல் உப்புமா
சேமியா உப்புமா
சேமியா உப்புமா
வரகரிசி உப்புமா
வரகரிசி உப்புமா
தினை பொங்கல்
தினை பொங்கல்
தினை கஸ்டர்ட்
தினை கஸ்டர்ட்


சிறுதானிய சமையல் வகைகள்

Monday, May 25, 2015

Thinai-Foxtail-Millet

#தினை அல்லது #தினையரிசி  [ #FoxtailMillet ] :
ஆங்கில பெயர் : Foxtail Millet
அறிவியல் பெயர் : Setaria italica
ஹிந்தி பெயர்      : கங்க்னி
கன்னட பெயர்   : நவானே
தெலுங்கு பெயர் : korra
மலையாள பெயர் : தினை

தினை [ தினையரிசி ]


தினையரிசி #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. சிறுதானியங்கள் அமிலத்தன்மையை உருவாக்குவதில்லை. மேலும் இவைகள் கோதுமையில் உள்ளது போல பசை தன்மை கொண்டதல்ல. கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போது நார் சத்து அதிகமாக கொண்டுள்ளது.
தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.
இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது.
அதனால் அடிக்கடி நமது உணவில் தினையை சேர்த்துகொள்வது நல்லது.

சிறு தானியங்களை பற்றி அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
Millet

இங்கு தினையை கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகள் பட்டியலிடப் பட்டுள்ளன.
  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை [ cursor ஐ ] வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பு பதிவை காணலாம்.

சிற்றுண்டி வகைகள்
தினை தோசை
தினை தோசை
தினை குழி பணியாரம்
தினை குழி பணியாரம்
தினை பொங்கல்
தினை பொங்கல்
தினை உப்புமா
தினை உப்புமா
தினை மாவு தோசை
தினை மாவு தோசை

பாயசம் வகைகள்
திணை பால் பாயாசம்
திணை பால் பாயாசம்
திணை பால் பாயாசம் 1
திணை பால் பாயாசம் 1
காரட் தினை பாயசம்
காரட் தினை பாயசம்
தினை பழ கஸ்டர்ட்
தினை பழ கஸ்டர்ட்

இனிப்பு வகைகள்
தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
தினை எள்ளு உருண்டை
தினை எள்ளு உருண்டை
தினை இனிப்பு குழிபணியாரம்
தினை இனிப்பு குழிபணியாரம்
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்




சிறுதானிய சமையல் வகைகள்