Search This Blog

Monday, November 23, 2015

Aval-Kesari

#அவல்கேசரி : #அவல், தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் கலந்து இனிப்பு அவல் செய்து ருசிப்பது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு அவல்  சிறிது நேரத்தில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகி விடும். சுவையும் மட்டுப்பட்டு விடும். அதனால் தேங்காய் பூரணம் செய்வது போல அவலை கொண்டு ஒரு இனிப்பு செய்யலாம் என முயற்சித்தேன். மிக மிக அருமையாக இருந்தது. கேசரி போல மிருதுவாகவும் சுவையாகவும் இருந்ததால் இந்த புதிய இனிப்பிற்கு அவல் கேசரி என பெயரிட்டுள்ளேன்

இனி செய்முறையை காண்போம்.

aval kesari [ rice flakes kesari ]


தேவையான பொருட்கள் :
1/2 கப்அவல்
1/2 கப்தேங்காய் துருவல்
1/2 கப் குவித்துவெல்லம் [ adjust ]
1 கப்பால், காய்ச்சி ஆற வைத்தது
1/2 Tspஏலக்காய் பொடி
1/4 Tspஜாதிக்காய் பொடி
1 Tbspநெய்
1 சிட்டிகைஉப்பு
1/2 Tspவறுத்த எள்

செய்முறை :
ஒரு சுத்தமான தட்டின் மேல் நெய்யை தடவி தயாராக வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் சூடாக்கி அவலை போட்டு சிறிது சூடேறும் வரை வறுக்கவும். இலேசாக சூடாக்கினால் போதுமானது.
மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த அவலை பாலில் கலந்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு 1/3 கப் தண்ணீர் விட்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் முழுமையாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் இந்த வெல்ல கரைசலை வடி கட்டி எடுத்துக்கொள்ளவும்.
அதனை மிதமான தீயின் மேல் வைத்து ஊறவைத்துள்ள அவலை கலந்து விடவும்.
நன்கு கலந்து விட்டபின் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும்.
கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது நேரத்தில் கெட்டிபட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
இந்த தருணத்தில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு தட்டில் கொட்டவும்.
தட்டை இலேசாக தட்டி தட்டி இனிப்பை சமன் படுத்தவும்.
மேலே வறுத்த எள்ளை தூவவும்.
சிறிது ஆறவைத்து பிறகு சுத்தமான ஈரமில்லாத கத்தியை கொண்டு துண்டுகள் போடவும்.

சுவையும் மணமும் நிறைந்த அவல் கேசரி தயார்.
சுவைத்து மகிழவும்.


சில இனிப்பு வகைகள் முயற்சி செய்து பார்க்க

தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை...
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை..
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்
கேழ்வரகு குழி..
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திரு..

No comments:

Post a Comment