#அவல்கேசரி : #அவல், தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் கலந்து இனிப்பு அவல் செய்து ருசிப்பது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு அவல் சிறிது நேரத்தில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகி விடும். சுவையும் மட்டுப்பட்டு விடும். அதனால் தேங்காய் பூரணம் செய்வது போல அவலை கொண்டு ஒரு இனிப்பு செய்யலாம் என முயற்சித்தேன். மிக மிக அருமையாக இருந்தது. கேசரி போல மிருதுவாகவும் சுவையாகவும் இருந்ததால் இந்த புதிய இனிப்பிற்கு அவல் கேசரி என பெயரிட்டுள்ளேன்
இனி செய்முறையை காண்போம்.
செய்முறை :
ஒரு சுத்தமான தட்டின் மேல் நெய்யை தடவி தயாராக வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் சூடாக்கி அவலை போட்டு சிறிது சூடேறும் வரை வறுக்கவும். இலேசாக சூடாக்கினால் போதுமானது.
மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த அவலை பாலில் கலந்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு 1/3 கப் தண்ணீர் விட்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் முழுமையாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் இந்த வெல்ல கரைசலை வடி கட்டி எடுத்துக்கொள்ளவும்.
அதனை மிதமான தீயின் மேல் வைத்து ஊறவைத்துள்ள அவலை கலந்து விடவும்.
நன்கு கலந்து விட்டபின் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும்.
கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது நேரத்தில் கெட்டிபட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
இந்த தருணத்தில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இனி செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1/2 கப் | அவல் |
1/2 கப் | தேங்காய் துருவல் |
1/2 கப் குவித்து | வெல்லம் [ adjust ] |
1 கப் | பால், காய்ச்சி ஆற வைத்தது |
1/2 Tsp | ஏலக்காய் பொடி |
1/4 Tsp | ஜாதிக்காய் பொடி |
1 Tbsp | நெய் |
1 சிட்டிகை | உப்பு |
1/2 Tsp | வறுத்த எள் |
செய்முறை :
ஒரு சுத்தமான தட்டின் மேல் நெய்யை தடவி தயாராக வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் சூடாக்கி அவலை போட்டு சிறிது சூடேறும் வரை வறுக்கவும். இலேசாக சூடாக்கினால் போதுமானது.
மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த அவலை பாலில் கலந்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு 1/3 கப் தண்ணீர் விட்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் முழுமையாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் இந்த வெல்ல கரைசலை வடி கட்டி எடுத்துக்கொள்ளவும்.
அதனை மிதமான தீயின் மேல் வைத்து ஊறவைத்துள்ள அவலை கலந்து விடவும்.
நன்கு கலந்து விட்டபின் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும்.
கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது நேரத்தில் கெட்டிபட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
இந்த தருணத்தில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு தட்டில் கொட்டவும்.
தட்டை இலேசாக தட்டி தட்டி இனிப்பை சமன் படுத்தவும்.
மேலே வறுத்த எள்ளை தூவவும்.
சிறிது ஆறவைத்து பிறகு சுத்தமான ஈரமில்லாத கத்தியை கொண்டு துண்டுகள் போடவும்.
சுவையும் மணமும் நிறைந்த அவல் கேசரி தயார்.
சுவைத்து மகிழவும்.
சில இனிப்பு வகைகள் முயற்சி செய்து பார்க்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment