#குதிரைவாலிநீர்தோசை : #குதிரைவாலிஅரிசி அல்லது சுருக்கமாக #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதனை ஆங்கிலத்தில் Barnyard millet என அழைக்கப் படுகிறது.
எல்லா சிறு தானியங்களும் பசை தன்மை அற்றது. மேலும் உண்டதும் அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை. நார் சத்து மிக அதிக அளவில் குதிரைவாலியில் நிறைந்துள்ளது. இதன் பயனை அடைய அரிசி மற்றும் கோதுமையை தவிர இத்தகைய சிறு தானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
இங்கு குதிரைவாலியை உபயோகப்படுத்தி ஒரு அருமையான தோசை செய்யும் முறையை காண்போம்.
எல்லா சிறு தானியங்களும் பசை தன்மை அற்றது. மேலும் உண்டதும் அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை. நார் சத்து மிக அதிக அளவில் குதிரைவாலியில் நிறைந்துள்ளது. இதன் பயனை அடைய அரிசி மற்றும் கோதுமையை தவிர இத்தகைய சிறு தானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
இங்கு குதிரைவாலியை உபயோகப்படுத்தி ஒரு அருமையான தோசை செய்யும் முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
2 கப் | குதிரைவாலி அரிசி [ Barnyard millet ] |
1/2 கப் | தேங்காய் துருவல் |
2 Tsp | உப்பு |
1 Tsp | சர்க்கரை |
செய்முறை :
குதிரைவாலி அரிசியை இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி மற்றும் தேங்காயை நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவையும் கழுவி மாவுடன் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அப்போதுதான் மெல்லிய தோசையாக சுட முடியும்.
இந்த மாவை புளிக்க வைக்க தேவை இல்லை.
உடனேயே தோசை சுடலாம்.
அடுப்பில் தோசைகல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி தோசைகல்லின் வெளி ஓரத்தில் இருந்து நடு வரை மாவை வட்டமாக ஊற்றவும்.
தோசையின் மேலும் விளிம்புகளை சுற்றியும் எண்ணெய் சொட்டு சொட்டாக விடவும்.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்களும் நடுவேயும் சிவக்க ஆரம்பிக்கும்.
தோசை வெந்து விட்டது என கொள்ளலாம்.
மென்மையாக தோசை திருப்பியால் தோசையின் மேல் தெளிக்கப்பட்ட எண்ணெயை பரப்பி விடவும்.
இவ்வாறு செய்வதால் தோசை காய்ந்து போகாமல் இருக்கும்.
இந்த தோசை ஒரு பக்கம் வெந்தால் போதுமானது.
திருப்பிப் போட தேவையில்லை.
தோசையை எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதேபோல தோசையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.
சுவையான மென்மையான குதிரைவாலி நீர் தோசை தயார்.
காரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி சாம்பார் அல்லது தக்காளி சட்னி யுடன் சுவைக்கவும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :
|
|
|
||||||
|
|
குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
குதிரைவாலி சமையல்
சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சிறுதானிய சமையல்
No comments:
Post a Comment