Search This Blog

Showing posts with label aval. Show all posts
Showing posts with label aval. Show all posts

Monday, November 23, 2015

Aval-Kesari

#அவல்கேசரி : #அவல், தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் கலந்து இனிப்பு அவல் செய்து ருசிப்பது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு அவல்  சிறிது நேரத்தில் தண்ணீர் விட்டு நசநசவென ஆகி விடும். சுவையும் மட்டுப்பட்டு விடும். அதனால் தேங்காய் பூரணம் செய்வது போல அவலை கொண்டு ஒரு இனிப்பு செய்யலாம் என முயற்சித்தேன். மிக மிக அருமையாக இருந்தது. கேசரி போல மிருதுவாகவும் சுவையாகவும் இருந்ததால் இந்த புதிய இனிப்பிற்கு அவல் கேசரி என பெயரிட்டுள்ளேன்

இனி செய்முறையை காண்போம்.

aval kesari [ rice flakes kesari ]


தேவையான பொருட்கள் :
1/2 கப்அவல்
1/2 கப்தேங்காய் துருவல்
1/2 கப் குவித்துவெல்லம் [ adjust ]
1 கப்பால், காய்ச்சி ஆற வைத்தது
1/2 Tspஏலக்காய் பொடி
1/4 Tspஜாதிக்காய் பொடி
1 Tbspநெய்
1 சிட்டிகைஉப்பு
1/2 Tspவறுத்த எள்

செய்முறை :
ஒரு சுத்தமான தட்டின் மேல் நெய்யை தடவி தயாராக வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் சூடாக்கி அவலை போட்டு சிறிது சூடேறும் வரை வறுக்கவும். இலேசாக சூடாக்கினால் போதுமானது.
மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த அவலை பாலில் கலந்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தை போட்டு 1/3 கப் தண்ணீர் விட்டு கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் முழுமையாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் இந்த வெல்ல கரைசலை வடி கட்டி எடுத்துக்கொள்ளவும்.
அதனை மிதமான தீயின் மேல் வைத்து ஊறவைத்துள்ள அவலை கலந்து விடவும்.
நன்கு கலந்து விட்டபின் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயை சேர்க்கவும்.
கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
சிறிது நேரத்தில் கெட்டிபட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்.
இந்த தருணத்தில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு தட்டில் கொட்டவும்.
தட்டை இலேசாக தட்டி தட்டி இனிப்பை சமன் படுத்தவும்.
மேலே வறுத்த எள்ளை தூவவும்.
சிறிது ஆறவைத்து பிறகு சுத்தமான ஈரமில்லாத கத்தியை கொண்டு துண்டுகள் போடவும்.

சுவையும் மணமும் நிறைந்த அவல் கேசரி தயார்.
சுவைத்து மகிழவும்.


சில இனிப்பு வகைகள் முயற்சி செய்து பார்க்க

தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை...
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை..
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்
கேழ்வரகு குழி..
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திரு..

Saturday, September 20, 2014

Aval Sakkarai Pongal

#அவல்சக்கரைபொங்கல் : சர்க்கரையை விட வெல்லம் உடலுக்கு நல்லது. வெல்லத்தை கொண்டு செய்யப்படும் இனிப்புகள் அனைத்தும் ஒரு நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
கோகுலாஷ்டமி அன்று எப்போதும்தான் அரிசி கொண்டு #சர்க்கரைபொங்கல் செய்கிறோமே, அவல் உபயோகித்து செய்து பார்க்கலாமே என்று முயற்சி செய்தேன். மிக மிக அருமையாக அமைந்தது. அதன் செய்முறையை இதோ இங்கே பதிவேற்றுகிறேன்.



தேவையான பொருட்கள் :

1/2 கப்                                   அவல்
1/4 கப்                                  பயத்தம் பருப்பு [ பச்சை பருப்பு ]
1 pinch                                  பச்சை கற்பூரம்
சிறு துண்டு                      ஜாதிக்காய், தூளாக்கி வைக்கவும்.
1 pinch                                   உப்பு
1 கப்                                     பால் [ இன்னும் அதிகமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.]
1/2 கப்                                   வெல்லம் [ தேவைக்கு ஏற்ப கூட்டி குறைக்கவும் ]
3 Tsp                                      நெய்
5                                             முந்திரி பருப்பு


செய்முறை :
அடுப்பின் மீது வாணலியை வைத்து மிதமான தீயில் சூடேற்றவும்.
பருப்பை சிவக்க வறுக்கவும். சிவக்க வறுத்த பின்னர் ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஒருமுறை கழுவிய பின்னர் குக்கரில் வேக வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தவும். அதிக தீயில் மூன்று விசில்கள் வரும் வரை வைத்திருந்து பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக வைத்த பின்னர் அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.

பருப்பை வறுத்த அதே வாணலியில் நெய் சிறிது ஊற்றி முந்திரி பருப்பை சிவக்க வறுத்தெடுக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.

பின்னர் அதே வாணலியில் 1 தேக்கரண்டி நெய் விட்டு அவலை சிவக்க வறுக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் அடுப்பில் சூடாக்கவும்.
வெல்லம் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் தண்ணீரில் முழுவதுமாக கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெல்லத்தின் மாசுக்களை நீக்க வடிகட்டி தனியே வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 1/2 கப் பாலை விட்டு சூடாக்கவும்.
பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அவலை சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
அவல் மிருதுவாகும் வரை பாலில் வேக விடவும்.

அவல் மிருதுவானவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து கிளறவும்.


இரண்டும் ஒன்றாக சேர்ந்து கலந்த பின் வடி கட்டிய வெல்ல கரைசலை சேர்த்து கலக்கவும். 1/4 கப் பாலையும் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
இல்லாவிடில் அடி பிடிக்க ஆரம்பித்துவிடும்.
கிளற கிளற பாலை உள்வாங்கி விடும்.


மறுபடியும் மீதமுள்ள பாலை சேர்த்து கிளறவும்.
ஒன்று சேர்ந்தாற்போல வரும் போது சிறிது நெய்யும் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை அணைத்த பின்னர் பச்சை கற்பூரம் சேர்த்து கலக்கவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து மேலே நெய் தடவி வைக்கவும்.


வறுத்து வைத்துள்ள முந்திரியையும் தூவி விடவும்.


சுவையான அவல் சக்கரை பொங்கல் தயார்.


சூடாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சூடு ஆறிய பிறகும் துண்டுகளாக்கி சாப்பிடலாம். சுவை இன்னும் அருமையாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!!







Saturday, September 13, 2014

Lemon Aval

#எலுமிச்சைஅவல் :  சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அவல்தான் காலை உணவாக உண்ணப்படுகிறது. அவலை இங்கு போஹா என்று அழைக்கிறார்கள். சாலையோர கடைகளில் ஆவியில் உப்பு கலந்த அவல் வெந்து கொண்டிருக்கும். அதனை ஒரு தட்டில் வைத்து வெங்காயம், உருளை கிழங்கு, கொத்தமல்லி மற்றும் ஒமப்பொடி தூவி பரிமாறப்படும். சூடாக சாப்பிட்டால் மிக மிக ருசியாக இருக்கும்.
முன்பு ஒரு பதிவில் அவல் உப்புமா காய்கறிகள் கொண்டு  செய்வது என பார்த்தோம். இப்போது அதே அவல் மற்றும் காய்கறிகள் உபயோகித்து எலுமிச்சை சேர்த்து சிறிது வித்தியாசமாக ஒரு அவல் உப்புமா செய்வதெப்படி என காணலாம்.

எலுமிச்சை அவல்


தேவையான பொருட்கள் :
1 கப்                                            கெட்டி அவல்
1/2 Tsp                                           உப்பு
2 Tsp                                             எலுமிச்சை சாறு

காய்கறிகள் :
1/4 கப்                                         காரட் மெல்லிய நீள துண்டுகளாக்கவும்
1/4 கப்                                          காலி ப்ளோவேர் துண்டுகள்
1/4 கப்                                          குடைமிளகாய் துண்டுகள்
2 Tbsp                                           கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                                    கருவேப்பிலை
6                                                    பசலை கீரை
1                                                    வெங்காயம்
4                                                    பட்டன் காளான்
2                                                    பச்சை மிளகாய்

தாளிக்க :
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
1 Tsp                                             கடலை பருப்பு
2 Tsp                                             நிலகடலை
2 Tsp                                             எண்ணெய்

தேவையான பொடிகள் :
2 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 சிட்டிகை                              பெருங்காயத்தூள்
1/2 Tsp                                         சீரகத்தூள்
1/2 Tsp  ( அட்ஜஸ்ட் )            மிளகாய்த்தூள்
1/2 Tsp                                           உப்பு

செய்முறை :
அவலை இரண்டு முறை நன்றாக கழுவி உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.அதனுடன் காலிப்ளவர், காரட் ஆகியவற்றை ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவியில் 5 முதல் 8 நிமிடங்கள் வேக விடவும்.

ஆவியில் வேகும் அவல், காலிப்ளவர், காரட்

வாணலியை மற்றொரு  அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விட்டு, சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
உளுத்தம் பருப்பையும் கடலையையும் வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காயத்தூள், மஞ்சத்தூள், மிளகாய் தூள் மற்றும் சீரக தூள் சேர்த்தவுடன் கொத்தமல்லியை போட்டு வதக்கவும்.
நீள  வாக்கில் அறிந்து பச்சை மிளகாயை சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் வெங்காயத்தை வதக்கவும்.
அடுத்து குடை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது கழுவி வெட்டி வைத்த  காளான் மற்றும் பசலை கீரையை சேர்த்து வதக்கவும்.
காளான் வதங்கிய பின்னர் தீயை குறைத்து எலுமிச்சை சாறை சேர்த்து கிளறவும்.
இப்போது ஆவியில் வெந்த அவல் காய்கறி கலவையை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். உப்பு சரி பார்க்கவும்.

அவல் காய்கறி கலவையை வெங்காயத்துடன் சேர்க்கவும்.

அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு மூடியினால் மூடி மூன்று நிமிடங்கள் அடுப்பின் சூட்டின் மேல் வைத்திருக்கவும்.
பின்னர் திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

எலுமிச்சை அவல்

சுவையான சத்து மிகுந்த எலுமிச்சை அவல் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை.







மேலும் சில சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
அவல் உப்புமா பசலை கீரை பூரி சேமியா உப்புமா சைவ ஆம்லட் சேமியா பாயசம்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


Wednesday, December 4, 2013

Aval Upma

அவல் உப்புமா : நான் தற்போது வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலம் முன்பு மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். மத்திய பிரதேசத்தில் காலை டிபன் வகைகளில் அவல் ஒன்றாகும். அதை போஹா என்று அழைக்கிறார்கள். நீராவியில் அவலை உப்புடன் வேகவைத்து அதன் மேல் வெங்காயம், வெந்த உருளை கிழங்கு மற்றும் ஓமப்பொடி தூவி கொடுக்கிறார்கள். இங்கு அவல் நன்றாக கிடைப்பதால் அடிக்கடி அவல் உப்புமாவை காய்கறிகளுடன் செய்வது வழக்கம். எப்படி என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
1 கப்                                            கெட்டி அவல்
1 Tbsp                                            ராகி அவல் ( இருந்தால் )
1/2 Tsp                                           உப்பு

காய்கறிகள் :


1 Tbsp                                          காரட் துருவியது
1 Tbsp                                           பீட்ரூட் துருவியது
1 Tbsp                                           காலி ப்ளோவேர் துண்டுகள்
1 Tbsp                                           பீன்ஸ் பொடியாக நறுக்கியது
2 Tbsp                                           கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                                    கருவேப்பிலை
6                                                    பசலை கீரை
1                                                    வெங்காயம்
4                                                    பட்டன் காளான்
2                                                    பச்சை மிளகாய்
( இங்கே இரண்டு வகையான காரட் எடுத்துள்ளேன். )

தாளிக்க :
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
2 Tsp                                             நிலகடலை
2 Tsp                                             எண்ணெய்

தேவையான பொடிகள் :
2 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 சிட்டிகை                              பெருங்காயத்தூள்
1/2 Tsp                                         சீரகத்தூள்
1/2 Tsp  ( அட்ஜஸ்ட் )            மிளகாய்த்தூள்

செய்முறை :
அவலை இரண்டு முறை நன்றாக கழுவி உப்பு சேர்த்து பிசறி இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக விடவும்.


வாணலியை மற்றொரு  அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விட்டு, சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
உளுத்தம் பருப்பையும் கடலையையும் வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காயத்தூள், மஞ்சத்தூள், மிளகாய் தூள் மற்றும் சீராக தூள் சேர்த்தவுடன் கொத்தமல்லியை போட்டு வதக்கவும்.
நீள  வாக்கில் அறிந்து பச்சை மிளகாயை சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் வெங்காயத்தை வதக்கவும்.
அடுத்து பீன்ஸ் போட்டு சிறிது நேரம் வதிக்கிய பின் மற்ற எல்லா காய்கறிகளை போட்டு வதக்கவும்.


காளானை வெட்டி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
உப்பு சேர்க்கவும். அவலில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் கவனம் தேவை.
எல்லா காய்கறிகளும் பொடியாக நறுக்கியுள்ளதால் வதக்கும் போதே வெந்து விடும். இல்லையென்றால் சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்.
ஆவியில் வைத்த  அவல்  8 முதல் 10 நிமிடங்களுக்குள் வெந்திருக்கும்.
அதை வாணலியில் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடியால் வாணலியை மூடவும்.
அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
சுவையான அவல் உப்புமா தயார்.

பிறகு எடுத்து பரிமாறவும்.


தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை.

சிறிது புளிப்பு சுவை தேவை என்றால் அடுப்பை அணைத்ததும் 1 Tsp எலுமிச்சை சாரை ஊற்றி கிளறி விடவும்.





மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
வரகரிசி உப்புமா
வரகரிசி
உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
பாப்பரை அரிசி உப்புமா
பாப்பரை
அரிசிஉப்புமா