Search This Blog

Saturday, January 31, 2015

Kuthiraivaali-Sakkarai-Pongal

#குதிரைவாலிசக்கரைபொங்கல் : #குதிரைவாலி #சிறுதானியங்கள் வகைகளுள் ஒன்று. அரிசி மற்றும் கோதுமையை ஒப்பிடும் போது குதிரைவாலியில் அதிக நார் சத்து நிரம்பியுள்ளது.
குதிரைவாலியை ஆங்கிலத்தில் Barnyard millet என அழைக்கப்படுகிறது.
இனி குதிரைவாலி சக்கரை பொங்கல் எவ்வாறு செய்யலாம் என காணலாம்.


குதிரைவாலி சக்கரை பொங்கல்


தேவையான பொருட்கள் :
1/2 கப் குதிரைவாலி அரிசி
1/4 கப் பயத்தம் பருப்பு
1/2 கப்பால்
1 சிட்டிகைஉப்பு 
1 கப்வெல்லம் [ adjust ]
4ஏலக்காய்
சிறு துண்டு ஜாதிக்காய்
2 Tspசர்க்கரை
1 சிட்டிகைபச்சை கற்பூரம் [ Edible Camphor ]
4 Tspநெய்
4 - 5முந்திரி பருப்பு
5 - 6பாதாம் பருப்பு
செய்முறை :
சக்கரை பொங்கல் செய்ய துவங்குவதற்கு 5 அ 6 மணி நேரம் முன்பே பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைக்கவும்.
பொங்கல் செய்ய துவங்குவதற்கு முன்பு ஊறிய பாதாம் பருப்பின் தோலை நீக்கி விட்டு சிறு துகள்களாக நறுக்கி தனியே வைக்கவும்.

சக்கரையுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை பொடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியையும் பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு கழுவி 2 கப் தண்ணீர் மற்றும்  1/2 கப் பால் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு குதிரைவாலி-பருப்பு உள்ள பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி வேக விடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும். 
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை நசுக்கி போடவும்.
மிதமான தீயில் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் கரைந்ததும் மாசுக்களை நீக்க வடி கட்டவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய்யில் முந்திரியை சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

ஆவி அடங்கி குக்கரை திறந்ததும் அடுப்பை மறுபடியும் பற்ற வைத்து ஒரு அடி கனமான  பாத்திரத்தை சிறிய தீயின் மேல் வைக்கவும்.
வெந்த அரிசி பருப்பை சேர்த்து கரண்டியால் நன்கு மசித்தவாறு கிளறவும்.
இப்போது வெல்லம் கலந்த தண்ணீரை சேர்க்கவும்.
கை விடாமல் நன்கு கிளறவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய்-ஜாதிக்காய் பொடியையும் நெய்யையும் 
பிறகு ஊறவைத்து நறுக்கி வைத்துள்ள பாதாம் பருப்பு துகள்களையும் சேர்த்து  கிளறவும்.

அடுப்பை அணைத்து விட்டு பச்சை கற்பூரம் நுணுக்கி போட்டு கலந்து விடவும்.
பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் குதிரைவாலி சக்கரை பொங்கல் எடுத்து வைக்கவும்.
குதிரைவாலி சக்கரை பொங்கல்
குதிரைவாலி சக்கரை பொங்கல் குதிரைவாலி சக்கரை பொங்கல்

கிண்ணத்தில் எடுத்து வைத்து வறுத்த முந்திரியால் அலங்கரித்து நெய் விட்டு சுவைக்கவும்.

குதிரைவாலி சக்கரை பொங்கல்

நெய்யை மேலே விட்டு சூடாக இருக்கும் போதே சுவைத்தால் ருசி அபாரமாக இருக்கும்.




மற்ற சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்ய
தினை பொட்டுக்கடலை உருண்டை
தினை பொட்டுக்கடலை
வரகரிசி திருவாதிரை களி
வரகரிசி திருவாதிரை களி
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை இனிப்பு குழி பணியாரம்
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு


மற்ற சிறுதானிய சமையல் குறிப்பிற்கு

சிறுதானிய சமையல் வகைகள்





No comments:

Post a Comment