#முருங்கைகீரைசாதம் : நாம் அனைவரும் காரட்டில்தான் மிக அதிக அளவில் வைட்டமின் A நிறைந்துள்ளது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் காரட் சத்து மிகுந்தது என்று எண்ணி வாங்கி சமையலில் உபயோகப்படுத்துகிறோம்.
உண்மையில் முருங்கைகீரையில் காரட்டில் உள்ள வைட்டமின் A அளவை காட்டிலும் நான்கு மடங்கு அதிக அளவில் உள்ளது. மிகவும் எளிதாக கிடைக்ககூடியதும் ஆகும்.
முருங்கைகீரையை பொரியலோ அல்லது கூட்டோ பொதுவாக செய்வது வழக்கம். வேறு முறையில் மாற்றி சமைக்கும் போது எல்லோரும் கீரையா என முகம் சுளிக்காமல் சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.
இனி முருங்கைகீரை சாதம் செய்வது எப்படி என காண்போம்.
தேவையான பொருட்கள் :
1/2 cup பச்சரிசி
1 வெங்காயம், நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
15 or 20 பற்கள் பூண்டு, பொடியாக நறுக்கவும்.
2 அ 3 சிகப்பு மிளகாய்
1 or 2 பச்சை மிளகாய், இரண்டாக கீறிக்கொள்ளவும்
1/2 கப் முருங்கைகீரை [ Drumstick leaves ]
1கப் தேங்காய் பால்
1 Tsp உப்பு [ adjust ]
தாளிக்க :
1 Tsp சீரகம்
3 Tsp நல்லெண்ணெய் [ till / sesame oil ]
செய்முறை :
அரிசியை ஒரு முறை களைந்து கழுவிய பின்னர் தண்ணீரில் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு அடுப்பின் மீது வைத்து சூடாக்கவும்.
சீரகம் வெடிக்க விட்ட பின்னர் சிகப்பு மிளகாயை துண்டுகளாக்கி சேர்த்து சில மணித்துளிகள் வறுக்கவும்.
அடுத்து பூண்டு சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஊறுகின்ற அரிசியிலிருந்து முழுவதுமாக தண்ணீரை வடித்து விடவும். அடுப்பின் தீயை பெரியதாக்கிய பின்னர் அரிசியை சேர்க்கவும்.
30 வினாடிகள் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பின்னர் தீயை குறைத்து கிளறவும்.
அரிசி நன்கு வெள்ளையாக நிறம் மாறும் வரை வறுக்கவும்.
அரிசி நன்கு வெள்ளையாக நிறம் மாறியதும் முருங்கைகீரையையும் தேங்காய் பாலையும் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
மூடி வெயிட் பொருத்தி அதிக தீயில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விட்ட பின் அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி அடங்கிய பின்னரே திறக்க வேண்டும்.
பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து காரட் சாலட் அல்லது தயிர்பச்சடி வைத்து பரிமாறவும்.
மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

No comments:
Post a Comment