#வாழைப்பூபொரியல் : நாம் உண்ணும் உணவு ஆறு சுவைகளை உடையதாக இருக்க வேண்டும். ஆறு சுவைகள் யாதெனின் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகியவையாகும்.
இதில் துவர்ப்பு சுவையுடைய உணவுப் பொருட்கள் மிக சிலவே ஆகும்.
அதில் #வாழைப்பூ வும் ஒன்றாகும்.
இங்கு வாழைப்பூவை கொண்டு மிக எளிதான மேலும் துவர்ப்பு சுவை மேலோங்கியதான ஒரு பொரியல் செய்வதெப்படி என காணலாம்.
செய்முறை :
வாழைப்பூவின் நடுவே இருக்கும் காம்பை நீக்கி சுத்தப்படுத்தவும்.
சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர்க்க கரைத்த மோர் அல்லது தண்ணீரில் போட்டு வைக்கவும். இல்லாவிடின் கருத்து விடும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பையும் சேர்க்கவும்.
மஞ்சத்தூளையும் சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் வெட்டி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறவும்.
தண்ணீர் சுண்டியவுடன் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
வாழைப்பூ பொரியல் தயார். சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் சுவைக்கவும்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

தேவையான பொருட்கள் : | |
---|---|
1 கப் | வாழைப்பூ பொடியாக நறுக்கியது |
3 Tsp | தேங்காய் துருவல் |
1/4 கப் | வெங்காயம் வெட்டியது |
2 சிட்டிகை | மஞ்சத்தூள் |
6 or 7 | கறுவேப்பிலை |
1 or 2 | சிகப்பு மிளகாய் |
1/2 Tsp | கடுகு |
1/2 Tsp | உளுத்தம் பருப்பு |
1/2 Tsp | உப்பு |
1 Tsp | எண்ணெய் |
வாழைப்பூவின் நடுவே இருக்கும் காம்பை நீக்கி சுத்தப்படுத்தவும்.
சிறு சிறு துண்டுகளாக வெட்டி நீர்க்க கரைத்த மோர் அல்லது தண்ணீரில் போட்டு வைக்கவும். இல்லாவிடின் கருத்து விடும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பையும் சேர்க்கவும்.
மஞ்சத்தூளையும் சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் வெட்டி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறவும்.
தண்ணீர் சுண்டியவுடன் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
வாழைப்பூ பொரியல் தயார். சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் சுவைக்கவும்.
சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக
No comments:
Post a Comment