#வாங்கிபாத் - #கத்தரிக்காய்சாதம் : வாங்கி பாத் கர்நாடகாவில் மிக பிரபலமானது. இந்த கலந்த சாதம் கத்திரிக்காயை வதக்கி பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மசாலா பொடியுடன் சேர்த்து கலந்து செய்யப் படுவது ஆகும்.
நான் இந்த சாதம் செய்ய அரைத்து விட்ட குழம்பு பொடி யை உபயோகப் படுத்தினேன். ருசியும் மணமும் மிக மிக அருமையாக இருந்தது.
இனி எவ்வாறு செய்யலாம் என காணலாம்.
செய்முறை :
அரிசியை களைந்து குக்கரில் போடவும்.
1/2 கப் அரிசிக்கு 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து அதிகமான தீயில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின் அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
இரண்டு மூன்று தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலக்கி காற்றாடியின் கீழ் வைத்து ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் மஞ்சத்தூள், வெங்காயம் மற்றும் வெங்காய தாள் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
கத்தரிக்காயை ஒரே அளவுள்ள துண்டுகளாக வெட்டி சேர்த்து வதக்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்திற்கும் கத்தரிக்காயிற்கும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
தட்டினால் மூடி கத்தரிக்காய் வேகும் வரை குறைந்த தீயில் வேக விடவும்.
அவ்வப்போது மூடியை திறந்து கிளறி விடவும்.
கத்தரிக்காய் வெந்தவுடன் அரைத்து விட்ட குழம்பு பொடி மற்றும் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
நன்கு கிளறி விடவும். தேங்காயின் ஈரப்பதம் குறைந்து இலேசாக அதன் மணம் வெளிப்படும் போது சாதத்திற்கு தேவையான உப்பை சேர்த்து கலக்கி விடவும்.
தேவையானால் இன்னும் சிறிது அளவு உப்பு மற்றும் அரைத்து விட்ட குழம்பு பொடி சேர்த்து கலந்து விடவும்.
ஆற வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
உப்பு சரி பார்த்த பின் அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான வாங்கி பாத் தயார்!!
பிடித்தமான கறி மற்றும் தயிர் பச்சடியுடன் சுவைத்து உண்ணவும்.
மதிய உணவிற்கும் டப்பாவில் அடைத்து எடுத்து செல்ல அருமையான உணவு.

தேவையான பொருட்கள் : | |
---|---|
1/2 Cup | பச்சரிசி |
3 or 4 | கத்தரிக்காய் |
3 or 4 | வெங்காயம், நீளவாக்கில் வெட்டவும் |
1/4 Cup | வெங்காய தாள் [Optional] |
1/4 Cup | தேங்காய் துருவல் |
3 or 4 Tsp | நல்லெண்ணெய் |
3 or 4 Tsp | அரைத்து விட்ட குழம்பு பொடி |
1/4 Tsp | மஞ்சத்தூள் |
தாளிக்க | |
2 or 3 | சிகப்பு மிளகாய் |
1 Tsp | கடுகு |
1 Tsp | உளுத்தம் பருப்பு |
2 Tsp | நல்லெண்ணெய் |
செய்முறை :
அரிசியை களைந்து குக்கரில் போடவும்.
1/2 கப் அரிசிக்கு 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து அதிகமான தீயில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின் அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
இரண்டு மூன்று தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலக்கி காற்றாடியின் கீழ் வைத்து ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் மஞ்சத்தூள், வெங்காயம் மற்றும் வெங்காய தாள் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
கத்தரிக்காயை ஒரே அளவுள்ள துண்டுகளாக வெட்டி சேர்த்து வதக்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்திற்கும் கத்தரிக்காயிற்கும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
தட்டினால் மூடி கத்தரிக்காய் வேகும் வரை குறைந்த தீயில் வேக விடவும்.
அவ்வப்போது மூடியை திறந்து கிளறி விடவும்.
கத்தரிக்காய் வெந்தவுடன் அரைத்து விட்ட குழம்பு பொடி மற்றும் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
நன்கு கிளறி விடவும். தேங்காயின் ஈரப்பதம் குறைந்து இலேசாக அதன் மணம் வெளிப்படும் போது சாதத்திற்கு தேவையான உப்பை சேர்த்து கலக்கி விடவும்.
தேவையானால் இன்னும் சிறிது அளவு உப்பு மற்றும் அரைத்து விட்ட குழம்பு பொடி சேர்த்து கலந்து விடவும்.
ஆற வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
உப்பு சரி பார்த்த பின் அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான வாங்கி பாத் தயார்!!
பிடித்தமான கறி மற்றும் தயிர் பச்சடியுடன் சுவைத்து உண்ணவும்.
மதிய உணவிற்கும் டப்பாவில் அடைத்து எடுத்து செல்ல அருமையான உணவு.
No comments:
Post a Comment