#சர்க்கரைபொங்கல் : பொதுவாக பொங்கல் தினத்தன்றும் மற்ற விஷேச தினங்களிலும் சர்க்கரை பொங்கல் செய்வது வழக்கம். கோவில் திருவிழாக்களில் பிரத்தியேகமாக சர்க்கரை பொங்கல் பொங்கி வழிபடுவது வழக்கமாக உள்ளது. தமிழகத்திலும் மற்றும் சில அண்டை மாநிலங்களில் கோவில்களில் தினமும் கடவுளுக்கு சர்க்கரை பொங்கல் படைத்து நைவேத்தியம் செய்வதை முறையாக கொண்டிருக்கிறார்கள். பிறகு அவற்றை பிரசாதமாக பக்தர்களுக்கு அளிப்பார்கள். இந்த சர்க்கரை பொங்கல் பிரசாதம் சாப்பிடுவதற்கென்றே கோவிலுக்கு செல்பவர்களும் உண்டு!!
இங்கு இப்போது சர்க்கரை பொங்கல் செய்யும் விதத்தை விளக்கவிருக்கிறேன்.
இங்கு இப்போது சர்க்கரை பொங்கல் செய்யும் விதத்தை விளக்கவிருக்கிறேன்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
3/4 கப் | பச்சரிசி |
1/4 கப் | பயத்தம் பருப்பு |
1/2 கப் | பால் |
1 | வாழைப்பழம் [ விரும்பினால் ] |
1 சிட்டிகை | உப்பு |
1 1/4 கப் | வெல்லம் [ adjust ] |
4 | ஏலக்காய் |
a small piece | ஜாதிக்காய் |
2 Tsp | சர்க்கரை |
1 pinch | பச்சை கற்பூரம் |
4 Tsp | நெய் |
4 - 5 | முந்திரி பருப்பு |
10 - 15 | உலர்ந்த திராட்சை |
செய்முறை :
சர்க்கரை, ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை பொடித்து வைக்கவும்.
ஒரு குக்கரில் 3 1/2 கப் தண்ணீர் மற்று 1/2 கப் பால் விட்டு அடுப்பில் சூடாக்கவும்.
வாழைப் பழத்தை துண்டுகளாக்கி குக்கரில் சேர்க்கவும்.
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் இட்டு கழுவி தனியே வைக்கவும்.
பால் தண்ணீர் கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியையும் பருப்பையும் சேர்க்கவும்.
ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி வேக விடவும்.
மூன்று விசில் வந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை நசுக்கி போடவும்.
மிதமான தீயில் கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
வெல்லம் கரைந்ததும் மாசுக்களை நீக்க வடி கட்டவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய்யில் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை தனித்தனியாக சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
ஆவி அடங்கி குக்கரை திறந்ததும் அடுப்பை மறுபடியும் பற்ற வைத்து குக்கரை சிறிய தீயின் மேல் வைக்கவும்.
வெந்த அரிசி பருப்பை கரண்டியால் நன்கு மசித்தவாறு கிளறவும்.
இப்போது வெல்லம் கலந்த தண்ணீரை சேர்க்கவும்.
கை விடாமல் நன்கு கிளறவும்.
ஒன்றாக சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய்-ஜாதிக்காய் பொடியையும் நெய்யையும் சேர்த்து கிளறவும்.
பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து கிண்டவும்.
அடுப்பை அணைத்து விட்டு பச்சை கற்பூரம் நுணுக்கி போட்டு கலந்து விடவும்.
பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பின்னர் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
கிண்ணத்தில் எடுத்து வைத்து நெய் விட்டு சுவைக்கவும்.
நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ReplyDelete