#பப்பாளிக்காய்முள்ளங்கிபருப்புசாலட் : சென்ற பதிவில் பப்பாளிக்காய் காரட் சாலட் செய்வது எப்படி என பார்த்தோம்.
பப்பாளிக்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இங்கு முள்ளங்கியுடன் ஒரு வித்தியாசமான சாலட் செய்யும் முறையை காண்போம்.
செய்முறை :
பப்பாளிக்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இங்கு முள்ளங்கியுடன் ஒரு வித்தியாசமான சாலட் செய்யும் முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1 cup | பப்பாளிக்காய் துருவியது |
1/4 cup | முள்ளங்கி துருவியது |
1/8 cup | பயத்தம் பருப்பு |
1 or 2 | பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது [ adjust ] |
1 Tsp | கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது |
1 Tsp | எலுமிச்சை சாறு [ adjust ] |
3/4 Tsp | உப்பு [ Adjust ] |
ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு முறை கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
அதனுடன் துருவிய பப்பாளிக்காய், முள்ளங்கி மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி சுமார் 20 நிமிடங்கள் தனியே எடுத்து வைக்கவும்.
முள்ளங்கியிலிருந்து வெளி வரும் தண்ணீரில் பருப்பு நன்கு ஊறி விடும்.
20 நிமிடங்களுக்கு பின்னர் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
முள்ளங்கி இலை அல்லது கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும்.
மதிய உணவின் போது அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சுவைக்கலாம்.
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment