#பூண்டுதக்காளிசட்னி : ஒரு கார சாரமான சட்னி செய்முறையை காணலாம். மைக்ரோவேவில் இந்த சட்னிக்கு தேவையான பொருட்களை வறுத்து எடுப்பது எப்படி என்றும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
2 | தக்காளி |
8 | சிகப்பு மிளகாய் |
12 | பூண்டு பற்கள் |
கோலிகுண்டு அளவு | புளி |
1 1/2 Tsp | உப்பு [ adjust ] |
தாளிக்க : | |
1/2 Tsp | கடுகு |
1 Tsp | உளுத்தம் பருப்பு |
1/4 Tsp | பெருங்காயத்தூள் |
10 | கறுவேப்பிலை |
2 Tsp | எண்ணெய் |
செய்முறை :
ஒரு மைக்ரோவேவில் வைக்கக்கூடிய பீங்கான் அல்லது கண்ணாடி கிண்ணத்தில் சிகப்பு மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
ஓரிரு துளிகள் எண்ணெய் விட்டு தடவி மைக்ரோவேவ் HIGH -ல் 1 நிமிடம் வறுக்கவும்.
வறுபட்டதை ஒரு தட்டிற்கு மாற்றவும்.
அதே கிண்ணத்தில் பூண்டு பற்களை போட்டு 2 துளிகள் எண்ணெய் விட்டு
முன்பு போலவே மைக்ரோவேவ் HIGH -ல் 1 நிமிடம் சூடு பண்ணவும்.
பூண்டு இலேசாக சிவந்து வெந்து விட்டால் வறுபட்ட மிளகாய் உள்ள தட்டில் எடுத்து வைக்கவும்.
இல்லையெனில் மேலும் சில மணித் துளிகள் வைத்து எடுக்கவும்.
தட்டிற்கு மாற்றிய பிறகு தக்காளியை துண்டுகளாக்கி அதே கிண்ணத்தில் போட்டு சில துளிகள் எண்ணெய் விட்டு கலக்கவும்.
மைக்ரோவேவ் HIGH -ல் 1 நிமிடம் வேக விடவும்.
ஆற வைத்த பிறகு மிக்சியில் மைக்ரோவேவ் செய்த பொருட்கள், உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்த பின்னர் பெருங்காயம் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
காரம் அதிகமாக இருப்பதால் சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.
குறிப்பு :
மைக்ரோவேவ் இல்லாவிடின் வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாக வறுத்து மற்றும் வதக்கி எடுக்கவும்.
சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :
- கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
- படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.
No comments:
Post a Comment