#புதினாதயிர்சட்னி : ஹோட்டலில் அல்லது இரவு விருந்துகளில் சாப்பாட்டிற்கு முன் சாப்பிடக் கூடிய எண்ணெயில் பொரித்த சிற்றுண்டிகளுக்கு தொட்டுக்கொள்ள ஒரு பச்சை நிற சட்னி கொடுப்பார்கள். கட்லட், கபாப், போன்றவற்றுடன் சாப்பிட இந்த சட்னி மிக அருமையாக இருக்கும். இந்த #சட்னி #புதினா மற்றும் தயிர் கொண்டு செய்யப்படும் சட்னி ஆகும். இதன் செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1 கப் | புதினா [ Mint ] |
1/2 கப் | கொத்தமல்லி தழை |
1/3 கப் | கெட்டி தயிர் |
7 to 8 | பச்சை மிளகாய் |
8 to 10 | சின்ன வெங்காயம் |
சிறு துண்டு | இஞ்சி |
3/4 Tsp | உப்பு [ adjust ] |
1 to 2 Tsp | எலுமிச்சை சாறு [ adjust ] |
செய்முறை :
தயிரை தேக்கரண்டி கொண்டு அடித்து கலக்கி வைக்கவும்.
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு நீங்கலாக மற்ற அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
மற்றும் சுவைக்கு ஏற்றவாறு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
மற்றும் சுவைக்கு ஏற்றவாறு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
தோசை, பொங்கல் ஆகியவற்றிற்கும் ஏற்ற சட்னி ஆகும்.
செய்து சுவைத்து பார்க்கவும்.
மேலும் முயற்சி செய்து பார்க்க
உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
ReplyDeleteஅறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/
மனோ சாமிநாதன்,
Deleteஎனது வலைதளத்தை வலைசரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி.
தொடர்கிறேன்... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன்,
Deleteதங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது.
நன்றி.