Search This Blog

Showing posts with label kevuru. Show all posts
Showing posts with label kevuru. Show all posts

Tuesday, April 7, 2015

Kaezhvaragu-Inippu-Kuzhi-Paniyaram

#கேழ்வரகுஇனிப்புகுழிபணியாரம் : #கேழ்வரகு #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. கேழ்வரகை கேப்பை என்றும் கேவுரு என்றும் பேச்சு வழக்கில் கூறப்படுகிறது. இந்த சிறு தானியத்தை பொதுவாக #ராகி என்றும் #FingerMillet என்றும் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
கேழ்வரகில் அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. புரதம், இரும்பு சத்து, நார்சத்து, பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் கொண்டுள்ளது.
இத்தகைய இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ள கேழ்வரகை தினமும் நமது உணவில் ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
இன்று இதனை கொண்டு ஒரு இனிப்பு பணியாரம் செய்யும் முறையை காண்போம்.

12 முதல் 15 குழி பணியாரம் தயாரிக்கலாம்.

கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்


தேவையான பொருட்கள் :
3/4 கப்கேழ்வரகு மாவு [கேவுரு மாவு ]
1/2 கப்ரவா [ Sooji ]
1 Tbspபாப்பரை மாவு [ buckwheat flour ]*
2வாழைப்பழம் பழுத்தது
1/2 cupவெல்லம் [ அட்ஜஸ்ட் ]
2ஏலக்காய்
சிறு துண்டுஜாதிக்காய்
ஒரு சிட்டிகைஉப்பு
2 சிட்டிகைசமையல் சோடா

குழிபணியாரம் சுட்டெடுக்க தேவையான நல்லெண்ணெய் மற்றும் நெய்.

*பாப்பரை மாவுக்கு பதில் கோதுமை மாவை உபயோகப்படுத்தலாம்.

செய்முறை :
ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை தூளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு கரண்டி கொண்டு கலக்கி வெல்லத்தை கரைத்து விடவும்.
வடிகட்டி ஆற விடவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, ரவா, பாப்பரை மாவு, உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
அதில் தயார் செய்து வைத்துள்ள வெல்ல கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் ரவா ஊறிய பிறகு இட்லி மாவு பதத்திற்கு வந்து விடும்.
வாழை பழத்தை மிக்ஸியில் கூழாக அரைத்து மாவில் சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
கரைத்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பில் குழி பணியாற கல்லை மிதமான தீயில் சூடாக்கவும்.

ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் 1/4 தேக்கரண்டியும் நெய் 1/4 தேக்கரண்டியும் விடவும்.
மாவில் ஏலக்காய்-ஜாதிக்காய் பொடி மற்றும் சமையல் சோடாவை சேர்த்து கலக்கவும்.
குழிபணியார கல் சூடானதும் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும்.
ஊற்றிய மாவின் மேல் எண்ணெய் நெய் கலவையை ஓரிரண்டு சொட்டுகள் விடவும்.
ஓரங்கள் சிவக்க ஆரம்பித்ததும் ஒரு தேக்கரண்டியால் குழி பணியாரத்தை திருப்பி விடவும்.
இரு பக்கமும் நன்கு சிவக்க வெந்தவுடன் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் எண்ணெய்-நெய் கலவையை விட்டு மாவு நிரப்பி மீண்டும் ஒரு ஈடு குழி பணியாரம் சுட்டெடுக்கவும்.
Ragi Sweet Kuzhi Paniyaram
Ragi Sweet Kuzhi Paniyaram கேழ்வரகு இனிப்பு குழிபணியாரம்
கேழ்வரகு இனிப்பு குழிபணியாரம்
கேழ்வரகு இனிப்பு குழிபணியாரம்
சூடாக பரிமாறவும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை.
ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
மிக மிக சத்தான சுவையான கேழ்வரகு இனிப்பு குழி பணியாரத்தை செய்து பலனடையவும்!!







மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க 

கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு தோசை - ராகி தோசை
கேழ்வரகு அடை [ ராகி அடை ]
கேழ்வரகு அடை - ராகி அடை
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு - ராகி புட்டு 
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு




Saturday, February 7, 2015

Kaezhvaragu-Koozh

#கேழ்வரகுகூழ் : #கேழ்வரகு கொண்டு தோசை மற்றும் பணியாரம் செய்யும் முறையை முன்பு பார்த்திருக்கிறோம். இங்கு மிக எளிமையானதும் சுவையானதும் ஆகிய கூழை எவ்வாறு காய்ச்சுவது என்று காண்போம்.

கேழ்வரகு கூழ்

தேவையான பொருட்கள் :
1 Tbsp குவித்துகேழ்வரகு மாவு
1 கப் தண்ணீர்
1/2 Tspஉப்பு
1/2 Tspகடுகு
6 - 8கறுவேப்பிலை
2 - 3சின்ன வெங்காயம்
2 pinchபெருங்காய தூள்
1 Tspஎண்ணெய்
சிறிது கொத்தமல்லி தழை மேலே தூவ
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு 1 கப்  தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.


பின்னர் மிதமான தீயில் சூடாக்கவும்.
ஒரு கரண்டியால் கை விடாமல் கலக்கிகொண்டே இருக்கவும்.
 சில நிமிடங்கள் கழித்து மாவு வெந்து பளபளப்பாக மாற ஆரம்பிக்கும்.
நிறமும் ஆழ்ந்த நிறத்திற்கு மாறும்.
கஞ்சி பதத்தை அடைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
உப்பு சேர்த்து  கலக்கி ஆற விடவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு சேர்த்து வெடிக்கவிட்ட பின்னர் பெருங்காய தூள் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை தயாரித்து வைத்துள்ள கூழில் கொட்டவும்.
நன்கு ஆற வைக்கவும்.
பரிமாறுவதற்கு முன் தயிர், சில கொத்தமல்லி தழைகள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பருகவும்.
சுவையான கேழ்வரகு கூழ் தயார்!!!

கேழ்வரகு கூழ்


தினமும் முதல் நாள் இரேவே தயாரித்து வைத்து  மறுநாள் காலை காபி / டீ கு பதில் அருந்தி வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.





மேலும் சில சமையல் குறிப்புகள்
கம்பு கூழ் கோதுமை ரவா கஞ்சி குதிரைவாலி வெந்தய கஞ்சி






Thursday, January 2, 2014

Ragi Dosai

#கேழ்வரகுதோசை : #கேழ்வரகு என்பதை பேச்சு வழக்கில் கேவுரு என்றும் கேப்பை என்றும் சொல்லப் படுகிறது. ஆங்கிலத்தில் Ragi என்றும் Finger Millet என்றும் அழைக்கப்படுகிறது. கேழ்வரகு சிறுதானியம் வகைகளில் ஒன்றாகும். கேழ்வரகு மாவிலிருந்து கூழ், அடை , களி மற்றும் தோசை போன்ற உணவு வகைகளை செய்யலாம். தற்போது கடைகளில் கேழ்வரகு அவல் , உடனே செய்யக்கூடிய இடியாப்பம் போன்றவையும் கிடைகின்றன.
சிறுதானிய வகைகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தவும்.

Millets - சிறுதானிய வகைகள் 

குறிப்பாக கேழ்வரகில் சுண்ணாம்பு ( கால்சியம் - Calcium ) சத்து மற்ற தானியங்களை விட அதிக அளவில் உள்ளது.

இனி தோசை எவ்வாறு செய்வது என பார்ப்போம் .
கொடுக்கப்பட்டுள்ள அளவு 10 முதல் 12 தோசைகள் செய்ய போதுமானது.

கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                   கேழ்வரகு மாவு
1/4 கப்                                    கோதுமை மாவு
1/2 கப்                                   தோசை அல்லது இட்லி மாவு
1/2 Tsp                                     உப்பு

மாவில் சேர்க்க :
1 அ 2 Tbsp                             வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 Tbsp                                      குடை மிளகாய்  பொடியாக நறுக்கியது ( இருந்தால் )
1 Tbsp                                      காரட் துருவியது ( இருந்தால் )
10 அ 15                                  கருவேப்பிலை  பொடியாக நறுக்கியது
1 Tsp                                        பச்சை மிளகாய்  பொடியாக நறுக்கியது
1 Tsp                                       சீரகம்
1 Tsp                                       கடுகு
எண்ணெய் தோசை சுடுவதற்கு தேவையான அளவு.

செய்முறை : 
கொடுக்கப்பட்டுள்ள எல்லா மாவையும் 1 கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
கரைத்த மாவை 1/2 மணி நேரம் ஊற விடவும்.
பிறகு அதில் சேர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் கடுகு நீங்கலாக சேர்த்து கலக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி என்னை விட்டு கடுகை வெடிக்க விட்டு மாவில் சேர்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் மிதமான தீயில் சூடேற்றவும்.
எண்ணெய் 1/2 Tsp கல்லின் மேல் ஊற்றி தடவி விடவும்.
தோசை மாவை கரண்டியில் எடுத்து தோசைகல்லில் ஊற்றவும்.
மாவை சுற்றி முதலில் ஊற்றி நடுவுக்கு வர வேண்டும்.
தோசை சுடும் முறை  யை காணவும்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக வெந்து கொண்டிருக்கும் தோசை மேல் விடவும்.
தோசையின் ஓரம் இலேசாக சிவந்து வரும் போது தோசை திருப்பியினால் திருப்பி சுட்டு எடுக்கவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பின் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ] கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]

தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
மற்ற சட்னி வகைகளும் இட்லி மிளகாய் பொடியும் கூட இந்த தோசையுடன்  நன்றாக இருக்கும்.

குறிப்பு :  இட்லி அல்லது தோசை மாவுக்கு பதிலாக 1/4 கப் தயிர் மற்றும் 1/4 கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
கோதுமை மாவுக்கு பதிலாக மைதா உபயோகப்படுத்தலாம்.




முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்

கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு
குழிபணியாரம்
கேழ்வரகு அடை [ ராகி அடை ]
கேழ்வரகு அடை
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு
கம்பு தோசை
கம்பு தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை


தொட்டுக்க சட்னி வகைகள்


Saturday, December 28, 2013

Ragi Adai

#கேழ்வரகுஅடை : #கேழ்வரகு என்பதை பேச்சு வழக்கில் #கேவுரு என்றும் #கேப்பை என்றும் அழைப்படுகிறது. ஆங்கிலத்தில் பொதுவாக #Ragi என அழைக்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் #FingerMillet  என்று பெயர்.
என் அம்மா அடிக்கடி இந்த #அடை செய்வது உண்டு. கேழ்வரகு மாவை கொண்டு கார அடையும் இனிப்பு அடையும் செய்யலாம். கார அடை செய்த அன்றே சாப்பிட்டு விடுவது நல்லது. வெங்காயம் சேர்த்து செய்வதால் கெட்டு போய் விடும் அபாயம் உண்டு. ஆனால் இனிப்பு அடையை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்து சாப்பிடலாம்.
நான் இந்த கார கேவுரு அடையை டிபனாக செய்து மிகுந்த நாட்களாகி விட்டது. உண்மையாக சொன்னால் மறந்தே போய் விட்டேன். சென்ற வாரம் என் மகள் தான் கேவுரு அடை செய்ததாக சொன்னாள். அவள் சொன்னபிறகுதான் நாமும் செய்யலாமே என்று இரு தினங்களுக்கு முன் செய்தேன்.

கேழ்வரகு அடை [ ராகி அடை ]

இனி கேவுரு கார அடையை செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1 கப்                              கேழ்வரகு மாவு
1 Tbsp                            ஓட்ஸ் [ விரும்பினால் ]
1 Tsp                              எண்ணெய்
1/2 Tsp                           எள்ளு
1/2 Tsp                           சீரகம்
1/4 Tsp                           ஓமம் ( விருப்பப்பட்டால் )
1/4 Tsp                           பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் )
1                                     பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கவும்  )
2 அ  3                            பச்சை மிளகாய் ( பொடியாக நறுக்கவும் )


1 Tbsp                            காரட் துருவியது
1/2 Tsp                           உப்பு ( அட்ஜஸ்ட் )
15                                   கருவேப்பிலை (  பொடியாக நறுக்கவும்  )
4Tsp                               கொத்தமல்லி தழை  பொடியாக நறுக்கியது

தேவையான அளவு எண்ணெய் அடை சுடுவதற்கு.

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
கையினால் ஒன்றாக சேர்த்து பிசறி விடவும்.


பிறகு மிக மிக மிதமான சுடு தண்ணீரை ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
சிறிது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
மாவு தயார்.


இனி தோசை கல்லில் அடை எப்படி சுடுவது என பார்ப்போம்.
ஒரு சுத்தமான  வாழை இல்லை அல்லது பிளாஸ்டிக் தாள் எடுத்துக்கொள்ளவும். நான் தாள் எடுத்துக் கொண்டேன்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
தாளின் மேல் எண்ணெய் தடவவும்.
ஒரு உருண்டை மாவை தாளின் மேல் வைக்கவும்.
கை விரல்களிலும் எண்ணெய் தடவிக் கொண்டு அடை தட்டவும்.


ஒரே மாதிரி தடிமனாக தட்ட வேண்டும்.
சூடான கல்லில் எண்ணெய் விட்டு தட்டி வைத்த அடையை கவனமாக எடுத்து போடவும்.
அடையின் மேல் 1/2 Tsp எண்ணெய் பரவலாக ஊற்றவும்.

கேழ்வரகு அடை [ ராகி அடை ]

திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொன்றாக தட்டி சுட்டு எடுத்து அடுக்கவும்.

இதில் காரம் சேர்த்திருப்பதால் ஏதும் தொட்டுக் கொள்ள தேவையே இல்லை.


தேவையானால் தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.






முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் :

கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]