Search This Blog

Monday, September 5, 2016

Dosai-Varieties

#தோசை வகைகள் : தமிழ் நாட்டில் பாரம்பரியமாக செய்யப்படும் சிற்றுண்டிகளில் ஒன்று தோசை. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணப்படுவது தோசை. ஒரே மாவை உபயோகப்படுத்தி செய்யப்படும் உணவு இட்லியும் தோசையும் ஆகும். ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் இட்லியைக் காட்டிலும் தோசை கல்லில் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கப் படும் தோசையின் ருசிக்கு அடிமையானவர்கள் பல பேர்.
அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் அளந்தெடுத்து ஊறவைத்து மாவரைத்து புளிக்க விடவேண்டும்.
புளித்த மாவை சூடாக்கப்பட்ட தோசை கல்லின் மேல் பரப்பி எண்ணெய் விட்டு சுவையான தோசை தயாரிக்கப்படுகிறது.
தோசையை பலவாறாக ஊற்றி எடுக்கலாம். மெத்து மெத்தென்று சிறிது கனமாக சுட்டெடுக்கலாம். மிகவும் மெல்லியதாக தோசை கல்லின் மீது பரப்பி சிறிது அதிகமாக எண்ணெய் விட்டு முறுகல் தோசை செய்யலாம். இத்தகைய முறுகல் தோசையை விரும்புவோர் பலர்.

இதே மாவை தோசைக்கல்லின் மீது பரப்பி அரிந்த வெங்காயத்தை மேலே தூவி ஊதப்பமாக சுட்டெடுக்கலாம்.

இது தவிர உடனடியாக ஊற்றக்கூடிய தோசைகளும் செய்யலாம். இத்தகைய உடனடி தோசைகளுக்கு தேவையான மாவை கோதுமை மாவு, அரிசி மாவு, ரவா, கம்பு மாவு, கேழ்வரகு மாவு மற்றும் சிறு தானிய மாவு போன்ற உலர்ந்த மாவை குறிப்பிட்ட விகிதத்தில் தண்ணீர் விட்டு கரைத்து உடனே மெல்லிய தோசை தயாரிக்கலாம்.

இங்கு தோசை மாவு அரைத்தெடுப்பது முதல் தோசை ஊற்றும் முறை மற்றும் வித விதமான தோசை வகைகளின் இணைப்பை காணலாம்.



தோசை மாவு
தோசை மாவு
மசால் தோசை
மசால் தோசை
தோசை
தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
பொடி தோசை
பொடி தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
பசலைக்கீரை தோசை
பசலைக்கீரை தோசை
கேழ்வரகு தோசை 1
கேழ்வரகு தோசை 1
கேழ்வரகு தோசை 2
கேழ்வரகு தோசை 2
ரவா தோசை
ரவா தோசை
கோதுமை தோசை
கோதுமை தோசை
சோள தோசை
சோள தோசை
தினை தோசை
தினை தோசை
தினை மாவு தோசை
தினை மாவு தோசை
நீர் தோசை
நீர் தோசை
குதிரைவாலி நீர் தோசை
குதிரைவாலி நீர் தோசை
சாமை அரிசி கஞ்சி தோசை
சாமை அரிசி கஞ்சி தோசை
வெந்தயக்கீரை கடலை மாவு தோசை
வெந்தயக்கீரை கடலை மாவு தோசை
வரகரிசி நீர் தோசை
வரகரிசி நீர் தோசை



தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி வகைகள் மற்றும் சாம்பார் / குழம்பு வகைகள் ஆகியவற்றிற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

தொட்டுக்க








3 comments:

  1. அடேயப்பா ஊற்றி அடுக்கி விட்டீர்களே
    என் போன்ற தோசைப் பிரியர்களுக்கு உதவும்
    அற்புதமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மேலும் பல தோசை வகைகள் வரவிருக்கின்றன. அவ்வப்போது இங்கு வந்து சுவைக்கலாம். நன்றி.

      Delete
  2. Looking for the best & luxury beach resorts in ECR Chennai to relax during the weekend? Visit Landmarpallavaa near Mahabalipuram and enjoy a fun weekend.

    Best ECR Beach Resort Mahabalipuram

    ReplyDelete