Search This Blog

Wednesday, March 22, 2017

Nellikkai-Rice

#நெல்லிக்காய்சாதம் : இரு வகையான  #நெல்லிக்காய் கள் உண்டு. அரநெல்லிக்காய் என்று சொல்லப்படும் மிகவும் புளிப்பு சுவையுடையது ஒன்று. மற்றொன்று துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. இவ்விரு வகையான நெல்லிக்காய்களை உபயோகப்படுத்தி ஒரு சுவையான கலந்த சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Nellikkai rice


தேவையானவை :
1 கப்வேகவைத்த சாதம்
10 - 15அர நெல்லிக்காய்
3 - 4நெல்லிக்காய் [ Amla ]
1 or 2பச்சை மிளகாய் [ adjust ]
8 - 10கருவேப்பிலை
2 Tbspநிலக்கடலை [ peanut ]
2 Tspகடலை பருப்பு
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1/4 Tspமஞ்சத்தூள்
4 Tspநல்லெண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]

செய்முறை :
முதலில் நெல்லிக்காய், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை கழுவி சுத்தமான துணியினால் ஈரத்தை ஒத்தி எடுக்கவும்.
நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கி மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
கருவேப்பிலையை கைகளால் கிழித்து வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து நல்லெண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிட்ட பின்னர் கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
அடுத்து பெருங்காய தூள், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரை நிமிடம் வறுக்கவும்.
அடுத்து மஞ்சத்தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
நெல்லிக்காய் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
சாதம் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறியவுடன் சாதத்தை உதிர்த்து சேர்க்கவும்.
நன்கு கலந்து விடவும்.
சுவை சரி பார்த்து தேவையெனில் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சுவையும் சத்தும் நிறைந்த நெல்லிக்காய் சாதம் தயார்.
தொட்டுக்கொள்ள ஏதும் இல்லாமலும் சாப்பிடலாம்.
தயிர்பச்சடி அல்லது விருப்பமான கார கறி யுடன் சுவைக்கலாம்.
Nellikkai rice






மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் சாமை பிசிபேளே பாத் முருங்கைக்கீரை சாதம் மணத்தக்காளி கீரை சாதம் தேங்காய் பால் காய்கறி புலாவ்



Tuesday, March 14, 2017

Fresh-Green-Pepper-Spicy-Chutney

#பச்சைமிளகுகாரசட்னி : #மிளகு மிக மிக பழங்காலத்திலிருந்தே உணவுக்காகவும் மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.  நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி, இருமல் மற்றும் உணவு சீரணத்தை சீராக்கவும் மருந்தாக பயன்படுத்தி வருகிறோம். நாம் பொதுவாக காய வைத்த கறுப்பு மிளகையே சமையலில் உபயோகப்படுத்துவோம். இது மட்டுமல்லாமல் மிளகு கொடியிலிருந்து பறித்த பச்சை மிளகையும் சமையலில் உபயோகிக்கலாம்.
இங்கு பச்சை மிளகை கொண்டு ஒரு கார சட்னி அரைக்கும் விதத்தை பாப்போம். 

பச்சை மிளகு கார சட்னி

தேவையானவை :
2 - 3பச்சை மிளகு ஆர்க்குகள்
4 - 5பூண்டு பற்கள்
2 - 3பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
2 Tbspவினிகர் [ அட்ஜஸ்ட் ]
3/4 Tspஉப்பு  [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
மிளகும் காரத்தன்மை உடையதால் பச்சை மிளகாயின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
காம்பிலிருந்து பச்சை மிளகை உதிர்த்து மிக்சி பாத்திரத்தில் போடவும்.
கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும்.
சிறிது எடுத்து ருசி பார்த்து உப்பு மற்றும் வினிகர் தேவையெனில் சேர்த்து கலக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மிளகின் காரம் மற்றும் மணத்துடன் கூடிய அருமையான சட்னி தயார்.

இட்லி, ஆப்பம் மற்றும் தோசை வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையான சட்னியாகும்.



பச்சை மிளகு கார சட்னி

குளிர் சாதன பெட்டியில் 3 முதல் 4 நாட்கள் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். ஆனால் நேரம் செல்ல செல்ல சட்னியின் நிறம் சிறிது கருப்பாக மாறத்தொடங்கும். சுவையில் ஏதும் மாற்றம் இருக்காது.

பச்சை மிளகு கார சட்னி







மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்த்து சுவைக்க

  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.


வல்லாரை சட்னி பொடுதலை துவையல் கரிசலாங்கண்ணி துவையல்
இஞ்சி துவையல் பொங்கல் துவையல்






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.