Search This Blog

Tuesday, November 26, 2013

Karuveppilai Rice

#கருவேப்பிலைசாதம் : #கலந்தசாதம் வகைகளில் #கருவேப்பிலை சாதம் மிகவும் சத்து மிகுந்தது. பொதுவாக சமையலில் கருவேப்பிலை மணம் மட்டுமல்லாமல் மருத்துவ குணத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. கரு கரு என முடி வளர்வதற்கு கருவேப்பிலை உதவி செய்கிறது. இந்த சாதத்தை எப்படி செய்வது என பார்ப்போம்.

கருவேப்பிலை சாதம்


தேவையான பொருட்கள் :
பச்சரிசி                                     : 1/2 கப்
உப்பு                                           : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )
நல்லெண்ணெய்                   : 2 Tsp

வறுத்து அரைக்க :


கொத்தமல்லி விதை              : 2 Tsp
கடலை பருப்பு                           : 3 Tsp
மிளகு                                             : 1 Tsp
சீரகம்                                              : 1 Tsp
கச கசா                                           : 1 Tsp
பூண்டு பல்                                    : 2 அ  3
கருவேப்பிலை                           : 1 கைப்பிடி


எண்ணெய்                                    : 2 Tsp
சிகப்பு மிளகாய்                           ; 1 ( தேவையானது )
( இங்கு ராய்ப்பூரில் கிடைக்கும் சிகப்பு மிளகாய் நிறம் கம்மி ஆனால் காரம் அதிகம் )

அலங்கரிக்க :
முந்திரி                                        : 2 அ 3
கருவேப்பிலை                        : 6

செய்முறை :
அரிசியை களைந்து குக்கரில் போடவும்.
1/2 கப் அரிசிக்கு 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து அதிகமான தீயில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின் அகன்ற பத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலக்கி காற்றாடியின் கீழ் வைத்து ஆற விடவும்.


அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு மிளகாய், மற்றும் இதர பொருட்களை வறுத்து எடுத்து வைக்கவும்.
கருவேப்பிலையையும் எண்ணெயில் நிறம் மாறாமல் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

கருவேப்பிலை

மிக்ஸியில் கர கரப்பாக பொடித்துக் கொள்ளவும்.


ஆற வைத்துள்ள சாதத்தில் தயாரித்த பொடி 3 Tsp, நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சாரணி கொண்டு கலக்கவும்.
ருசி பார்த்து தேவையானால் இன்னும் சிறிது பொடி சேர்க்கவும்.
முந்திரியையும் கருவேப்பிலையையும் நெய்யில் வறுத்து அலங்கரிக்கவும்.
சுவையான கருவேப்பிலை சாதம் தயார்.

கருவேப்பிலை சாதம்

பிடித்தமான கறியுடன் சுவைக்கவும்.
மதிய உணவிற்காக எடுத்து செல்வதாக இருந்தால் நன்கு ஆறிய பின்னர் டிபன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.








மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

நெல்லிக்காய் சாதம் சாமை பிசிபேளே பாத் முருங்கைக்கீரை சாதம் மணத்தக்காளி கீரை சாதம் தேங்காய் பால் காய்கறி புலாவ்



No comments:

Post a Comment