Search This Blog

Friday, June 13, 2014

Vegetable Pulav with Coconut Milk

#தேங்காய்பால்காய்கறிபுலாவு : தேங்காய் பாலில் தாதுக்களும் விட்டமின்களும் நிறைந்துள்ளன.
இதில் வைட்டமின் C, E மற்றும் K காணப்படுகிறது.
தாதுக்களாகிய இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் போன்ற அரிய வகைகள் நிறைந்துள்ளன.
ஒரு கப் தேங்காய் பாலை அருந்தினால் 552 கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது. அதிக கலோரி சத்து கொண்டதனால் வாரத்தில் ஓரிரு முறை இதில் அடங்கியுள்ள அத்தியாவசிய தாதுக்களுக்காக சேர்த்துக்கொள்வது மிக மிக நல்லது.
மேலும் இதனை பற்றி அறிந்துகொள்ள கீழ் கண்ட இணைப்பை சொடுக்கவும்.
தேங்காய் பாலின் மருத்துவ பயன்கள் 
தேங்காய் பாலின் ஊட்ட சத்துக்கள் 

என்னுடைய சமையலில் ஏதாவது ஒரு வகையில் தேங்காய் பாலை உபயோகித்து செய்வது வழக்கம். அப்படிப்பட்ட சில உணவு வகைகள் : இனிப்பு தேங்காய் பால் ஆப்பத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட, பருப்பு பாயசம், மணத்தக்காளி பால் சாறு போன்றவை.
இந்த முறை தேங்காய் பால் உபயோகித்து புலாவு செய்தேன். அதன் செய்முறையை இங்கு காணலாம்.



தேங்காய் பால் காய்கறி புலவு

தேவையான பொருட்கள் :
1/2 cup                               பாஸ்மதி அரிசி
1/2 cup                               முட்டைகோஸ் நறுக்கியது
1 Tbsp                                காரட் நறுக்கியது
1/2 cup                               காலிபிளவர் நறுக்கியது
1                                        வெங்காயம் நறுக்கியது
1 Tsp                                 பூண்டு நசுக்கியது
2                                        பச்சை மிளகாய் நீள வாக்கில் அரிந்தது
1/4 cup                             கொத்தமல்லி தழை
2 Tbsp                              கொண்டைகடலை [ இருந்ததால் ]
1/2 cup                              தேங்காய் பால்
1 Tsp                                 உப்பு [ அட்ஜஸ்ட் ]

Spices added :
4                                       கிராம்பு
2                                       அன்னாசி மொக்கு
1 Tsp                                சீரகம்
1/2 Tsp                             சோம்பு
1 inch long                        இலவங்கப்பட்டை
4 Tsp                               எண்ணெய்

To garnish :
6 leaves                            கொடி பசலை
20 leaves                          புதினா

செய்முறை :
முதலில் அரிசியை ஒருமுறை கழுவி விட்டு சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் சீரகம் மற்றும் சோம்பை வெடிக்கவிட்டு மற்ற வாசனை பொருட்களை சேர்க்கவும்.
சில மணித்துளிகள் வறுத்தபின் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.
இப்போது வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டியதில்லை.
அதற்கு சற்று முன்பே நசுக்கிய பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் முட்டைகோஸ், காரட் மற்றும் காலிப்ளவரை சேர்த்து வதக்கவும்.

அரிசியில் இருந்து முழுவதுமாக தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.
அடுப்பை அதிக தீயில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
பின்னர் தீயை குறைத்து அரிசி நன்கு வெள்ளையாக வறுபடும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.


இப்போது 1/2 கப் தேங்காய் பால், 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.


மூடி வெயிட் பொருத்தி அடுப்பில் அதிக தீயில் வேக விடவும்.
ஒரு விசில் வந்த பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து புதினா மற்றும் நறுக்கிய கொடி பசலையை சேர்த்து கிளறவும். கிளரும் போது சாதப் பருக்கைகளை நசுக்காமல் மென்மையாக கிளற வேண்டும்.


சுவை மிகுந்த தேங்காய் பால் காய்கறி புலாவு தயார்.


சூடாக தட்டில் வைத்து தயிர்பச்சடி அல்லது குருமாவுடன் சுவைக்கலாம்.


தேங்காய் பால் காய்கறி புலவு








மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் சாமை பிசிபேளே பாத் முருங்கைக்கீரை சாதம் மணத்தக்காளி கீரை சாதம் நெல்லிக்காய் சாதம்



No comments:

Post a Comment