வாழைப்பூவாழைத்தண்டுதயிர்பச்சடி : #வாழைப்பூ துவர்ப்பு சுவையுடையது. அதன் இதழ்களை பிரித்து உள்ளே உள்ள பூக்களை சமைக்க பயன்படுத்தி வருகிறோம். உள்ளே செல்ல செல்ல இதழ்களும் மென்மையாகவும் இளசாகவும் இருப்பதை காணலாம். ஒவ்வொரு பூவிலும் இருக்கும் காம்பும் மென்மையாக இருப்பதையும் காணலாம். பூவின் நடுப்பகுதியில் [ உள் பகுதி ] உள்ளவற்றை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடலாம். துவர்ப்பு சுவையுடன் அருமையாக இருக்கும்.
பச்சையாக சாப்பிடக் கூடிய உள்பகுதி வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், துருவிய கேரட் மற்றும் வெங்காயம் கொண்டு செய்யப்படும் சுவையான தயிர் பச்சடி பற்றி இங்கு காண்போம்.
செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை அடித்து வைக்கவும்.
அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
வெடித்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கலக்கி வைத்துள்ள தயிர் பச்சடியின் மேல் கொட்டவும்.
சுவையான தயிர் பச்சடி தயார்.
பருப்பு சாதம், புலாவ், பிரியாணி, பிசிபேளே பாத் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
செய்து சுவைத்து பார்க்கவும்.
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க
பச்சையாக சாப்பிடக் கூடிய உள்பகுதி வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், துருவிய கேரட் மற்றும் வெங்காயம் கொண்டு செய்யப்படும் சுவையான தயிர் பச்சடி பற்றி இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
1/2 கப் | தயிர் |
உள்பகுதி | வாழைப்பூ |
2 Tbsp | வாழைத்தண்டு நறுக்கியது |
2 Tbsp | வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது |
1 Tbsp | வெங்காயம் பொடியாக நறுக்கியது |
1 Tsp | காரட் துருவியது |
6 - 8 | கறிவேப்பிலை இலைகள் |
1 Tsp | கொத்தமல்லி பொடியாக நறுக்கியது |
1 | பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது |
1/2 Tsp | உப்பு [ அட்ஜஸ்ட் ] |
தாளிக்க : | |
1/2 Tsp | கடுகு |
1/2 Tsp | உளுத்தம் பருப்பு |
1/2 Tsp | நல்லெண்ணெய் |
செய்முறை :
ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிரை அடித்து வைக்கவும்.
அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முதலில் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
வெடித்ததும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை கலக்கி வைத்துள்ள தயிர் பச்சடியின் மேல் கொட்டவும்.
சுவையான தயிர் பச்சடி தயார்.
பருப்பு சாதம், புலாவ், பிரியாணி, பிசிபேளே பாத் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
செய்து சுவைத்து பார்க்கவும்.
மேலும் சில பச்சடி வகைகள் செய்து சுவைக்க
|
|
|
||||||
|
|
No comments:
Post a Comment