உப்புமா வகைகள் :
#உப்புமா என்றதும் அலறி அடித்துக்கொண்டு ஓடுபவர்களே அதிகம். ஆனால் உப்புமா ஒரு அற்புதமான மற்றும் முழுமையான சிற்றுண்டியாகும்.
அரிசி, சிறு தானியங்கள், ரவா, கோதுமை ரவா மற்றும் அவல் ஆகியவற்றைக் கொண்டு சுவையான உப்புமா தயாரிக்கலாம். இவை தவிர சேமியா, ஜவ்வரிசி மற்றும் அரிசிப் பொரி கொண்டும் உப்புமா செய்வதுண்டு.
அடுப்பில் வாணலியை எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம் சிவக்க வதக்க வேண்டியதில்லை. வெங்காயம் சிறிதே நிறம் இழந்தால் போதுமானது. தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அதிக தீயில் கொதிக்க விடவேண்டும். தண்ணீர் கலவை கொதிக்க ஆரம்பித்ததும் நாம் எந்த உப்புமா தயாரிக்க விழைந்தோமோ அந்த பொருளை சேர்த்து கலக்கி தீயைக் குறைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். அவ்வப்போது இடையே சிறிது கிளறி விட வேண்டும். எல்லா வைகையான உப்புமாவும் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் தயாரித்து விடலாம்.
அணைத்து உப்புமாக்களுக்கும் 1 கப் தானியம் எடுத்துக்கொண்டால் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.
சேமியா உப்புமாவுக்கு ஒரு கப் எடுத்தால் ஒரு கப் தண்ணீர் விட்டு வேக வைத்தாலே போதுமானது.
ஜவ்வரிசி உப்புமா செய்யும் போது நன்கு ஊறவைத்து கிளற வேண்டும்.
அவல் உப்புமாவிற்கு அவலின் கெட்டித்தன்மையைப் பொறுத்து தண்ணீரில் நனைத்தோ அல்லது மிக சொற்ப நேரம் ஊறவைத்தோ செய்வது அவசியம்.
கீழே பல விதமான உப்புமா செய்முறைக் குறிப்புகளின் இணைப்புகளைக் கொடுத்துள்ளேன்.
பாப்பரை எனும் தானியம் ஆங்கிலத்தில் Buckwheat என அழைக்கப்படுகிறது. இந்த பாப்பரை தானியம் இயற்கை அங்காடிகளிலும் நவீன சூப்பர் மார்க்கட்டுகளிலும் கிடைக்கும்.
விதவிதமான உப்புமா செய்முறை பதிவுகளின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Best Places To Bet On Boxing - Mapyro
ReplyDeleteWhere To Bet On Boxing. 바카라 사이트 It's a sports betting event in which you sol.edu.kg bet on the outcome of a game. In the boxing world, each player must decide if 출장안마 or ventureberg.com/ not 출장안마 to