Search This Blog

Thursday, January 2, 2014

Buckwheat Rice Upma

#பாப்பரைஅரிசிஉப்புமா : #பாப்பரை புரத சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். இது Buckwheat என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. நன்கு மலர்ந்து வெந்தால் சிறிது கொழ கொழ என்று இருப்பதால் தனியாக இல்லாமல் அரிசியுடன் கலந்து உப்புமா செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. உப்புமாவின் நிறம் பாப்பரையின் நிறத்தில் மாறிவிட்டது. ஆனால் சுவையில் குறை ஏதும் சொல்லமுடியாது. இனி செய்முறையை பார்க்கலாம்.

பாப்பரை அரிசி உப்புமா [ Buckwheat Rice Upma ]


தேவையான பொருட்கள் :
3/4 கப்                               பச்சரிசி
1/4 கப்                               பாப்பரை ( Buckwheat )
1 Tsp                                துவரம் பருப்பு
1                                        வெங்காயம் பொடியாக அரிந்து கொள்ளவும்
2 அ 3                                பச்சை மிளகாய் நீள வாக்கில் அரியவும்
10 அ 15                            கருவேப்பிலை
1/4 Tsp                              பெருங்காயத்தூள்
1/2 Tsp                              இஞ்சி பொடியாக நறுக்கியது
1 Tsp                                உப்பு

தாளிக்க :
1 Tsp                                 கடுகு
3 Tsp                                கடலை பருப்பு
2 Tsp                                 எண்ணெய்

செய்முறை :
அரிசியையும் துவரம் பருப்பையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் இருமுறை கழுவி வடித்துவிட்டு ஆற வைக்கவும்.


அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய்  ஊற்றவும்.
என்னை காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வாசனையுடன் இலேசாக நிறம் மாறியதும் உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.


நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி ஆற வைத்துள்ள அரிசியை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி ரவா போல ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும்.
பாப்பரையையும் ஒரு முறை கழுவிட்டு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.


தீயை தணித்து ஒரு மூடியினால் மூடி விடவும்.
அவ்வப்போது திறந்து கிண்டி விட்டு மூடவும்.
வேக சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.


வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பின் மேல் மூடிய படி மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு எடுத்து பரிமாறலாம்.
ஒரு தட்டில் சட்னி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

பாப்பரை அரிசி உப்புமா [ Buckwheat Rice Upma ]

வெல்லம் தொட்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.



No comments:

Post a Comment