Search This Blog

Sunday, April 19, 2015

Semiya-Upma

#சேமியாஉப்புமா : மறுபடியும் உப்புமாவா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம். சரியான விகிதத்தில் தேவையான பொருட்களை சேர்த்து செய்தால் மிக மிக அருமையாக இருக்கும். பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுகிறது.
மற்ற #உப்புமா போலல்லாமல் சேமியா உப்புமாவிற்கு தண்ணீரின் அளவில் கவனம் தேவை. நான் இந்த உப்புமாவில் சேர்க்கக் கூடிய அனைத்து காய்கறிகளின் அளவை குறிப்பிட்டுள்ளேன். தங்களிடம் எந்தெந்த காய்கறிகள் இருக்கிறதோ அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
வறுத்த சேமியா மற்றும் வறுக்காத சேமியா என இரு வகைகளில் கடைகளில் விற்கப்படுகிறது. இரண்டில் எந்த வகை வீட்டில் இருக்கிறதோ அதை பயன் படுத்தலாம். 
இனி செய்முறையை பார்ப்போம்.

சேமியா உப்புமா

தேவையான பொருட்கள் :
1 கப்சேமியா
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 or 3பச்சை மிளகாய், நீள வாக்கில் நறுக்கவும்
1/4 கப்காரட், பொடியாக நறுக்கியது
1/4 கப்பீன்ஸ், பொடியாக நறுக்கியது
1/4 கப்குடை மிளகாய், பொடியாக நறுக்கியது
1/4 கப்பச்சை பட்டாணி
8 - 10கறுவேப்பிலை
2 Tspகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/2 Tspஇஞ்சி அரைத்த விழுது [ விரும்பினால் ]
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
1 சிட்டிகைபெருங்காய தூள்
2 Tspஎண்ணெய்
1/2 Tspநெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியை சூடாக்கவும்.
வாணலியில் சேமியாவை போட்டு அரை தேக்கரண்டி நெய் விடவும்.
சாரணி கொண்டு விடாமல் வறுக்கவும்.
பொன்னிறமாக வறு பட்டவுடன் ஒரு தட்டில் எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை கரண்டியால் துழாவவும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்து கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்து இஞ்சி விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அரிந்து வைத்துள்ள பீன்ஸ் மற்றும் காரட் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அடுத்து குடை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு அரை நிமிடம் வதக்கவும்.
பட்டாணியை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிய பின்னர் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைத்து வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறவும்.
ஒரு மூடி கொண்டு மூடி வேக விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கரண்டியினால் கிளறி விடவும்.
மறு படியும் மூடி மேலும் 3 நிமிடங்கள் வேக விடவும்.
3 நிமிடங்கள் கழித்து திறந்து சேமியா வெந்து விட்டதா என பார்க்கவும்.
சேமியாவை மசித்து விடாமல் நன்கு கிளறி விடவும்.
இன்னும் சிறிது வேக வேண்டும் என்றால் மேலும் இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு வாணலியை மூடியால் மூடி அடுப்பின் சூட்டிலேயே மேலும் 2 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
தொட்டுக்கொள்ள ஏதும் தேவை இல்லை. விருப்பப் பட்டால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.

Semiya Upma

குறிப்பு :
வறுத்த சேமியாவாக இருந்தால் அப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.





மேலும் சில சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
அவல் உப்புமா எலுமிச்சை அவல் உப்புமா சைவ ஆம்லட்
பசலை கீரை பூரி சேமியா பாயசம் பாப்பரை அரிசி உப்புமா







இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



No comments:

Post a Comment