Search This Blog

Wednesday, December 4, 2013

Aval Upma

அவல் உப்புமா : நான் தற்போது வசித்து வரும் சத்தீஸ்கர் மாநிலம் முன்பு மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். மத்திய பிரதேசத்தில் காலை டிபன் வகைகளில் அவல் ஒன்றாகும். அதை போஹா என்று அழைக்கிறார்கள். நீராவியில் அவலை உப்புடன் வேகவைத்து அதன் மேல் வெங்காயம், வெந்த உருளை கிழங்கு மற்றும் ஓமப்பொடி தூவி கொடுக்கிறார்கள். இங்கு அவல் நன்றாக கிடைப்பதால் அடிக்கடி அவல் உப்புமாவை காய்கறிகளுடன் செய்வது வழக்கம். எப்படி என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
1 கப்                                            கெட்டி அவல்
1 Tbsp                                            ராகி அவல் ( இருந்தால் )
1/2 Tsp                                           உப்பு

காய்கறிகள் :


1 Tbsp                                          காரட் துருவியது
1 Tbsp                                           பீட்ரூட் துருவியது
1 Tbsp                                           காலி ப்ளோவேர் துண்டுகள்
1 Tbsp                                           பீன்ஸ் பொடியாக நறுக்கியது
2 Tbsp                                           கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
8                                                    கருவேப்பிலை
6                                                    பசலை கீரை
1                                                    வெங்காயம்
4                                                    பட்டன் காளான்
2                                                    பச்சை மிளகாய்
( இங்கே இரண்டு வகையான காரட் எடுத்துள்ளேன். )

தாளிக்க :
1/2 Tsp                                          கடுகு
1 Tsp                                             உளுத்தம் பருப்பு
2 Tsp                                             நிலகடலை
2 Tsp                                             எண்ணெய்

தேவையான பொடிகள் :
2 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 சிட்டிகை                              பெருங்காயத்தூள்
1/2 Tsp                                         சீரகத்தூள்
1/2 Tsp  ( அட்ஜஸ்ட் )            மிளகாய்த்தூள்

செய்முறை :
அவலை இரண்டு முறை நன்றாக கழுவி உப்பு சேர்த்து பிசறி இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக விடவும்.


வாணலியை மற்றொரு  அடுப்பில் வைத்து 2 Tsp எண்ணெய்  விட்டு, சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
உளுத்தம் பருப்பையும் கடலையையும் வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காயத்தூள், மஞ்சத்தூள், மிளகாய் தூள் மற்றும் சீராக தூள் சேர்த்தவுடன் கொத்தமல்லியை போட்டு வதக்கவும்.
நீள  வாக்கில் அறிந்து பச்சை மிளகாயை சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் வெங்காயத்தை வதக்கவும்.
அடுத்து பீன்ஸ் போட்டு சிறிது நேரம் வதிக்கிய பின் மற்ற எல்லா காய்கறிகளை போட்டு வதக்கவும்.


காளானை வெட்டி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
உப்பு சேர்க்கவும். அவலில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் கவனம் தேவை.
எல்லா காய்கறிகளும் பொடியாக நறுக்கியுள்ளதால் வதக்கும் போதே வெந்து விடும். இல்லையென்றால் சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்.
ஆவியில் வைத்த  அவல்  8 முதல் 10 நிமிடங்களுக்குள் வெந்திருக்கும்.
அதை வாணலியில் சேர்த்து கலக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடியால் வாணலியை மூடவும்.
அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
சுவையான அவல் உப்புமா தயார்.

பிறகு எடுத்து பரிமாறவும்.


தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை.

சிறிது புளிப்பு சுவை தேவை என்றால் அடுப்பை அணைத்ததும் 1 Tsp எலுமிச்சை சாரை ஊற்றி கிளறி விடவும்.





மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
வரகரிசி உப்புமா
வரகரிசி
உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
பாப்பரை அரிசி உப்புமா
பாப்பரை
அரிசிஉப்புமா





No comments:

Post a Comment