Search This Blog

Sunday, February 2, 2014

Rawa Upma

ரவா உப்புமா : உடனே அவசரத்திற்கு செய்யக்கூடிய டிபன் இந்த ரவா உப்புமா. மிக எளிதில் செய்து விடலாம். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
அடிப்படையில் இதனை தயாரிக்க வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போதுமானது. காரட், பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்த்து செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :
ரவா                                           : 1 கப்
உப்பு                                                   : 2 Tsp
வெங்காயம்                                    : 1
பச்சை  மிளகாய்                           : 3 ( அட்ஜஸ்ட் )
கருவேப்பிலை                             : 10 - 12
இஞ்சி                                                : சிறு துண்டு
நெய்                                                   : 1 Tsp


பொடியாக அரிந்த காய்கறிகள் :
காரட்                                                  : 1 Tbsp
முட்டைகோஸ்                             : 1 Tbsp ( விருப்பமானால் )
குடைமிளகாய்                               : 1 Tbsp  ( விருப்பமானால் )
பச்சை பட்டாணி                           : 1 Tbsp  ( விருப்பமானால் )

தாளிக்க :
கடுகு                                                  : 1 Tsp
உளுத்தம் பருப்பு                           : 1 Tsp
கடலை பருப்பு                               : 3 Tsp
பெருங்காயம்                                  : சிறு துண்டு
எண்ணெய்                                       : 3 Tsp

செய்முறை :
அடுப்பில் மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றவும்.
ரவாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
வறுத்த ரவா நன்கு வெள்ளை நிறத்திற்கு மாறி இருக்கும்.
எண்ணெய்  காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும்.
பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
இப்போது பெருங்காயம் சேர்த்து, உடனே கருவேப்பிலை மற்றும் நீள வாக்கில் இரண்டாக பிளந்த பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனையுடன் இலேசாக நிறம் மாறியதும்


காரட், முட்டைகோஸ், பட்டாணி  மற்றும் குடைமிளகாய் போட்டு 1/2 நிமிடம் வதக்கவும்.


உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
நன்கு சாரணியால் கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைத்து விடவும்.


இப்போது வறுத்து வைத்துள்ள ரவாவை இடது கையால் கொதிக்கும் தண்ணீரில் மெதுவாக சேர்த்தபடியே வலது கையால் கரண்டி கொண்டு கலக்கிக் கொண்டே இருக்கவும்.
விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இல்லாவிடில் கட்டி கட்டியாகி விடும்.
எல்லா ரவாவை சேர்த்த பின்னும் நன்றாக கிளறி மூடி வைக்கவும்.
2 அல்லது 3 நிமிடங்கள் கழித்து திறந்து மறுபடியும் கிளறி விடவும்.
ரவா வெகு சீக்கிரம் வெந்து விடுமாகையால் இப்போதே தயாராகி இருக்கும்.
தேவையானால் மேலும் 3 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.


பிறகு அடுப்பை அணைத்து விடலாம்.
சூடான சுவையான ரவா உப்புமா தயார்.

தேங்காய் சட்னியுடன் சுவைக்கவும்.




மற்ற சமையல் குறிப்புகள் :

குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி
சுண்டல்
வரகரிசி உப்புமா
வரகரிசி உப்புமா
குதிரைவாலி இட்லி
குதிரைவாலி
இட்லி
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழுக்கட்டை
பாப்பரை அரிசி உப்புமா
பாப்பரை
அரிசிஉப்புமா




No comments:

Post a Comment