#அரிசிஉப்புமா : #உப்புமா என்பதை பலர் ஒரு விரும்ப தகாத உணவாகவே கருதுகிறார்கள். என்னை பொருத்தவரை உப்புமா மிகவும் எளிமையான மேலும் சுவையான உணவும் கூட. ரவா, கோதுமை ரவா, சிறு தானிய வகைகள் ஆகியவற்றை உபயோகித்து உப்புமா தயாரிக்கலாம். சரியான முறைப்படி செய்தால் உப்புமாவை காட்டிலும் சுவையான உணவு வேறெதுவும் இருக்க முடியாது.
அரிசியை கொண்டு செய்யப்படும் உப்புமா மற்றவற்றை காட்டிலும் மிக மிக அருமையான ருசியுடன் இருக்கும்.
இனி எப்படி என காணலாம்.
3 நபர்கள் சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
1 1/4கப் பச்சரிசி
1/8 கப் துவரம் பருப்பு
1 வெங்காயம், பொடியாக நறுக்கவும்
3 பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி கொள்ளவும்.
1 சிகப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்.
15 கறுவேப்பிலை
1/2 அங்குல துண்டு இஞ்சி, பொடியாக நறுக்கவும்
3/4 Tsp உப்பு [ அட்ஜஸ்ட் ]
2 1/2கப் தண்ணீர்
தாளிக்க :
1 Tsp கடுகு
3 Tsp கடலை பருப்பு
3 Tsp நல்லெண்ணெய்
1/4 Tsp பெருங்காய தூள்
செய்முறை :
பச்சரிசி , துவரம் பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கழுவி விட்டு தண்ணீரை வடித்து விட்டு ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் கடலை பருப்பையும் சிகப்பு மிளகாயையும் சேர்த்து வறுக்கவும்.
அதன் பின் பெருங்கயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சில மணி துளிகள் வதக்கவும்.
பின் வெங்காயத்தையும் இஞ்சியையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து தீயை பெரியதாக்கி கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் கழுவிவைத்துள்ள பச்சரிசியையும் துவரம் பருப்பையும் மிக்ஸியில் நொய்யாக உடைத்து சேர்க்கவும்.
தீயை குறைத்து விட்டு தட்டு போட்டு மூடி வேக விடவும்.
3 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விடவும். கிளறி விட்டபின் மறுபடியும் தட்டினால் மூடி வேக விடவும்.
வேக சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும்.
வெந்ததும் ஒரு முறை நன்கு கிளறி மீண்டும் மூடி வைக்கவும்.
வெந்த பிறகும் குறைந்த தீயில் மேலும் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
இவ்வாறு சூட்டில் வைக்கும் போது கீழே அடை பிடிக்கும்.
இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த அடைக்காகவே அரிசி உப்புமாவை விரும்புபவர்கள் அதிகம் பேர்.
அடை எனக்குதான் வேண்டும் என்று சண்டை போடுகிறவர்கள் அநேகம் பேர்!!
பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.
கீழே அடிபிடித்த அடையை சர்க்கரையுடன் அல்லது வெல்லத்துடன் சுவைக்கலாம்.

மற்ற உப்புமா வகைகள் முயற்சி செய்து பார்க்க
No comments:
Post a Comment