Search This Blog

Showing posts with label விளாம்பழம். Show all posts
Showing posts with label விளாம்பழம். Show all posts

Tuesday, November 19, 2013

Vilampazham Sambar

விளாம்பழம்  சாம்பார் :  நான் சென்ற மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்திரகூட்  என்ற சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்து விளாம்பழம்  வாங்கி வந்தேன். பொதுவாக விளாம்பழத்தின் சதைப்பற்றுடன் வெல்லம்  கலந்து சாப்பிடலாம். அதற்காகத்தான் வாங்கி வந்தேன்.


ஆனால் பழத்தை உடைத்து வாயில் வைத்தால் மிகவும் புளித்தது.


அதனால் பழத்தை கொண்டு சாம்பார் செய்யலாம் என முடிவு செய்து செயலிலும் இறங்கினேன்.
தயாரித்த சாம்பாரின் சுவை மிக நன்றாக இருந்தது. ஆனால் நிறம்தான் சிறிது வெளிர் நிறமாக இருந்தது.

தேவையான பொருட்கள் :

வேகவைத்த துவரம் பருப்பு                : 3 Tbsp
விளாம்பழம்  பழ சதைப்பற்று             : 2 Tsp ( பழத்தின் சுவைக்கேற்ப )
முள்ளங்கி                                                  : 2 நடுத்தரம்
பரங்கிக்காய்  துண்டுகள்                      : 1/4 Cup
சிறு கீரை                                                    : 1/4 ( கட்டாயமில்லை )
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :

சின்ன வெங்காயத்தின் தோலுரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கீரை, கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
முள்ளங்கியின் தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.
குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 1 Cup நீர் சேர்க்கவும்.


அதில் முள்ளங்கியை 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.


இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.


பரந்கிக்காயையும் கீரையையும் சேர்க்கவும்.


விளாம்பழத்தின் சதையையும் மசித்து சாம்பாருடன் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.


கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.


சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
தொட்டுக்கொள்ள விருப்பமான துவட்டலுடன் சாப்பிடவும்.

Friday, November 15, 2013

Vilampazham Peerkangai Chutney

#விளாம்பழம் பீர்கங்காய்சட்னி : #விளாம்பழம் தேங்காயைப் போல் ஓடு கொண்ட ஒரு பழம். பொதுவாக ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது தென்படும். ஓட்டின் உள்ளே பழசதை இருக்கும். நல்ல பழமாக இருப்பின் நல்ல மணம் வீசும். மேலும் பழத்தை உலுக்கினால் உள்ளே சதை பற்று உருளுவதை உணரலாம். இதன் சுவை சிறிது புளிப்பு கலந்த இனிப்புடன் இருக்கும்.

விளாம்பழம்

ஆனால் நான் சென்ற முறை வாங்கியது செங்காயாகவும் புளிப்பு மிகுந்ததாகவும் இருந்தது. அதனால் இந்த சட்னியை செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. இனி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

விளாம்பழம்

விளாம்பழம் சதை                          :  2 Tsp



பீர்கங்காய் தோல்                           :  1/2 Cup
தேங்காய் துருவல்                         :  3 Tsp குவித்து
உளுத்தம் பருப்பு                              : 2 Tsp
சிகப்பு மிளகாய்                                : 2 ( அட்ஜஸ்ட் )
பெருங்காயம்                                    : சிறு துண்டு
இஞ்சி துண்டு                                    : 1 Inch ( வேண்டுமானால் )
உப்பு                                                       : 3/4 Tsp ( கூட்டிகுறை )
எண்ணெய்                                          : 2 Tsp
         
செய்முறை :

அடுப்பில் எண்ணெய்  சட்டியை ( கடாய் ) வைத்து 1 Tsp எண்ணெயை ஊற்றவும்.
என்னை காய்ந்ததும் சிகப்பு மிளகாயை மற்றும் பெருங்காயத்தையும் வறுத்து கொள்ளவும்.
எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
எடுத்து அதே தட்டில் வைக்கவும்.
இஞ்சியை துண்டுகளாக்கி அதையும் வதக்கி கொள்ளவும்.
எடுத்து அதே தட்டில் வைக்கவும்.
இப்போது இன்னொரு Tsp எண்ணெயை விட்டு பீர்கங்கை தோலை வதக்கவும்.
கடாயை ஒரு தட்டினால் மூடி வேக விடவும்.
சரியாக பச்சை நிறம் மாறாமல் வதக்கி எடுக்கவும்.
வதக்கிய மற்றும் வறுத்த பொருட்கள் ஆறியவுடன் மிக்ஸ்யில் மற்ற பொருட்களுடன் சேர்த்து  அரைக்கவும்.
முதலில் தண்ணீர் விடாமல் அரைத்து பிறகு கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.


உப்பை சரி பார்த்துகொள்ளவும். விலாம்பழத்தையும் அதன் புளிப்பு தன்மைக்கு ஏற்றவாறு கூட்டி குறைத்து கொள்ளவும்.
இப்போது சுவையான காரம் மிகுந்த சட்னி தயார்.

விளாம்பழம்  பீர்கங்காய் சட்னி

இந்த சட்னியை சாதத்துடன் பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இட்லி அல்லது தோசையுடனும் நன்றாக இருக்கும்.
பொங்கலுக்கும் ஏற்ற சட்னியும் கூட!




சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள்
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல் கொத்தமல்லி சட்னி 1