Search This Blog

Friday, November 15, 2013

Vilampazham Peerkangai Chutney

#விளாம்பழம் பீர்கங்காய்சட்னி : #விளாம்பழம் தேங்காயைப் போல் ஓடு கொண்ட ஒரு பழம். பொதுவாக ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது தென்படும். ஓட்டின் உள்ளே பழசதை இருக்கும். நல்ல பழமாக இருப்பின் நல்ல மணம் வீசும். மேலும் பழத்தை உலுக்கினால் உள்ளே சதை பற்று உருளுவதை உணரலாம். இதன் சுவை சிறிது புளிப்பு கலந்த இனிப்புடன் இருக்கும்.

விளாம்பழம்

ஆனால் நான் சென்ற முறை வாங்கியது செங்காயாகவும் புளிப்பு மிகுந்ததாகவும் இருந்தது. அதனால் இந்த சட்னியை செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. இனி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

விளாம்பழம்

விளாம்பழம் சதை                          :  2 Tsp



பீர்கங்காய் தோல்                           :  1/2 Cup
தேங்காய் துருவல்                         :  3 Tsp குவித்து
உளுத்தம் பருப்பு                              : 2 Tsp
சிகப்பு மிளகாய்                                : 2 ( அட்ஜஸ்ட் )
பெருங்காயம்                                    : சிறு துண்டு
இஞ்சி துண்டு                                    : 1 Inch ( வேண்டுமானால் )
உப்பு                                                       : 3/4 Tsp ( கூட்டிகுறை )
எண்ணெய்                                          : 2 Tsp
         
செய்முறை :

அடுப்பில் எண்ணெய்  சட்டியை ( கடாய் ) வைத்து 1 Tsp எண்ணெயை ஊற்றவும்.
என்னை காய்ந்ததும் சிகப்பு மிளகாயை மற்றும் பெருங்காயத்தையும் வறுத்து கொள்ளவும்.
எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
பிறகு உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
எடுத்து அதே தட்டில் வைக்கவும்.
இஞ்சியை துண்டுகளாக்கி அதையும் வதக்கி கொள்ளவும்.
எடுத்து அதே தட்டில் வைக்கவும்.
இப்போது இன்னொரு Tsp எண்ணெயை விட்டு பீர்கங்கை தோலை வதக்கவும்.
கடாயை ஒரு தட்டினால் மூடி வேக விடவும்.
சரியாக பச்சை நிறம் மாறாமல் வதக்கி எடுக்கவும்.
வதக்கிய மற்றும் வறுத்த பொருட்கள் ஆறியவுடன் மிக்ஸ்யில் மற்ற பொருட்களுடன் சேர்த்து  அரைக்கவும்.
முதலில் தண்ணீர் விடாமல் அரைத்து பிறகு கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.


உப்பை சரி பார்த்துகொள்ளவும். விலாம்பழத்தையும் அதன் புளிப்பு தன்மைக்கு ஏற்றவாறு கூட்டி குறைத்து கொள்ளவும்.
இப்போது சுவையான காரம் மிகுந்த சட்னி தயார்.

விளாம்பழம்  பீர்கங்காய் சட்னி

இந்த சட்னியை சாதத்துடன் பிசைந்து சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இட்லி அல்லது தோசையுடனும் நன்றாக இருக்கும்.
பொங்கலுக்கும் ஏற்ற சட்னியும் கூட!




சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள்
இஞ்சி துவையல் கரிசலாங்கண்ணி துவையல் கொத்தமல்லி சட்னி 1
    

No comments:

Post a Comment