#எலுமிச்சைஇடியாப்பம் : பொதுவாக #இடியாப்பம் தேங்காய் பால் ஊற்றியே சாப்பிடுவது வழக்கம். ஆனால் இடியாப்பம் செய்த பிறகு எண்ணெய் விட்டு கலந்து ஆற வைத்து, எலுமிச்சை அல்லது புளிகாச்சல் ஆகியவற்றுடன் கலந்தும் சுவைக்கலாம்.
செய்முறை :
முதலில் இரண்டு மூன்று ஈடு இடியாப்பம் ஆவியில் வேகவைத்து எடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலந்து தனியே வைக்கவும்.
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொட்டைகளை நீக்கி ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு வைக்கவும்.
இவ்வாறு செய்வதனால் தோலின் கசப்புத் தன்மை குறையும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கடுகு போட்டு வெடித்த பிறகு வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு அனைத்தும் நன்கு சிவந்த பிறகு பெருங்காய பொடி, கறுவேப்பிலை, பொடியாக நறுக்கிய காரட் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி தழை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அடுத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் மற்றும் உப்பையும் சேர்த்து பத்து வினாடிகள் மட்டுமே வதக்க வேண்டும்.
பொடியை சேர்த்து பிரட்டும் போது கருகி விடாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பை அணைத்து விடவும்.
எலுமிச்சை சாரை பிழிந்து நன்கு கலக்கவும்.
இவ்வாறு தயாரித்த எலுமிச்சை கலவையை இடியாப்பத்தின் மேல் கொட்டவும்.
கைகளால் அழுத்தாமல் நன்கு பிசறி விடவும். கைகளில் பிசுபிசுவென ஒட்டினால் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
உப்பு, காரம் மற்றும் எலுமிச்சை சாறு தேவை பட்டால் சேர்த்து கலந்து வைக்கவும்.
சுவையான எலுமிச்சை இடியாப்பம் தயார்.
மதிய உணவிற்கு எடுத்து செல்வதாக இருந்தால் நன்கு ஆற வைத்து பின்னர் டப்பாவில் எடுத்து வைக்கவும்.
மதிய உணவிற்காக செய்யும் போது சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் காரம் சிறிது தூக்கலாக இருக்குமாறு தயாரிக்க வேண்டும்.
அப்போதுதான் சாப்பிடும் போது சுவை சரியாக இருக்கும்.
மற்ற டிபன் வகைகள் முயற்சி செய்ய
தேவையானவை : | |
---|---|
2 ( அ ) 3 ஈடு | இடியாப்பம் |
4 Tsp | நல்லெண்ணெய் |
1 பெரிய அளவு | எலுமிச்சை பழம் [ அட்ஜஸ்ட் ] |
தாளிக்க : | |
1/2 Tsp | கடுகு |
1/8 Tsp | வெந்தயம் [ விரும்பினால் ] |
1 Tsp | உளுத்தம் பருப்பு |
2 Tsp | கடலை பருப்பு |
4 Tsp | நிலக்கடலை |
2 ( அ ) 3 | பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும் [ அட்ஜஸ்ட் ] |
10 - 15 | கறுவேப்பிலை |
3 Tsp | கொத்தமல்லி தழை நறுக்கியது [ விரும்பினால் ] |
2 Tsp | காரட் பொடியாக நறுக்கியது [ விரும்பினால் ] |
பொடிகள் : | |
1/4 Tsp | மஞ்சத்தூள் |
1/2 Tsp | சீரகத்தூள் |
1/4 Tsp | மிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ] |
1/4 Tsp | பெருங்காய பொடி |
2 Tsp | உப்பு [ அட்ஜஸ்ட் ] |
செய்முறை :
முதலில் இரண்டு மூன்று ஈடு இடியாப்பம் ஆவியில் வேகவைத்து எடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலந்து தனியே வைக்கவும்.
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொட்டைகளை நீக்கி ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு வைக்கவும்.
இவ்வாறு செய்வதனால் தோலின் கசப்புத் தன்மை குறையும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கடுகு போட்டு வெடித்த பிறகு வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு அனைத்தும் நன்கு சிவந்த பிறகு பெருங்காய பொடி, கறுவேப்பிலை, பொடியாக நறுக்கிய காரட் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி தழை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அடுத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் மற்றும் உப்பையும் சேர்த்து பத்து வினாடிகள் மட்டுமே வதக்க வேண்டும்.
பொடியை சேர்த்து பிரட்டும் போது கருகி விடாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பை அணைத்து விடவும்.
எலுமிச்சை சாரை பிழிந்து நன்கு கலக்கவும்.
இவ்வாறு தயாரித்த எலுமிச்சை கலவையை இடியாப்பத்தின் மேல் கொட்டவும்.
கைகளால் அழுத்தாமல் நன்கு பிசறி விடவும். கைகளில் பிசுபிசுவென ஒட்டினால் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
உப்பு, காரம் மற்றும் எலுமிச்சை சாறு தேவை பட்டால் சேர்த்து கலந்து வைக்கவும்.
சுவையான எலுமிச்சை இடியாப்பம் தயார்.
மதிய உணவிற்காக செய்யும் போது சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் காரம் சிறிது தூக்கலாக இருக்குமாறு தயாரிக்க வேண்டும்.
அப்போதுதான் சாப்பிடும் போது சுவை சரியாக இருக்கும்.
மற்ற டிபன் வகைகள் முயற்சி செய்ய
|
|
|
||||||
|
|
தொட்டுக்கொண்டு சாப்பிட
தொட்டுக்க
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:
Post a Comment