Search This Blog

Wednesday, July 20, 2016

Sundaikkai-Masala-Curry

#சுண்டைக்காய்மசாலாகறி : #சுண்டைக்காய் மார்க்கெட்டில் அரிதாக கிடைக்கும் ஒரு காயாகும். நமது வீட்டின் கொல்லை அல்லது வேலி ஓரங்களில் தானாக முளைக்கும் செடியாகும். இது கத்தரிக்காய் வகையை சேர்ந்த தாவரமாகும். இளைசான காய் சுவை மிகுந்ததாக இருக்கும். சில சுண்டைக்காய் வகைகள் சிறிது கசப்புத் தன்மை கொண்டதாக இருக்கும்.
சுண்டைக்காயை வேக வைத்து அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து கறி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
இனி செய்வதெப்படி என்று பார்ப்போம்.

Sundaikkai masala curry [ turkish berry curry ]

தேவையான பொருட்கள் :
1 கப் சுண்டைக்காய் [ pea eggplant ]
1 பெரியதுவெங்காயம், நீளவாக்கில் வெட்டவும்
1 நடுத்தர அளவு தக்காளி, பொடியாக நறுக்கவும்
2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
ஒரு சிட்டிகைமஞ்சத்தூள்
1/2 Tspஉப்பு [ adjust ]
மசாலாவிற்கு :
2 Tbspதேங்காய் துருவல்
1 Tspசீரகம்
1/2 Tspசோம்பு
1 Tspகொத்தமல்லி பொடி
2பூண்டு பற்கள்
1 or 2சிகப்பு மிளகாய் [ adjust ]
வெங்காயம், நறுக்கிவைக்கவும்
10கருவேப்பிலை
2 Tspகொத்தமல்லி நறுக்கியது
1/4 Tspஉப்பு
சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அலங்கரிக்க

செய்முறை :
சுண்டைக்காயின் காம்பை நீக்கி சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
காயை இரண்டாக நறுக்கி தண்ணீரில் போடவும்.
மசாலா அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெங்காயம் நீங்கலாக மிக்சி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.
பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
கடைசியாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
வெங்காயம் திப்பி திப்பியாக அரைத்தால் போதுமானது.
இவ்வாறு அரைத்த மசாலாவை தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பின் மீது மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வாதக்கவு.
இப்போது வெங்காயத்தை சேர்த்து சற்றே வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது வதக்கிய பின் வெட்டி வைத்துள்ள சுண்டைக்காயை சேர்க்கவும்.
இரண்டு சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு வேக விடவும்.
சுண்டைக்காய் வேக ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை எடுக்கும்.
காய் வெந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை அடுப்பில் வைத்திருக்கவேண்டும்.
தண்ணீர் சுண்டி மசாலா நன்கு காயுடன் சேர்ந்து வரும் வரை அடுப்பில் வைத்து இருக்க வேண்டும்.
அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விட வேண்டும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

மதிய உணவுக்கு ஏற்ற சுவையான மசாலா கறி தயார். சாம்பார்
ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு பொருத்தமான கறியாகும்.


Sundaikkai masala curry [ turkish berry curry ]









மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் கொண்டைக்கடலை மசாலா கறி
காலிப்ளவர்கொண்டை .. மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

2 comments:

  1. எனக்குப் பிடித்தக் கறி
    இதற்கு இதற்கு முன்
    மனைவியையே சார்ந்திருப்பேன்
    தங்கள் பதிவின் மூலம்
    இனி நானே செய்து விடுவேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Hi Ramani S, ஹா ஹா ... செய்து பார்த்து எப்படி இருந்தது என்று கூறவும். தங்களுடைய பின்னூட்டம் எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. நன்றி.

      Delete