Search This Blog

Showing posts with label breakfast. Show all posts
Showing posts with label breakfast. Show all posts

Wednesday, June 15, 2016

Idiyappam - Lemon-Idiyappam

#எலுமிச்சைஇடியாப்பம் : பொதுவாக #இடியாப்பம் தேங்காய் பால் ஊற்றியே சாப்பிடுவது வழக்கம். ஆனால் இடியாப்பம் செய்த பிறகு எண்ணெய் விட்டு கலந்து ஆற வைத்து, எலுமிச்சை அல்லது புளிகாச்சல் ஆகியவற்றுடன் கலந்தும் சுவைக்கலாம்.

எலுமிச்சை இடியாப்பம்


தேவையானவை  :
2 ( அ ) 3 ஈடு இடியாப்பம்
4 Tspநல்லெண்ணெய்
1 பெரிய அளவுஎலுமிச்சை பழம் [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1/8 Tspவெந்தயம் [ விரும்பினால் ]
1 Tspஉளுத்தம் பருப்பு
2 Tspகடலை பருப்பு
4 Tspநிலக்கடலை
2 ( அ ) 3பச்சை மிளகாய், பொடியாக நறுக்கவும் [ அட்ஜஸ்ட் ]
10 - 15கறுவேப்பிலை
3 Tspகொத்தமல்லி தழை நறுக்கியது [ விரும்பினால் ]
2 Tspகாரட் பொடியாக நறுக்கியது [ விரும்பினால் ]
பொடிகள்  :
1/4 Tspமஞ்சத்தூள்
1/2 Tspசீரகத்தூள்
1/4 Tspமிளகாய் தூள் [ அட்ஜஸ்ட் ]
1/4 Tspபெருங்காய பொடி
2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
முதலில் இரண்டு மூன்று ஈடு இடியாப்பம் ஆவியில் வேகவைத்து எடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கலந்து தனியே வைக்கவும்.

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொட்டைகளை நீக்கி ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு வைக்கவும்.
இவ்வாறு செய்வதனால் தோலின் கசப்புத் தன்மை குறையும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கடுகு போட்டு வெடித்த பிறகு வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு அனைத்தும் நன்கு சிவந்த பிறகு பெருங்காய பொடி, கறுவேப்பிலை, பொடியாக நறுக்கிய காரட்  மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி தழை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.

அடுத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் மற்றும் உப்பையும் சேர்த்து பத்து வினாடிகள் மட்டுமே வதக்க வேண்டும்.
பொடியை சேர்த்து பிரட்டும் போது கருகி விடாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பை அணைத்து விடவும்.
எலுமிச்சை சாரை பிழிந்து நன்கு கலக்கவும்.
இவ்வாறு தயாரித்த எலுமிச்சை கலவையை இடியாப்பத்தின் மேல் கொட்டவும்.
கைகளால் அழுத்தாமல் நன்கு பிசறி விடவும். கைகளில் பிசுபிசுவென ஒட்டினால் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
உப்பு, காரம் மற்றும் எலுமிச்சை சாறு தேவை பட்டால் சேர்த்து கலந்து வைக்கவும்.
சுவையான எலுமிச்சை இடியாப்பம் தயார்.

எலுமிச்சை இடியாப்பம்
மதிய உணவிற்கு எடுத்து செல்வதாக இருந்தால் நன்கு ஆற வைத்து பின்னர் டப்பாவில் எடுத்து வைக்கவும்.
மதிய உணவிற்காக செய்யும் போது சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் காரம் சிறிது தூக்கலாக இருக்குமாறு தயாரிக்க வேண்டும்.
அப்போதுதான் சாப்பிடும் போது சுவை சரியாக இருக்கும்.

எலுமிச்சை இடியாப்பம்







மற்ற டிபன் வகைகள் முயற்சி செய்ய

சோள இட்லி
சோள இட்லி
தோசை
தோசை
கோதுமை ரவா இட்லி
கோதுமைரவா இட்லி
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.


Tuesday, February 2, 2016

Kanji-Dosai

#கஞ்சிதோசை : அரிசியையும் தேங்காய் துருவலையும் உபயோகித்து
ஆப்பம்கேரளாஸ்டைல் 2 போல ஒரு சிறு மாறுதலுடன் வித்தியாசமாக செய்யப்படும் ஒரு சுவையான தோசை இந்த கஞ்சி தோசை. இதன் தயாரிப்பு முறை  நீர்தோசை போன்று தோன்றினாலும் சிறிது வேறு படுகிறது.
இனி எப்படி செய்வது என காணலாம்.

kanji dosai


தேவையான பொருட்கள் :
2 கப்பச்சரிசி
1/2 கப்தேங்காய் துருவல் 
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை [ விருப்பப்பட்டால் ]

தோசை சுட்டெடுக்க தேவையான அளவு நல்லெண்ணெய்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு நன்கு கழுவி தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பின்னர் மாவரைக்கும் இயந்திரத்தில் ஊறவைத்த அரிசி மற்றும் தேங்காய் துருவல்  ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து  எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

3/4 கப் முதல் 1 கப் வரை தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை கழுவி மற்றொரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பை பற்ற வைத்து இந்த மாவு கழுவிய தண்ணீர் உள்ள பாத்திரத்தை சிறிய தீயில் சூடாக்கவும்.
தொடர்ந்து கை விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
மாவு கலந்த தண்ணீர் சற்று நேரத்தில் கஞ்சி பதத்தை அடைந்து பளபளப்பாக மாறும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும்.
தயாரித்த கஞ்சியின் மேல் ஆடை படியாமல் இருக்க அவ்வப்போது கரண்டியால் கலக்கி விடவும்.

ஆறிய கஞ்சியை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.

உப்பு மற்றும் சர்க்கரையையும் சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விட்டு மறுநாள் காலை கஞ்சி தோசை தயாரிக்கலாம்.

அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் ஒரு சுத்தமான காய்ந்த மெல்லிய சிறு துண்டு துணியை எண்ணெயில் இலேசாக நனைத்து தோசை கல்லை தடவி விடவும்.
இப்போது மாவை கல்லின் ஓரத்தில் இருந்து ஒரு வட்டமாக ஊற்றி நடு வரை நிரப்பவும்.
மேலே சில துளிகள் நல்லெண்ணெய் விடவும்.

வெந்து ஓரங்கள் இலேசாக சிவக்க ஆரம்பித்து இருக்கும்.
திருப்பிப் போட தேவையில்லை.
தோசை திருப்பியினால் தோசையின் மேலே விட்ட எண்ணெயை மெதுவாக தடவி பரப்பி விடவும். இல்லையென்றால்  தோசை வர வரவென்று ஆகி விடும்.
பிறகு கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதே போல எண்ணெய் தடவி ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.


பூண்டு மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தக்காளி சட்னி மற்றும் பூண்டு தக்காளி  சட்னியுடனும் நன்றாக இருக்கும்.

kanji dosai

குறிப்பு :
மாவை புளிக்க வைக்காமல் உடனேயும் தோசை தயாரிக்கலாம். சுவை சிறிது மாறுபடும்.





மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து சுவைக்க

மசால் தோசை
மசால் தோசை
ரவா இட்லி
ரவா இட்லி
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
கேவுரு அடை
கேவுரு அடை
ரவா தோசை
ரவா தோசை


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழே உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

Thursday, November 26, 2015

Appam Varieties

#ஆப்பம்வகைகள் : #ஆப்பம் என்பது தோசை வகையை சார்ந்த ஒரு பலகாரமாகும். #தோசை யை போலல்லாமல் ஆப்ப சட்டியில் அல்லது தோசை கல்லில் மூடி போட்டு ஒரு பக்கம் மட்டுமே சுட்டெடுக்கபடும். தோசையை விட மிருதுவானதாகும்.
ஆப்பமாவு தயாரிக்க அரிசி, வெந்தயம், உளுந்து மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து புளிக்க வைக்கப் படுகிறது. புளித்த மாவை கொண்டு மிருதுவான ஆப்பம் சுட்டெடுக்கப் படுகிறது. ஆப்பம் பொதுவாக தேங்காய் பாலுடனே சுவைக்கப் படுகிறது. விருப்பமானால் சட்னி அல்லது குருமாவுடனும் சுவைக்கலாம்.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. கலோரி அளவும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் ஏற்றது. மலச் சிக்கலை போக்கவல்லது.
இதன் கசப்பு தன்மையால் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை.
ஆப்பம் மாவை தயாரிக்க வெந்தயம் கணிசமான அளவில் சேர்த்துக்கொள்ளப் படுகிறது. ஆனால் வெந்தயத்தின் கசப்பு சிறிதும் உணரப்படுவதில்லை.
அதனால் இந்த பலகாரத்தை அடிக்கடி செய்வதின் மூலம் வெந்தயத்தின் பலனை அடையலாம்.
வெந்தயத்தை முளை கட்டி பிறகு ஆப்ப மாவு தயாரிக்க பயன் படுத்தினால் மேலும் பயனடையலாம்.
ஆனால் கேரளாவில் செய்யப்படும் ஆப்பம் பச்சரிசி, தேங்காய் இரண்டையும் அரைத்து,  புளிக்க வைத்து சோடா உப்பு சேர்த்து ஆப்ப கடாயில் ஊற்றி சுட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு செய்யப்பட்ட ஆப்பம் கடலை கறியுடன் சுவைக்கப்படுகிறது.
எல்லா வகையான ஆப்பம் வகைகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.



ஆப்பம் மாவு
ஆப்பம் மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
சோள ஆப்பம்
சோள ஆப்பம்
ஆப்பம் கேரளா ஸ்டைல் 1
ஆப்பம்கேரளா ஸ்டைல் 1
ஆப்பம் கேரளா ஸ்டைல் 2
ஆப்பம்கேரளா ஸ்டைல் 2
கள்ளாப்பம்
கள்ளாப்பம்


ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க

மற்ற டிபன் வகைகளை அறிந்து கொள்ள

டிபன் வகைகள்


Thursday, November 19, 2015

Varagarisi-Neer-Dosai

#வரகரிசிநீர்தோசை : #வரகரிசி சுருக்கமாக #வரகு #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதனை பற்றி அறிய கீழே கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கவும்.
வரகரிசி

இங்கு வரகரிசி கொண்டு சுவையான நீர் தோசை எவ்வாறு செய்யலாம் என காண்போம்.


வரகரிசி நீர்தோசை

தேவையான பொருட்கள் :
2 கப்வரகு அரிசி [ Kodo millet ]
1/2 கப்தேங்காய் துருவல்
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
தோசை சுட்டெடுப்பதற்கு தேவையான நல்லெண்ணெய்.


செய்முறை :
வரகரிசியை இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி மற்றும் தேங்காயை நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவையும் கழுவி மாவுடன் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அப்போதுதான் மெல்லிய தோசையாக சுட முடியும்.

இந்த மாவை புளிக்க வைக்க தேவை இல்லை.
உடனேயே தோசை சுடலாம்.

அடுப்பில் தோசைகல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி தோசைகல்லின் வெளி ஓரத்தில் இருந்து நடு வரை மாவை வட்டமாக ஊற்றவும். 

தோசையின் மேலும் விளிம்புகளை சுற்றியும் எண்ணெய் சொட்டு சொட்டாக விடவும்.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்களும் நடுவேயும் சிவக்க ஆரம்பிக்கும்.
தோசை வெந்து விட்டது என கொள்ளலாம்.
மென்மையாக தோசை திருப்பியால் தோசையின் மேல் தெளிக்கப்பட்ட எண்ணெயை பரப்பி விடவும்.
இவ்வாறு செய்வதால் தோசை காய்ந்து போகாமல் இருக்கும்.

இந்த தோசை ஒரு பக்கம் வெந்தால் போதுமானது.
திருப்பிப் போட தேவையில்லை.

தோசையை எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதேபோல தோசையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

சுவையான மென்மையான வரகரிசி நீர் தோசை தயார்.
காரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி சாம்பார் அல்லது தக்காளி சட்னி  யுடன்  சுவைக்கவும்.

Varagarisi [ Kodo millet ]
வரகரிசி நீர்தோசை வரகரிசி நீர்தோசை
வரகரிசி நீர்தோசை வரகரிசி நீர்தோசை





மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க


ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி சர்க்கரை பொங்கல்
குதிரைவாலி சர்க்கரை
குதிரைவாலி பாயசம்
குதிரைவாலி பாயசம்

மற்ற வரகரிசி சமையல் குறிப்பிற்கு

வரகரிசி சமையல் குறிப்புகள்

சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

சிறுதானிய சமையல்



Monday, November 2, 2015

Kuthiraivaali-Neer-Dosai

#குதிரைவாலிநீர்தோசை : #குதிரைவாலிஅரிசி அல்லது சுருக்கமாக #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இதனை ஆங்கிலத்தில் Barnyard millet என அழைக்கப் படுகிறது.
எல்லா சிறு தானியங்களும் பசை தன்மை அற்றது. மேலும் உண்டதும் அமிலத்தன்மையை உருவாக்குவது இல்லை. நார் சத்து மிக அதிக அளவில் குதிரைவாலியில் நிறைந்துள்ளது. இதன் பயனை அடைய அரிசி மற்றும் கோதுமையை தவிர இத்தகைய சிறு தானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
இங்கு குதிரைவாலியை உபயோகப்படுத்தி ஒரு அருமையான தோசை செய்யும் முறையை காண்போம்.

குதிரைவாலிநீர்தோசை

தேவையான பொருட்கள் :
2 கப்குதிரைவாலி அரிசி [ Barnyard millet ]
1/2 கப்தேங்காய் துருவல்
2 Tspஉப்பு
1 Tspசர்க்கரை
தோசை சுட்டெடுப்பதற்கு தேவையான நல்லெண்ணெய்.

செய்முறை :
குதிரைவாலி அரிசியை இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி மற்றும் தேங்காயை நன்கு மைய அரைத்தெடுக்கவும்.
மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவையும் கழுவி மாவுடன் சேர்க்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
மாவு நன்கு நீர்க்க இருக்க வேண்டும்.
அப்போதுதான் மெல்லிய தோசையாக சுட முடியும்.

இந்த மாவை புளிக்க வைக்க தேவை இல்லை.
உடனேயே தோசை சுடலாம்.

அடுப்பில் தோசைகல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி தோசைகல்லின் வெளி ஓரத்தில் இருந்து நடு வரை மாவை வட்டமாக ஊற்றவும். 

தோசையின் மேலும் விளிம்புகளை சுற்றியும் எண்ணெய் சொட்டு சொட்டாக விடவும்.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்களும் நடுவேயும் சிவக்க ஆரம்பிக்கும்.
தோசை வெந்து விட்டது என கொள்ளலாம்.
மென்மையாக தோசை திருப்பியால் தோசையின் மேல் தெளிக்கப்பட்ட எண்ணெயை பரப்பி விடவும்.
இவ்வாறு செய்வதால் தோசை காய்ந்து போகாமல் இருக்கும்.

இந்த தோசை ஒரு பக்கம் வெந்தால் போதுமானது.
திருப்பிப் போட தேவையில்லை.

தோசையை எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதேபோல தோசையை ஒவ்வொன்றாக சுட்டெடுக்கவும்.

சுவையான மென்மையான குதிரைவாலி நீர் தோசை தயார்.
காரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி சாம்பார் அல்லது தக்காளி சட்னி  யுடன்  சுவைக்கவும்.
barnyard millet neer dosai
barnyard millet neer dosai குதிரைவாலி நீர் தோசை



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :

ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை தோசை
கொடி பசலை தோசை
குதிரைவாலி சர்க்கரை பொங்கல்
குதிரைவாலி சர்க்கரை
குதிரைவாலி பாயசம்
குதிரைவாலி பாயசம்

குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

குதிரைவாலி சமையல்



சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

சிறுதானிய சமையல்