Search This Blog

Friday, February 3, 2017

Coriander-Tomato-Chutney

#கொத்தமல்லிதக்காளிசட்னி : பச்சை #கொத்தமல்லி  உபயோகப்படுத்தும் போது இலைகளை மட்டும் பயன்படுத்தி விட்டு தண்டை குப்பையில் எறிந்து விடுகிறோம். தண்டும் சாப்பிடக்கூடிய பொருள் ஆகும். அதனை ரசம் மற்றும் இதர மசாலா குழம்புகள் செய்யும் பொது வாசனைக்காக தூவ பயன் படுத்தலாம். மேலும் சட்னி அரைக்கும் போது வேர் பகுதி நீங்கலாக தண்டு பகுதியை நன்கு கழுவிய பின்னர் பயன் படுத்தலாம். இதனால் பச்சைக் கொத்தமல்லியின் முழு மருத்துவ பயன்களும் நமக்கு கிட்டும். இங்கு கொத்தமல்லி கொண்டு ஒரு கார சட்னி செய்யும் விதத்தை காணலாம்.

coriander tomato chutney

தேவையானவை :
1 கப்கொத்தமல்லி தழை
2 மதிய தர அளவுநாட்டு தக்காளி
6 - 7பச்சை மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
12 - 15சின்ன வெங்காயம் தோலுரித்தது
2பூண்டு பற்கள்
1 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
3/4 Tspஉப்பு
1 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
பச்சை மிளகாய், வெங்காயம்  மற்றும் தக்காளியை வதக்க மைக்ரோ வேவ் பயன் படுத்தியுள்ளேன். மைக்ரோ வேவ் இல்லாதவர்கள் வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கலாம்.

மைக்ரோ வேவில் வைக்கக்கூடிய பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் பச்சைமிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று துளிகள் எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டியால் கலக்கி விடவும்.
தேக்கரண்டியை எடுத்து விட்டு பீங்கான் பாத்திரத்தை மைக்ரோ வேவின் உள்ளே வைத்து மைக்ரோ வேவ் ஹையில் 1 நிமிடம் சூடாக்கவும்.
வெளியே எடுத்து தக்காளியை துண்டுகளாக்கி சேர்க்கவும்.
கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலக்கி மறுபடியும் மைக்ரோ வேவ் ஹையில் 1 நிமிடம் அல்லது தக்காளி மிருதுவாகும் வரை வைத்து எடுக்கவும்.
பின்னர் வெளியில் எடுத்து வைத்து ஆற விடவும்.

ஆறிய பின்னர் மிக்சி பாத்திரத்தில் வதக்கிய மற்றும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு அரைத்தெடுக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சரி பார்க்கவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
காரசாரமான மயக்கும் கொத்தமல்லி வாசனையுடன் கூடிய சுவையான கொத்தமல்லி தக்காளி சட்னி தயார்.
இட்லி, தோசை, ஆப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு உகந்த சட்னி.
தயிர் சாதம் சாப்பிடும் போது தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

coriander tomato chutney

குறிப்பு :
விரும்பினால் வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி கடுகு தாளித்து கொட்டி சுவையேற்றலாம்.








மற்ற சட்னி வகைகள் சில
மாங்காய் சட்னி 1
மாங்காய் சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை சட்னி 1
வல்லாரை பருப்பு துவையல்
வல்லாரை பருப்பு...
துரை துவையல்
துரை துவையல்
வல்லாரை தேங்காய் சட்னி
வல்லாரை தேங்காய்..