#குதிரைவாலிகாய்கறிசாதம் : #குதிரைவாலி #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. மற்ற சிறுதானியங்களை போன்று குதிரைவாலியும் அமிலத்தன்மை அற்றது. மேலும் பசைத்தன்மையும் அறவே இல்லாதது.
குதிரைவாலியில் புரதம் மற்ற தானியங்களை காட்டிலும் அதிக அளவிலும் மேலும் எளிதில் செரிக்கக்கூடியதாகவும் உள்ளது.
நார்ச்சத்தும் இரும்பு சத்தும் அதிகமாக உள்ள சிறுதானியமாகும். இதன் glycemic index குறைவானதாக இருக்கிறது. அதனால் இரத்தத்தில் சேரும் குளுகோஸ் அளவும் குறைவாகவே இருக்கிறது.
இத்தகைய மருத்துவ பயன்களை அடங்கியுள்ள குதிரைவாலியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது மிகமிக அவசியமானது.
செய்முறை :
குதிரைவாலியை ஓரிரு முறை நன்கு கழுவிய பின்னர் 1 கப் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து 2/3 லிட்டர் குக்கரில் ஊறவைத்த தண்ணீருடன் குதிரைவாலியை இட்டு மூடி வெயிட் பொருத்தி மிக அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
குக்கரின் ஆவி அடங்கியபின் குக்கரை திறந்து ஒரு வாயகல பாத்திரத்தில் வெந்த குதிரைவாலியை கொட்டி 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு மின் விசிறியின் அடியில் உதிர் உதிராக வரும் வரை ஆற விடவும்.
அடுப்பின் மீது எண்ணெய் சட்டியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகத்தை போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து இரண்டாக பிளந்த பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு நறுக்கிய கேரட் மற்றும் பச்சை பட்டாணியை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து இடித்த மிளகு, உப்பு, நெய், மிளகு பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது தீயை அதிகமாக்கி ஆற வைத்துள்ள குதிரைவாலியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிடித்தமான குருமா/மசாலா குழம்பு டன் சுவைத்து மகிழவும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :
குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
குதிரைவாலி சமையல்
சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சிறுதானிய சமையல்

தேவையானவை | |
---|---|
1/2 கப் | குதிரைவாலி [ Barnyard millet ] |
1 Tsp | சீரகம் |
1/2 Tsp | மிளகு இடித்தது |
1 Tsp | மிளகு பொடி [ adjust ] |
1 big size | வெங்காயம், நறுக்கவும் |
1 or 2 | பச்சை மிளகாய் [ adjust ] |
10 - 15 | பூண்டு பற்கள், நறுக்கவும் |
2 - 3 Tbsp | பச்சை பட்டாணி |
1 | காரட், பொடியாக நறுக்கவும் |
1/2 Cup | கொத்தமல்லி தழை நறுக்கியது |
4 Tsp | நல்லெண்ணெய் [ Til/Sesame oil ] |
1 Tsp | நெய் [ optional ] |
1/2 Tsp | இஞ்சித் துண்டுகள் [ optional ] |
குதிரைவாலியை ஓரிரு முறை நன்கு கழுவிய பின்னர் 1 கப் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து 2/3 லிட்டர் குக்கரில் ஊறவைத்த தண்ணீருடன் குதிரைவாலியை இட்டு மூடி வெயிட் பொருத்தி மிக அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
குக்கரின் ஆவி அடங்கியபின் குக்கரை திறந்து ஒரு வாயகல பாத்திரத்தில் வெந்த குதிரைவாலியை கொட்டி 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு மின் விசிறியின் அடியில் உதிர் உதிராக வரும் வரை ஆற விடவும்.
அடுப்பின் மீது எண்ணெய் சட்டியை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் சீரகத்தை போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து இரண்டாக பிளந்த பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு நறுக்கிய கேரட் மற்றும் பச்சை பட்டாணியை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து இடித்த மிளகு, உப்பு, நெய், மிளகு பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது தீயை அதிகமாக்கி ஆற வைத்துள்ள குதிரைவாலியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிடித்தமான குருமா/மசாலா குழம்பு டன் சுவைத்து மகிழவும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க :
|
|
|
|
|
குதிரைவாலி சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
குதிரைவாலி சமையல்
சிறுதானிய சமையல் குறிப்புகளுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
சிறுதானிய சமையல்
No comments:
Post a Comment