#கள்ளாப்பம் : இந்த சிற்றுண்டி கேரளாவில் செய்யப்படும் ஒரு உணவாகும். இது ஆவியில் வேகவைத்தெடுக்கப்படும் ஆப்ப வகைகளுள் ஒன்றாகும். நம்மிடம் எப்போதும் கையிலிருக்கும் அரிசி மற்றும் தேங்காய் கொண்டு செய்யப்படும் மிகவும் எளிய வகை உணவு. செய்வதும் மிக மிக எளிது.
மாவை புளிக்க வைக்க வேண்டுமாதலால் முன் கூட்டியே திட்டமிடல் அவசியம்.
தேவையானவை :
2 cups பச்சரிசி
2/3 cup சாதம்
3/4 cup தேங்காய் துருவல்
1 Tbsp சர்க்கரை
1 Tsp உப்பு [ Adjust ]
1 Tbsp உலர்ந்த ஈஸ்ட் [ Dry yeast ]*
1 or 2 பதப்படுத்திய அத்தி, நறுக்கிக்கொள்ளவும்
அல்லது உலர் திராட்சை, உலர் பேரீச்சை போன்றவற்றையும் பயன் படுத்தலாம்.
*குறிப்பு : உலர்ந்த ஈஸ்ட் [ Dry yeast ] கிடைக்கவில்லையெனில் புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு வையும் உபயோகப்படுத்தலாம்.
செய்முறை :
மறுநாள் காலை உணவுக்கு முதல் நாள் மதியமே மாவு தயாரிக்க திட்டமிட வேண்டும்.
மதிய உணவு சமைக்கும் போது சிறிது கூடுதலாக அரிசி போட்டு சாதம் சமைக்கவும். சமைத்த சாதத்திலிருந்து 2/3 கப் சாதத்தை தனியே எடுத்து வைக்கவும்.
பச்சரிசியை ஒரு பாத்திரத்தில் இட்டு இரு முறை கழுவிய பின்னர் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டு மணிநேரம் ஊறிய பின்னர் மிக்சியில் ஊறிய அரிசி, சாதம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஈஸ்ட்டை சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து மாவுடன் சேர்க்கவும்.
[ ஈஸ்ட் இல்லையெனில் புளித்த இட்லி மாவு அல்லது தோசை மாவு சேர்த்துக்கொள்ளவும். ]
அத்துடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி மூடி வைக்கவும்.
ஆறு முதல் எட்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்கவிடவும்.
குறிப்பிட்ட நேரம் புளிக்க வைத்த மாவு நன்கு உப்பி வந்திருக்கும்.
அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
ஒரு ஆழமான தட்டை எடுத்து நல்லெண்ணெய் தடவி வைக்கவும்.
எண்ணெய் தடவிய தட்டில் பாதி அளவுக்கு மாவை ஊற்றி நிரப்பவும்.
மாவின் மீது உலர்ந்த அத்தி துண்டுகளை தூவி விடவும்.
இட்லி பானையினுள் வைத்து மூடி போட்டு ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சுத்தமான கத்தியை வெந்த ஆப்பத்தினுள் செருகி பார்க்கவும்.
கத்தியின் மீது மாவு ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.
அந்த தட்டை இட்லி பானையிலிருந்து வெளியில் எடுத்து வைத்து 5 நிமிடங்கள் ஆற விடவும்.
பிறகு ஒரு தேக்கரண்டியினால் ஓரத்தை சிறிது விலக்கி தட்டிலிருந்து எடுத்து பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
சுத்தமான கத்தி கொண்டு துண்டுகள் போடவும்.
தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் சுவைத்தால் அருமையாக இருக்கும்.
அல்லது அவரவர்க்கு பிரியமான கார சட்னி யுடன் சுவைக்கலாம்.
மேலும் சில சிற்றுண்டிகள் செய்து பார்த்து ருசிக்க :
மற்றும் பல சிற்றுண்டி வகைகளுக்கு
டிபன் வகைகள்

|
|
|
||||||
|
|
மற்றும் பல சிற்றுண்டி வகைகளுக்கு
டிபன் வகைகள்