#மசால்தோசை : ஹோட்டலுக்கு போனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி உண்ணுவது மசால் தோசையே!! நான் நினைக்கிறேன் இந்த ஒரு உணவு ஹோட்டலில் இருந்து வீட்டுக்கு வந்தது என்று. முறுவலாக தோசை ஊற்றி வெந்ததும் நடுவே உருளை கிழங்கு மசாலாவை வைத்து மூடி பரிமாறப்படுகிறது. தோசை மாவை முதல் நாளே அரைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த உணவை தயார் செய்ய முடியும். இங்கே முதலில் உருளை கிழங்கு மசாலா செய்வது என்று பார்ப்போம். அதன் பின் தோசை தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசைக்கு :
தோசை மாவு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.
உருளை கிழங்கு மசாலாவிற்கு :
உருளை கிழங்கு : 2
வெங்காயம் நடுத்தரம் : 1
பச்சை மிளகாய் : 2 ( அட்ஜஸ்ட் )
கருவேப்பிலை : 8
கொத்தமல்லி தழை நறுக்கியது : 1 Tbsp ( அதிகமாகவும் இருக்கலாம் )
காரட் வெட்டியது : 1 Tbsp ( வேண்டுமானால் )
குடை மிளகாய் நறுக்கியது : 1 Tbsp ( வேண்டுமானால் )
பச்சை பட்டாணி : 1 Tbsp ( கிடைத்தால் )
பசலை கீரை ( Spinach ) : 6 ( விருப்பப்பட்டால் )
சேர்க்க வேண்டிய பொடிகள் :
மஞ்சள் தூள் : 1/4 Tsp
சீரகத் தூள் : 1/4 Tsp
பெருங்காயத் தூள் : 2 சிட்டிகை
தாளிக்க :
கடுகு : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு : 1 Tsp
எண்ணெய் : 2 Tsp
மசாலா செய்முறை :
உருளை கிழங்கை மண் போக சுத்தமாக கழுவி நான்கு துண்டுகளாக்கவும்.
குக்கரில் உப்புடன் 3 விசில் வரும் வரை அதிக தீயிலும், பின் தீயை குறைத்து 5 நிமிடங்களும் வேக வைத்து ஆவி அடங்கியதும் வெளியே எடுக்கவும்.
தோலை உரித்து தனியாக வைக்கவும்.
மிதமான தீயில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
இப்போது பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயைசேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்து வெங்காயத்தை சேர்த்து லேசாக வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு மீதமுள்ள வெட்டிய காரட், குடை மிளகாய் மற்றும் பட்டாணியை சேர்த்து வதக்கவும்.
மஞ்சத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
உரித்து வைத்துள்ள உருளை கிழங்கை கையினால் ஒன்றிரண்டு துண்டுகளாக்கி சேர்க்கவும்.
ஒரு பிரட்டு பிரட்டி தேவையான உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
ஏழெட்டு நிமிடங்களுக்கு சிறிய தீயில் கொதிக்க விடவும்.
தண்ணீர் முழுவதுமாக வற்றக் கூடாது.
இந்த நிலையில் விருப்பப் பட்டால் பசலை கீரையை பொடியாக அறிந்து சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையை தூவவும்.
தோசை சுடும் முறை :
அடுப்பில் மிதமான தீயில் தோசை கல்லை வைத்து சின்ன சுத்தமான துணியினால் எண்ணெய் தடவவும்.
தோசை மாவை கல்லின் நடுவில் வைத்து கரண்டியின் அடி பாகத்தினால் தேய்த்து வட்டமாக தோசை ஊற்றவும்.
தோசையின் மேலும் சுற்றியும் எண்ணெய் விட்டு மூடியினால் மூடி சுமார் 1 1/2 நிமிடம் வேகவிடவும்.
ஓரம் சிவந்ததும் நடுவில் தயாரித்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து தோசையை இரண்டாக மடிக்கவும்.
ஆஹ்! சுவையான மசால் தோசை தயார்.
மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :
தொட்டுக்க சட்னி வகைகள்
இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.
மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

|
|
|
||||||

No comments:
Post a Comment