#முடக்கத்தான்கீரைதோசை : #முடக்கத்தான்கீரை வேலி ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் மழை முடிந்தபின் தழைத்து வளர்ந்திருப்பதை காணலாம். இது ஒரு கொடி ஆகும். வெகு விரைவில் அடர்ந்து வளரக்கொடியது.
இது முடக்கு வாதம் தீர்க்கும் குணம் உள்ளது.
இந்த கீரையின் சாறு சுரத்தை குறைக்கவல்லது.
இத்தகைய அருமையான கீரையை உபயோகித்து ஒரு சுவையான தோசை செய்வது எப்படி என காணலாம்.
தேவையான அளவு எண்ணெய் தோசை சுட்டெடுக்க.
செய்முறை :
தோசைகல்லை அடுப்பின்மேல் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கல்லின் மேல் எண்ணெய் தடவி விடவும்.
கல் போதுமான சூடானதும் மாவை நடுவில் ஊற்றி கரண்டியால் வட்டமாக பரப்பி விடவும்.
தோசையின் மேலே வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை தூவி எண்ணெயை சொட்டு சொட்டாக தோசையின் மேல் விட்டு மூடியால் மூடி ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
பின்னர் மூடியை எடுத்து விட்டு தோசையை திருப்பி போடவும்.
தோசையை திருப்பி போட்ட பின் மூடியால் மூடத் தேவையில்லை.
இரண்டு புறமும் நன்றாக வெந்த பின்னர் பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு தோசையாக சுட்டெடுக்கவும்.
காரமான சட்னி யுடன் சுவைக்கவும்.
மேலும் சில சமையல் குறிப்புகள்
இது முடக்கு வாதம் தீர்க்கும் குணம் உள்ளது.
இந்த கீரையின் சாறு சுரத்தை குறைக்கவல்லது.
இத்தகைய அருமையான கீரையை உபயோகித்து ஒரு சுவையான தோசை செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள் : | |
---|---|
மாவிற்கு : | |
1 Cup | பச்சரிசி |
1 Cup | இட்லி அரிசி [ Boiled Rice ] |
1 Tbsp | உளுத்தம் பருப்பு [ Urad dhal ] |
1/2 Tsp | வெந்தயம் |
2 Tsp | உப்பு |
1 Cup | முடக்கத்தான் கீரை [ Balloon Vine leaf ] |
தாளிக்க : | |
1/2 Tsp | கடுகு |
1 Tsp | சீரகம் |
1 Tsp | எண்ணெய் |
1 or 2 | சிகப்பு மிளகாய் |
வெட்டி வைக்க : | |
1 or 2 | வெங்காயம் |
10 | கறுவேப்பிலை |
செய்முறை :
முடக்கத்தான் கீரை மற்றும் உப்பு தவிர மாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவிய பின் ஊறவைக்கவும், சுமார் 3 மணி நேரம் ஊற விடவும்.
மூன்று மணி நேரம் கழித்து மாவரைக்கும் இயந்திரத்தில் நன்கு மைய அரைக்கவும்.
உப்பு சேர்த்து கையினால் கலக்கி 6 முதல் 8 மணி நேரம் புளிக்க விடவும்.
முடக்கத்தான் கீரையை கழுவிய பின்னர் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை புளித்த மாவில் சேர்த்து கலக்கவும்.
மாவை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பின் சீரகம் சேர்த்து மிளகாயை கிள்ளி போட்டு கருவேப்பிலையை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
தாளித்ததை மாவில் கொட்டி கலக்கவும்.
தோசைகல்லை அடுப்பின்மேல் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கல்லின் மேல் எண்ணெய் தடவி விடவும்.
கல் போதுமான சூடானதும் மாவை நடுவில் ஊற்றி கரண்டியால் வட்டமாக பரப்பி விடவும்.
தோசையின் மேலே வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை தூவி எண்ணெயை சொட்டு சொட்டாக தோசையின் மேல் விட்டு மூடியால் மூடி ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
பின்னர் மூடியை எடுத்து விட்டு தோசையை திருப்பி போடவும்.
தோசையை திருப்பி போட்ட பின் மூடியால் மூடத் தேவையில்லை.
இரண்டு புறமும் நன்றாக வெந்த பின்னர் பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொரு தோசையாக சுட்டெடுக்கவும்.
காரமான சட்னி யுடன் சுவைக்கவும்.
மேலும் சில சமையல் குறிப்புகள்
No comments:
Post a Comment