சமையல் பொடிகள் :
நமது அன்றாட சமையலுக்குப் பல விதமான பொடிகள் தேவை. கடைகளில் விதவிதமான பொடிகள் வெவ்வேறு பெயர்களில் கிடைக்கின்றன. கடைகளில் நமக்கு சமையலுக்கு தேவையான பொடிகள் இலகுவாக கிடைத்தாலும் நாமே அவற்றை சுகாதாரமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
நமது தமிழகத்து சமையலுக்கு மிக அத்தியாவசியமான பொடிகள் சாம்பார் மிளகாய் தூள் [ சாம்பார் பொடி ] மற்றும் ரசம் செய்ய பொடி [ ரசப்பொடி ]. இவை இரண்டைத்தவிர முக்கியமான பொடி வேறொன்றும் உள்ளது. அதுதான் இட்லி மிளகாய் பொடி.
இவற்றைத் தவிர சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட, சமையலுக்கு மணமூட்ட கரம் மசாலா பொடி, மற்றொரு வகையான குழம்பு செய்ய பொடி போன்ற பல விதமான பொடிகளை வீட்டிலேயே தயாரித்து பத்திரப்படுத்தினால் நமது சமையலின் சுவையும் மணமும் மிக மிக அருமையாக இருக்கும்.
சில பொடிகள் செய்யும் முறையை இவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். அவற்றின் இணைப்புகளை இங்கே கொடுத்திருக்கிறேன்.
விதவிதமான சமையல் செய்முறைகளின் தொகுப்பு
No comments:
Post a Comment